இடம் : லக்காபுரம், குமாரபாளையம், ஈரோடு- 638002.
மாவட்டம் : ஈரோடு
மறைமாவட்டம் : கோவை
மறைவட்டம் : ஈரோடு
நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய திரு இருதய ஆண்டவர் ஆலயம், இரயில்வே காலனி, ஈரோடு- 638002.
பங்குத்தந்தை : அருட்பணி. ஆரோக்கிய யூதா ததேயுஸ்
குடும்பங்கள் : 50
அன்பியங்கள் : 3
ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு
வியாழன் காலை 11.00 மணிக்கு நவநாள், திருப்பலி, வேண்டுதல் தேர்பவனி, குணமளிக்கும் நற்கருணை ஆசீர்வாதம்.
திருவிழா : ஜனவரி மாதம் மூன்றாவது ஞாயிறு.
வழித்தடம் :
ஈரோடு- சோலார்- கொள்ளுக்காட்டு மேடு (கரூர் பைபாஸ் சாலை வழியாக)- குமாரபாளையம் 4 ரோடு (மொடக்குறிச்சி சாலை).
ஈரோடு பேருந்து நிலையம்- ஈரோடு டவுன்- ஸ்டேட் பேங்க் நிறுத்தத்திலிருந்து வெங்கடேஷ்வரா மினி பேருந்து வசதி உள்ளது. காலை 10.20 மணிக்கு புறப்படும்.
ஈரோடு டவுன்- பன்னீர் செல்வம் பார்க் நிறுத்தத்திலிருந்து லாவண்யா மினி பேருந்து வசதி காலை 09.00 மணிக்கு புறப்படும்.
Location map : https://maps.google.com/?cid=16959369581576397266
வரலாறு :
லக்காபுரம் ஆலயமானது இரயில்வே காலனி பங்கின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இரயில்வே காலனியில் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. அமல்ராஜ் அடிகளாரின் முயற்சியால் லக்காபுரத்தில் அற்புத குழந்தை இயேசுவை பாதுகாவலாகக் கொண்டு ஓர் ஆலயம் கட்டப்பட்டு, 26.01.2013 அன்று கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு. லெ. தாமஸ் அக்குவினாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
அற்புத குழந்தை இயேசு ஆலயம் கட்ட நிலம் வாங்கி கொடுத்தவர் திருமதி. குருஸ்மேரி அம்மாள் ஆவார்.
அன்றைய பங்குத்தந்தை அருட்பணி. அமல்ராஜ் அவர்களின் முயற்சியால் வாரந்தோறும் வியாழன் அன்று காலை 11.00 மணிக்கு அற்புத குழந்தை இயேசுவிற்கு செபமாலை, திருப்பலி, நவநாள் பக்தி முயற்சிகள் தொடங்கி இன்றுவரையிலும் 400 -வது வாரத்தை கடந்து செல்கின்றது லக்காபுரம் இறைசமூகம்.
சிறப்பு : இவ்வாலயத்திற்கு திருயாத்திரையாக அதிக அளவில் இறைமக்கள் வருகை தருகிறார்கள். ஆகவே திருயாத்திரை வருகிறவர்கள், முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
அற்புத குழந்தை இயேசுவின் ஆலயத்திற்கு வாருங்கள் அளவில்லாத ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்லுங்கள்.
விண்ணப்பம், நன்றியறிதல் படிவங்கள், அற்புத குழந்தை இயேசுவின் நவநாள் மற்றும் நவமணி செப அட்டைகள் இறைமக்களின் பயன்பாட்டிற்காக உள்ளது.
தொடர்பு எண்கள் : 0424 2282880 9597688523
தகவல்கள் : பங்குத்தந்தை அருள்பணி. ஆரோக்கிய யூதா ததேயுஸ் அவர்கள்.
புகைப்படங்கள் : SPB காலனி பங்கின் பீடச் சிறுவன்.