759 புனித பாத்திமா அன்னை திருத்தலம், கிருஷ்ணகிரி

           

புனித பாத்திமா அன்னை திருத்தலம்

கிருஷ்ணகிரி, பெங்களூரு சாலை, கிருஷ்ணகிரி -635001

மாவட்டம்: கிருஷ்ணகிரி

மறைமாவட்டம்: தருமபுரி

மறைவட்டம்: கிருஷ்ணகிரி

தொடர்புக்கு: 04343 - 236836

Website: http://www.fathimashrine.com

நிலை: பங்குத்தளம் (திருத்தலம்)

கிளைப்பங்குகள்

1. புனித லயோலா இஞ்ஞாசியார் ஆலயம், பழையபேட்டை

2. புனித சூசையப்பர் ஆலயம், பெரிய ஏறிகொடி

3. இருதய ஆண்டவர் ஆலயம், வி.மாதேப்பள்ளி

பங்குத்தந்தை: அருட்பணி. இசையாஸ்

உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. வில்லியம் சார்லஸ்

குடும்பங்கள்: 850

அன்பியங்கள்: 25

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 06.00 மணி 08.00 மணி மாலை 06.30 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 06.00 மணி

வியாழன், வெள்ளி, சனி திருப்பலி காலை 06.00 மணி மற்றும் மாலை 06.30 மணி

திருவிழா: அக்டோபர் 13-ம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. S. இருதய நாதன், தருமபுரி மறைமாவட்டம்

2. அருட்பணி. செல்வம், சேலம் மறைமாவட்டம்

3. அருட்பணி. S. பிரான்சிஸ் சேவியர், சேலம் மறைமாவட்டம்

4. அருட்பணி. A. ரொசாரியோ, தருமபுரி மறைமாவட்டம்

5. அருட்பணி. A. மரிய அம்புரோஸ், SDB

6. அருட்பணி. G. ஆரோக்கிய ராஜ், SDB

7. அருட்பணி. A. மரிய சார்லஸ், SDB

8. அருட்பணி. A. மரிய ஆரோக்கிய ராஜ், SDB

9. அருட்பணி. A. பிரிட்டோ, OFM Cap

10. அருட்பணி. M. அந்தோணி தாஸ், OFM Cap

11. அருட்பணி. D. சைமன், SDB

12. அருட்பணி. A. ஆல்பர்ட் ஜோசப், தருமபுரி மறைமாவட்டம்

13. அருட்பணி. S. டேனியல் அம்புரோஸ், SDB

14. அருட்பணி. A. சார்லஸ் யேசுதாஸ், வேலூர் மறைமாவட்டம்

15. அருட்பணி. A. ஜான் ரிச்சர்டு, SDB

16. அருட்பணி. M. ராய் பிரசாத் மோசஸ், பெங்களூர் மறைமாவட்டம்

17. அருட்பணி. A.  போஸ்கோ, SDB

18. அருட்பணி. M. ஜூடு, MMI

19. அருட்பணி. G. வினோத், SDB

20. அருட்பணி. S. ஜான்போர்க், SDB

21. அருட்பணி. X. தாமஸ் ஆண்ட்ரூஸ் ஜான், SAC

22. அருட்பணி. A. சின்னப்பன், தருமபுரி மறைமாவட்டம்

23. அருட்பணி. A. சிரில் பவுல் ராஜ், தருமபுரி மறைமாவட்டம்

மற்றும் பல அருட்சகோதரிகள்.

Location map:Google map : https://maps.app.goo.gl/XRSCiTUiQy7uWoft7

வரலாறு:

இந்த திருச்சபையின் வரலாற்றை அறிய, இதற்கு முன்பு கிருஷ்ணகிரி பங்கு ஆலயமாக செயல்பட்டிருந்த புனித இஞ்ஞாசியார் ஆலயம் பற்றி நாம் அறிய வேண்டும்.

புனித இஞ்ஞாசியார் ஆலயம்:

ஆங்கிலேயர் காலத்தில் கிருஷ்ணகிரி பகுதி பாரமஹால் என்றழைக்கப்பட்டது. பாரமஹால் என்பது பன்னிரெண்டு கோட்டைகள் கொண்ட பகுதி. திப்பு சுல்தானிடமிருந்து பாரமஹால் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றிய பிறகு 1765-ஆம் ஆண்டிலிருந்து கிறிஸ்தவர்கள் எலத்தகிரி - வெண்ணம்பள்ளி பகுதியிலிருந்து கிருஷ்ணகிரியில் குடியேறினர். ஆங்கிலப்படையில் இருந்த கிறிஸ்தவர்களுக்காக, படைவீரர்கள் கி.பி. 1792-ஆம் ஆண்டு ஒரு சிற்றாலயத்தை புனித லொயலா இஞ்ஞாசியார் பெயரில் அமைத்தனர். 

பாரீஸ் மறைப்பணி சபையினர் மறைப்பணி பொறுப்பை தமிழகத்தில் ஏற்றுக்கொண்ட பின்னர் அருள்தந்தை அபே தூபுவா கிருஷ்ணகிரி, எலத்தகிரி கிறிஸ்தவர்களை சந்தித்தார். 1832 ஆம் ஆண்டு ஆங்கிலேய இராணுவம் கிருஷ்ணகிரியிலிருந்து வெளியேறியது. பின்னர் கிறிஸ்தவர்கள் அவ்விடத்தில் இரண்டாவது ஆலயத்தை அமைத்தனர். 1883 ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரியில் 50 அல்லது 60 கிறிஸ்தவர்கள் இருந்தனர் என்று சேலம் மேற்றிராசன சரித்திர சுருக்கம் என்ற நூலில் காணப்படுகிறது. 1857-ஆம் ஆண்டிலிருந்து கிருஷ்ணகிரி பகுதி திருப்பத்தூர் - வேல்லூர் மறைப்பணியாளரின் பொறுப்பில் இருந்தது. எலத்தகிரி பங்கு உருவாக்கப்பட்டபோது, கிருஷ்ணகிரி அதன் கிளைப்பங்கானது. 1925-ஆம் ஆண்டு எலத்தகிரி பங்குத்தந்தையான அருள்திரு. தோமினிக் அடிகளார் பழைய ஆலயம் இருந்த இடத்தில் மூன்றாவது ஆலயத்தை கட்டியெழுப்பினார். 14.07.1925 அன்று அவ்வாலயம் புனிதப்படுத்தப்பட்டது.

1930-ஆம் ஆண்டு சேலம் மறைமாவட்டம் உருவானபோது, கும்பகோணம் மறைமாவட்டத்தில் பணியாற்றிய பாரிஸ் மறைப்பரப்பு சபை குருவான அருள்திரு. கபிரியேல் பிளேயுஸ்ட், சேலம் மறைமாவட்டத்தில் இணைந்தார். அவர் கிருஷ்ணகிரி பழையபேட்டையில் தங்கி கிருஷ்ணகிரி மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றி வந்தார். அப்போது அருட்தந்தை கபிரியேல் பிளேயுஸ்ட் அவர்கள் இப்போது பெங்களூர் சாலையில் இருபுறமும் இருக்கும் (பாத்திமா அன்னை ஆலயம், பள்ளி, மருத்துவமனை அமைந்துள்ள இடம்) நிலத்தினை வாங்கினார். 12.1.1933-இல் அருள்தந்தை கபிரியேல் பிளேயுஸ்ட் இறைவனடி சேர்ந்தார். அவரது விருப்பப்படியே அவர் கும்பகோணம் மறைமாவட்டம் அய்யம்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டார்.

சேலம் மறைமாவட்ட ஆயரின் அழைப்பை ஏற்று 1934-ஆம் ஆண்டு நவம்பர் 29-இல் மரியாயின் பிரான்சிஸ்கு ஊழியர் சபை சகோதரிகள் பழையபேட்டை ஆலய வளாகத்தில் தங்கி தங்கள் பணியை தொடங்கினர்.

பங்கு ஆலயம் பாத்திமா அன்னை ஆலயத்திற்கு மாற்றப்படும் வரை (1972 வரை) பழையபேட்டை புனித இஞ்ஞாசியார் ஆலயம் பங்கு ஆலயமாக திகழ்ந்தது.

பின்னர் பழுதடைந்திருந்த ஆலயம் அருள்திரு. மதலைமுத்து அடிகளாரின் முயற்சியாலும், திரு. சின்னப்ப முதலியார் குடும்பத்தினர் உதவியாலும் 2008-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.

பின்னர் அருள்தந்தை தேவசகாயம் அடிகளாரின் முயற்சியால் ஆலயம் சீரமைக்கப்பட்டது. சிலுவை வடிவ ஆலயம் மாற்றப்பட்டு ஒரே சாலையாக அமைகப்பட்டது. சீரமைத்தது புதுப்பிக்கப்பட்ட ஆலயம் 13.08.2017 அன்று தருமபுரி ஆயரால் புனிதப்படுத்தப்பட்டது.

தற்போது பழையபேட்டை புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாலை 06.30 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது.

பாத்திமா அன்னை ஆலயம்:

1930-1933 வரை பழையபேட்டையில் தங்கி பணியாற்றிய அருள்திரு. கபிரியேல் பிளேயுஸ்ட் அவர்கள் பெங்களூர் சாலையில் 3.04 ஏக்கர் நிலத்தை 1931-ஆம் ஆண்டில் திரு. இராயப்ப முதலியாரிடமிருந்து வாங்கினார். 1936 - 1946 வரை இருந்த பங்குத்தந்தையாக அருள்திரு. வாஷோன் புதிய நிலத்தில் குருக்கள் இல்லத்தைக் கட்டினார். பின்னர் 1951 - 1964 வரை பங்குத்தந்தையாக இருந்தவர் அருள்திரு குழந்தைநாதர். கிருஷ்ணகிரியில் இறைமக்களின் எண்ணிக்கை பெருகி வருவதை உணர்ந்து புதிய ஆலயம் கட்ட திட்டமிட்டார். சேலம் ஆயர் மேதகு வெண்மணி செல்வநாதர் 03.05.1958 அன்று புதிய ஆலயத்திற்கான கட்டிடப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் தூத்துக்குடியை சேர்ந்த நடிகர் சந்திரபாபு பங்கேற்றார். 11.07.1963 இல் அருள்தந்தை குழந்தைநாதர் திடீரென இறைவனடி சேர்ந்தார். தொடர்ந்து பொறுப்பேற்ற அருள்திரு. ஐசக் அடிகளார் பாத்திமா அன்னை ஆலயத்தை கட்டிமுடித்தார்.

21.11.1972 அன்று சேலம் ஆயரால் பாத்திமா அன்னை ஆலயம் புனிதப்படுத்தப்பட்டது. பாத்திமா அன்னை ஆலயத்தை மறைமாவட்ட திருத்தலமாக 07.10.2000 அன்று தருமபுரி ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்கள் நிலை உயர்த்தினார்.

ஆலயமானது புதுப்பொலிவுடன் விரிவாக்கப்பட்டு, அழகுற பீடமும் அமைக்கப்பட்டு மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் 21.05.2023 அன்று புனிதப்படுத்தப்பட்டது. 

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மரியாயின் சேனை (ஆண்கள் & பெண்கள்)

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை

3. மறைக்கல்வி மன்றம்

4. செபக்குழு

5. பாத்திமா அன்னை திருவழிபாட்டுக் குழு

6. புனித பவுல் இளையோர் இயக்கம்

7. பீடப்பூக்கள் இயக்கம்

8. பாத்திமா மலர் குழு

9. பாத்திமா அன்னை ஆசிரியர் குழுமம்

10. பாத்திமா அன்னை பொறியியலாளர் குழுமம்

11. பாத்திமா அன்னை தொழில் முனைவோர் குழுமம்

12. பாத்திமா அன்னை சமூகக் கூடம் குழு

13. பாத்திமா அன்னை கல்லறைக் குழு

கன்னியர்கள் இல்லம்:

FSM (St.Claire's Convent)

FIHM (Blue Sisters Convent)

மருத்துவமனை:

 St. Louis Hospital (FSM)

கல்வி நிறுவனங்கள்:

R. C Fathima Boy's High school

St. Ann's Girls Higher Secondary school (FSM Sisters)

St. Ann's Nursary and Primary school (FSM Sisters)

Don Bosco higher secondary school

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்திரு. கபிரியேல் பிளேயுஸ்ட் (1930 -1932)

2. அருட்திரு. புலியார்டு (பொறுப்பு) (1933 -1934)

3. அருட்திரு. ஹாரோ (1935 -1936)

4. அருட்திரு. வாஷோன் (1936 -1946)

5. அருட்திரு. வர்கீஸ் (1946 -1948)

6. அருட்திரு. மஷோல் (1949 -1951)

7. அருட்திரு. குழந்தைநாதர் (1951-1964)

8. அருட்திரு. ஈசாக் (1964 -1975)

9. அருட்திரு. இருதயநாதன் (1975-1977)

10. அருட்திரு. ஞானபிரகாசம்  (1978 -1984)

11. அருட்திரு. ஜெகராஜ் (1984 -1986)

12. அருட்திரு. ஜோசப் (1986 -1989)

13. அருட்திரு. பீட்டர் கரியத்தரா (1989 -1994)

14. அருட்திரு. சேவியர் (1994 -2001)

15. அருட்திரு. ஜெகராஜ் (2001-2006)

16. அருட்திரு. மதலைமுத்து (2006 -2012)

17. அருட்திரு. தேவசகாயம் (2012 -2017)

18. அருட்திரு. சூசைராஜ் (2017 -2020)

19. அருட்திரு. இசையாஸ் (2020 முதல்...)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய இணையத்தள பொறுப்பாளர் திரு. ஏசுதாஸ்