835 புனித சூசையப்பர் ஆலயம், கைலாசபுரம்

       

தொழிலாளரான புனித சூசையப்பர் ஆலயம்

இடம்: கைலாசபுரம், துவாக்குடிமலை, திருச்சி -22

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைமாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைவட்டம்: பொன்மலை 

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித சவேரியார் ஆலயம், வாழவந்தான்கோட்டை, புது பர்மா காலனி

2. புனித அந்தோனியார் ஆலயம், பெரியார்நகர்

3. புனித சந்தியாகப்பர் ஆலயம், பொய்கைக்குடி

4. புனித சவேரியார் ஆலயம், அசூர்

5. புனித சந்தியாகப்பர் ஆலயம், தூவாக்குடி

6. புனித லூர்து மாதா ஆலயம், இந்திராநகர்

7. புனித வனத்து அந்தோனியார் ஆலயம், பாரதிபுரம் -திருவரம்பூர்

8. புனித அந்தோனியார் ஆலயம், நவல்பட்டு -புதுத்தெரு

9. புனித சகாய மாதா ஆலயம், குமரேசபுரம்

10. புனித அடைக்கலம் அன்னை ஆலயம், கூத்தப்பார்

11. புனித யூதா ததேயு ஆலயம், C. செக்டார்

12. குழந்தை இயேசு ஆலயம், எழில் நகர்

13. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், திருவரம்பூர்

14. ஆனந்தநகர்

15. தேனேரிப்பட்டி

பங்குத்தந்தை அருட்பணி. ஜெரோம் ஞான பிரபு

குடும்பங்கள்: 1700 (கிளைப்பங்குகள் சேர்த்து)

அன்பியங்கள்: 60 (கிளைப்பங்குகள் சேர்த்து)

ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணி மற்றும் மாலை 06:15 மணி

திங்கள், செவ்வாய், வியாழன் திருப்பலி காலை 06:15 மணி

புதன் மாலை 06:15 மணி புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி

வெள்ளி, சனி திருப்பலி மாலை 06:15 மணி

திருவிழா: ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து மே மாதம் 01 ஆம் தேதி திருவிழா.

வரலாறு:

அறிமுகம்:

பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) 1963 ஆம் ஆண்டில் திருச்சி மாநகரில் தொடங்கப்பட்ட போது, பணியின் நிமித்தம் காரணமாக கைலாசபுரம் பகுதியில் குடியேறிய கிறிஸ்தவ மக்களின் ஆன்மீக நலனிலும், அனைத்து மக்களின் சமூக நலனிலும் தனிக்கவனம் செலுத்திய, அன்றைய ஆயர் மேதகு ஜேம்ஸ் மெண்டோன்சா ஆண்டகை அவர்கள், அய்யம்பட்டி பங்கில் இருந்து கைலாசபுரம் பங்கை ஏற்படுத்தினார். இப்பகுதியில் வாழ்ந்த, வாழுகின்ற அமைப்பு சார்ந்த மற்றும் சாரா தொழிலாளர்களின் நலன்களையும் வளங்களையும் கருத்தில் கொண்டு, இப்பங்கானது, தொழிலாளரான புனித சூசையப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

பங்கின் வரலாற்றுப் படிகள்:

01.05.1967: முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. R. V. மத்தியாஸ் அவர்கள் பணிப் பொறுப்பேற்றார்.

17.09.1967: கைலாசபுரம் பங்கு ஆலயத்திற்கு மேதகு ஆயர் ஜேம்ஸ் மென்டோன்சா அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

02.02.1969: ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு மேதகு ஆயர் ஜேம்ஸ் மென்டோன்சா அவர்களால் புனிதம் செய்யப்பட்டது.

15.05.1969: பங்கின் முதல் திருவிழா கொண்டாடப் பட்டது.

03.03.1970: அன்று கைலாசபுரம் புனித சூசையப்பர் ஆலயம் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது.

26.01.1973: புனித அடைக்கல அன்னை சபை கன்னியர் இல்லத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

11.02.1975: புனித லூர்து அன்னை கெபி கட்டப்பட்டது.

19.03.1975: ஆலய வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டது.

ஜூன் 1975: ஆலய மணிக்கூண்டு கட்டப் பட்டது.

21.08.1978: கன்னியர் இல்லம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

15.09.1978: OFT பகுதியில் ஆலயம் கட்ட இடம் அளிக்க, OFT நிர்வாகத்தை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன.

24.01.1982: முதல் பங்குப் பேரவை அமைக்கப்பட்டது.

14.08.1983: OFT பகுதியில் அன்னை வேளாங்கண்ணி ஆலயம் கட்டப்பட்டு புனிதம் செய்யப்பட்டது.

10.06.1985: கைலாசபுரம் பங்கின் கீழ் இருந்த, OFT தனிப் பங்காக உயர்த்தப்பட்டது.

05.10.1988: ஆலய வளாகத்தில் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டது.

05.07.1990: ஆலய வளாகத்தில் கடைகள் அமைக்க அஸ்திவாரம் போடப்பட்டது.

02.02.1993: பங்கின் 25-வது ஆண்டு வெள்ளிவிழா துவக்கப் பட்டது.

03.02.1993: குருக்கள் இல்லம் புதிதாக கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

01.02.1994: 60 அடி உயரம் கொண்ட கொடிமரம் அமைக்கப்பட்டது.

12.02.1994: பங்கின் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டு, வெள்ளிவிழா மலர் வெளியிடப்பட்டது.

மே 1994: குருக்கள் இல்லம் கட்டி முடிக்கப்பட்டது.

25.06.2005: சிலுவைப்பாதைக்கான 14 நிலைகள் கட்டி முடிக்கப்பட்டு புனிதம் செய்யப்பட்டது.

01.05.2007: பங்கின் 40 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

31.05.2007: புனித லூர்து அன்னை கெபி புதுப்பிக்கப்பட்டது.

ஜூலை 2012: ஆலய நுழைவாயில் கட்டி முடிக்கப்பட்டது.

27.09.2015: 7200 சதுர அடி பரப்பளவுள்ள "இறைவார்த்தை கூடாரம்" கட்டி முடிக்கப்பட்டு, திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனி டிவோட்டா அவர்களால் புனிதம் செய்யப்பட்டது.

மார்ச் 2016: நுழைவாயில் முதல் ஆலயம் வரையிலும், இறைவார்த்தை கூடாரத்திற்குச் செல்லும் வழியிலும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

மே 2016: புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டது.

16.10.2016: பங்கின் பொன்விழா ஓராண்டு கொண்டாட்டங்கள், மேதகு ஆயர் அந்தோனி டிவோட்டா அவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது. 

20.05.2017: புதிய மணிக்கூண்டு கோபுரம் கட்ட மேதகு ஆயர் அந்தோனி டிவோட்டா அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

06, 07, 08 அக்டோபர் 2017: கைலாசபுரம் பங்கின் பொன்விழா மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப் பட்டது. மேதகு திண்டுக்கல் ஆயர் P. தாமஸ் பால்சாமி, மேதகு பாளையங்கோட்டை ஆயர் ஜூட் பால்ராஜ், மேதகு திருச்சி ஆயர் அந்தோனி டிவோட்டா ஆகியோர் தலைமையில் விழா நடைபெற்றது. 08.10.2017 அன்று பொன்விழா மலர் மேதகு ஆயர் அந்தோனி டிவோட்டா அவர்களால் வெளியிடப்பட்டது.

C. செக்டார் புனித யூதா ததேயு ஆலயம்:

பாரத மிகு மின் நிறுவன செயலாண்மை இயக்குநர் திரு. M. K. ஸ்ரீதர் அவர்கள் தலைமையில், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சீனிவாசன் அவர்களால் புனித யூதா ததேயுவின் ஆலயத்திற்கு 29.04.1981 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

28.10.1981 அன்று முதன் முதலாக புனித யூதா ததேயு ஆலயத்தில் திருவிழா கொண்டாடப் பட்டது.

ஆலயமானது கட்டி முடிக்கப்பட்டு, மேதகு ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் 01.05.1998 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

புனித யூதா ததேயு ஆலய புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டு, கிரானைட் தரை அமைக்கப்பட்டு, 01.10.2017 அன்று மேதகு ஆயர் அந்தோனி டிவோட்டா அவர்களால் புனிதம் செய்யப்பட்டது.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. கத்தோலிக்க சங்கம்

2. கிறிஸ்துவ தொழிலாளர் இயக்கம்

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை

4. பெண்கள் பணிக்குழு

5. திருஇருதய சபை

6. மரியாயின் சேனை

7. புனித செசிலியா பாடற்குழு

8. மறைக்கல்வி 

9. வழிபாட்டுக் குழு

10. இளைஞர் இயக்கம்

11. இளம் பெண்கள் இயக்கம்

12. பங்குப் பேரவை

13. அருங்கொடை இயக்கம்

பங்கில் உள்ள துறவற சபை மற்றும் கல்வி நிறுவனங்கள்:

*Bon Secours Sisters convent

*குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி

*St Joseph's HSS

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி.‌ R. V. மத்தியாஸ் (1967-1972)

2. அருட்பணி.‌ A. சூசைராஜ் (1972-1981)

3. அருட்பணி. M. S. லாரன்ஸ் (1981-1985)

4. அருட்பணி. P. தாமஸ் பால்சாமி (1985-1986) 

5. அருட்பணி. V. M. மரிய நாயகம் (1986-1987)

6. அருட்பணி. ஆ. அற்புதம் (1987-1994)

7. அருட்பணி.‌ ஆ. வின்சென்ட் ஜோசப் (1994-2001)

8. அருட்பணி. அ. சூசைராஜ் (2001-2006)

9. அருட்பணி.‌ ஆ. ஜேம்ஸ் (2006-2011)

10. அருட்பணி.‌ அ. சுந்தர்ராஜ் (2011-2016)

11. அருட்பணி. M. ஞானாதிக்கம் (2016-2021)

12. அருட்பணி. ஜெரோம் ஞான பிரபு (2021----)

வழித்தடம்: திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து, தஞ்சாவூர் செல்லும் சாலையில், BHEL பயிற்சிப் பள்ளி நிறுத்தத்திலிருந்து, சுமார் ஒரு கி.மீ தொலைவில் R செக்டரில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 

திருச்சி -கைலாசபுரம் 19கி.மீ

Location map: https://g.co/kgs/RWtJSQ

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ஜெரோம் ஞான பிரபு மற்றும் செயலர் திரு. ஆன்டனி ஆகியோர்.