417 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சோழசிராமணி


புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்

இடம் : சோழசிராமணி

மாவட்டம் : நாமக்கல்
மறை மாவட்டம் : சேலம்
மறை வட்டம் : திருச்செங்கோடு

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள் :
1. புனித சவேரியார் ஆலயம், இறையமங்கலம்
2. புனித குழந்தை தெரசாள் ஆலயம், மொளசி
3. புனித சகாய அன்னை ஆலயம், ஜேடர்பாளையம்
4. புனித விண்ணரசி மாதா ஆலயம், கொத்தமங்கலம்.
5. புனித வனத்து சின்னப்பர் ஆலயம், வடுகப்பாளையம்
6. புனித இஞ்ஞாசியார் ஆலயம், ஜமீன் இளம்பள்ளி.

பங்குத்தந்தை : அருட்பணி பிரசன்னா

குடும்பங்கள் : 232
அன்பியங்கள் : 12

ஞாயிறு திருப்பலி : காலை 09.30 மணிக்கு
திங்கள் திருப்பலி : மாலை 06.30 மணிக்கு

புதன், வியாழன் திருப்பலி : இரவு 07.00 மணிக்கு

திருவிழா : மே மாதம் 29 ஆம் தேதி.

வழித்தடம் : சேலத்தில் இருந்து திருச்செங்கோடு வழியாக ஜேடர்பாளையம் செல்லும் வழியில் சோழசிராமணி உள்ளது.

Location map : Solasiramani Tamil Nadu 637210

வரலாறு :

சோழசிராமணி ஊரில் 2002 ஆம் ஆண்டு ஆலயம் கட்டப்பட்டடு அர்ச்சிக்கப்பட்டு, பெருங்குறிச்சி பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.

08.06.2005 ல் பெருங்குறிச்சி பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, ஆறு கிளைப் பங்குகளுடன் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. பங்கின் நிர்வாகத் தந்தையாக அருட்பணி. சின்னப்பன் சகாயராஜ் அவர்களும், மற்றும் அருட்பணி. மார்ட்டின் ஆகியோர் அன்றைய சேலம் மறைமாவட்ட முதன்மை குரு அருட்பணி. சேவியர் அவர்களால் பங்கு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

அருட்பணி. சின்னப்பன் சகாயராஜ் அவர்களுக்கு பிறகு, அருட்பணி. டேவிட், தொடர்ந்து அருட்பணி. மைக்கேல் ஆகியோர் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தினார்கள்.

தற்போது அருட்பணி. பிரசன்னா அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள்.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பிரசன்னா அவர்கள்.