02 கிறிஸ்து அரசர் ஆலயம், நல்லூர்

 

கிறிஸ்து அரசர் ஆலயம்.

இடம் :  நல்லூர் 

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம்: குழித்துறை 

மறைவட்டம்: திரித்துவபுரம்

நிலை: கிளைப்பங்கு 

பங்கு: புனித சவேரியார் ஆலயம்,  மார்த்தாண்டம் 

பங்குத்தந்தை : அருட்பணி. சகாய ஸ்டாலின்

குடும்பங்கள்: 160

அன்பியங்கள்: 6

ஞாயிறு திருப்பலி காலை 08.30 மணி 

வியாழன் மாலை 06:30 மணி திருப்பலி

திருவிழா : நவம்பர் மாதத்தில் 

வழித்தடம்: மார்த்தாண்டம் (குழித்துறை) இரயில் நிலையம் அருகில் நல்லூர் அமைந்துள்ளது.

Location map: Christ The King Church, Nallur

https://maps.app.goo.gl/dwocq9VyTgrzN8HP6

வரலாறு:

மார்த்தாண்டம் நகரில் நல்லூர் என்னும் சிற்றூரில் தொடக்க காலத்தில் நான்கு அல்லது ஐந்து கத்தோலிக்க குடும்பத்தினர் வசித்து வந்தனர். அவர்களில் சிலர் காப்புக்காடு பங்கு ஆலயத்திற்கும், வேறு சிலர் வேறு பல ஆலயங்களுக்கும் திருப்பலியில் பங்கேற்க சென்று வந்தனர். அந்த காலகட்டத்தில் திரு. செல்லப்பன் அவர்கள் திரித்துவபுரம் ஆலயத்திற்கு சென்று திருமுழுக்குப் பெற்றார். அப்போதைய திரித்துவபுரம் வட்டார முதன்மை குருவாகவும், பங்குத்தந்தையும் பணிபுரிந்த அருள்தந்தை எப்ரேம் கோமஸ் அவர்கள், நல்லூர் பகுதியில் ஆலயம் ஒன்றை நிறுவ திட்டமிட்டு 1967 ஆம் ஆண்டு, துறும்பல்விளை என்னும் இடத்தில் உள்ள 20 சென்ட் நிலத்தை வாங்கி, ஓலைக் குடிசை ஆலயம் அமைத்து, திருப்பலி நிறைவேற்றினார்.

அதன்பின் ஓட்டுக்கூரை வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது. கிறிஸ்து பிறப்பு திருப்பலி மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது. ஏராளமான இறைமக்கள் மற்றும் பிற சமய மக்களும் திருப்பலியில் பங்கேற்று வந்ததுடன் கலைநிகழ்ச்சிகளும் வழங்கி வந்தனர். அருள்தந்தை எப்ரேம் கோமஸ் அவர்களும், புனித அன்னம்மாள் சபை அருட்சகோதரிகளும் இம்மக்களை ஊக்கப்படுத்தி வந்தனர். தொடர்ந்து ஆலயத்திற்கு கோபுரம் எழுப்பி ஆலய உச்சியில் உலக இரட்சகர் சுரூபமும் நிறுவப்பட்டு, 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அர்ச்சிக்கப்பட்டது.

தொடர்ந்து ஞாயிறு தோறும் காலை 09:30 மணிக்கு திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 1949-1971 வரை திரித்துவபுரம் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருள்பணி. எப்ரேம் கோமஸ் அவர்கள் கட்டிய ஆலயங்களில், 12-வது ஆலயம் நல்லூர் கிறிஸ்து அரசர் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

1971 முதல் திரித்துவபுரம் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருள்பணி. தனிஸ்லாஸ் அடிகளார் காலத்தில் ஆலயத்தை சுற்றிலும் மதிற்சுவர் கட்டப்பட்டு, ஆலயத்திற்கு மின் இணைப்பும் பெறப்பட்டது. 

1969-1978 வரை பணியாற்றிய அருள்பணியாளர்கள், புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள் ஆகியோரின் தன்னலமற்ற இறைப்பணியின் காரணமாக குடும்பங்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. 03.06.1979 அன்று மார்த்தாண்டம் புனித சவேரியார் ஆலயமானது பங்காக உயர்ந்த போது, நல்லூர் ஆலயமானது மார்த்தாண்டத்தின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருள்பணி. பெல்லார்மின் R. ஜியோ அவர்கள், ஆங்காங்கே சிதறுண்டு கிடந்த கத்தோலிக்க மக்களை ஒருங்கிணைத்ததன் காரணமாக, குடும்பங்களின் எண்ணிக்கை 75-க்கும் அதிகமாக உயர்ந்தது. 

அருள்பணி. செபஸ்தியான் பணிக்காலத்தில் பங்குமக்களின் முயற்சியால், கல்லறைத் தோட்டத்திற்கு இரயில் நிலையத்தின் பின்புறம் தச்சக்குடிவிளையில் 22 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. 

அருள்பணி. ஜார்ஜ் அவர்களின் முயற்சியால் ஆலயத்தில் நற்கருணை ஸ்தாபிக்கப்பட்டது. 

நல்லூர் திருச்சபையின் வளர்ச்சியில் உண்ணாமலைக்கடை இமாகுலேட் பிரான்சிஸ்கன் மற்றும் மார்த்தாண்டம் SDS கான்வென்ட் கன்னியர்களின் அயராத பணியும், ஆலயத்தில் பணிபுரிந்த வேதியர்களின் பணியும் சிறப்புக்குரியது.

அருட்பணி. சூசை ஆன்றனி பணிக்காலத்தில் புதிய ஆலயம் அமைப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டது. 

அருட்பணி. வி. லாரன்ஸ் பணிக்காலத்தில், பழைய ஆலயத்தை இடிக்காமலேயே, ஆலயத்தின் பின்பகுதியில் 10 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லானது, கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் 22.08.1999 அன்று நாட்டப்பட்டது. அத்தோடு கல்லறைத் தோட்டத்திற்காக ஏற்கனவே வாங்கப்பட்ட நிலமானது விற்கப்பட்டு, ஆலயத்தின் மேற்குப் பகுதியில் 16 சென்ட் நிலம் வாங்கப்பட்டது.

அருட்பணி. பெனடிக்ட் M. ஆனலின் பணிக்காலத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கல்லறைத் தோட்டமானது ஆலயத்தின் பின்புறம் மாற்றப்பட்டது. 

அருட்பணி. அந்தோணிபிச்சை பணிக்காலத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று (கோபுரம் தவிர்த்து), 31.05.2006 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் ஆலயமானது அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி. S. P. லாரன்ஸ் பணிக்காலத்தில் ஆலய கோபுரமானது கட்டப்பட்டு, புதிய ஆலயமணியும் நிறுவப்பட்டு 12.11.2010 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி. ஜெயபாஸ்கர் மின்றோ பணிக்காலத்தில் 60 அடி உயரம் கொண்ட கொடிமரம் வைக்கப்பட்டு, 19.11.2014 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி. ஜோண்ஸ் கிளிட்டஸ், IVD பணிக்காலத்தில், ஓய்வு அறை கட்டப்பட்டு 14.11.2016 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் ஆலயத்தின் மேற்குப் பகுதியில் மதிற்சுவர் கட்டப்பட்டது. 

நல்லூர் திருச்சபையின் 50-வது ஆண்டு நினைவாக கிறிஸ்து அரங்கம் அமைக்க 07.07.2019 அன்று குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி. ஏசுரெத்தினம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

19.11.2019 அன்று பொன்விழா மலர் வெளியிடப்பட்டது.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. பங்கு அருட்பணிப் பேரவை

2. அன்பிய ஒருங்கிணையம்

3. பக்த சபை ஒருங்கிணையம்

4. திருவழிபாட்டுக் குழு

5. பாடகர்குழு

6. பீடப்பூக்கள்

7. நிதிக்குழு

8. மக்கள் வங்கி

9. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்

10. கத்தோலிக்க சேவா சங்கம்

11. கோல்பிங் இயக்கம்

12. மரியாயின் சேனை

13. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

14. இளைஞர் இயக்கம்

15. புனித வின்சென்ட் தே பவுல் சபை

16. சிறுவழி இயக்கம்

17. பாலர் சபை

18. மறைக்கல்வி

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. மரிய எப்ரேம் கோமஸ் (1969-1971)

2. அருட்பணி.‌ தனிஸ்லாஸ் (1971-1979)

3. அருட்பணி. பெல்லார்மின் (1979-1983)

4. அருட்பணி. செபஸ்தியான் (1983-1984)

5. அருட்பணி. ஜார்ஜ் (1984-1991)

6. அருட்பணி. யூஜின் (1991-1992)

7. அருட்பணி. பிரான்சிஸ் டி சேல்ஸ் (1992)

8. அருட்பணி. சூசை ஆன்றனி (1992-1998)

9. அருட்பணி. லாரன்ஸ் (1998-2002)

10. அருட்பணி. பெனடிக்ட் M. D. ஆனலின் (2002-2004)

11. அருட்பணி. அந்தோணிபிச்சை (2004-2006)

12. அருட்பணி. S. P. லாரன்ஸ் (206-2012)

13. அருட்பணி. ஜெயபாஸ்கர் மின்றோ (2012-2016)

14. அருட்பணி. ஜோண்ஸ் கிளிட்டஸ், IVD (2016-2019)

15. அருட்பணி. D. ஜேம்ஸ் அமல்ராஜ், CSJ (2019-

16. அருட்பணி. ராஜேஷ் பிலிப்

17. அருட்பணி. சகாய ஸ்டாலின்

ஆலய வரலாறு: ஆலய பொன்விழா மலர் (2019)

தகவல்கள் சேகரிப்பில் உதவி: பங்குதந்தை அருள்பணி.‌ சகாய ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டலில், ஆலய உறுப்பினர் திரு. செல்லத்துரை அவர்கள்.