52 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், குழித்துறை


புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்

இடம் : குழித்துறை (RC தெரு)

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : பங்குத்தளம்
கிளைகள் : இல்லை

குடும்பங்கள் : 180
அன்பியங்கள் : 7

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

நாள்தோறும் திருப்பலி : காலை 06.00 மணிக்கு.

பங்குத்தந்தை : அருட்பணி S. P லாரன்ஸ்

திருவிழா : செப்டம்பர் மாதம் 29 ம் தேதி புனித மிக்கேல் அதிதூதர் தினத்தை உள்ளடக்கிய நாட்கள்.

வரலாறு :

கி.பி 1920 -ஆம் ஆண்டு கொல்லம் மறை மாவட்ட ஆயர் மேதகு மரிய பென்சிகர் உதவியாலும் குழித்துறை ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் ஓலைக்கூரை ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது. கோட்டார் மறை மாவட்டம் உருவான போது திரித்துவபுரம் பங்கோடு இணைக்கப் பட்டது.

அருட்பணி. வர்க்கீஸ் அவர்களின் முயற்சியால் ஓலைக்கூரை மாற்றப்பட்டு ஓட்டுக்கூரை வேயப் பட்டது. மாதத்திற்கு இரண்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

திரித்துவபுரம் பங்குத்தந்தையர்களாக பணியாற்றிய அருட்பணி. மரிய எப்ரேம் கோமஸ், அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ் இயேசுதாசன் போன்றவர்களால் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டன. ஜெர்மனி நாட்டின் உதவியுடன் பல வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியமர்த்தப் பட்டனர்.

அருட்பணி. இராபர்ட் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டு 01.01.1997 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

இவ்வாலயம் முதலில் திரித்துவபுரம் -மூவொரு இறைவன் ஆலயத்தின் கிளைப் பங்காகவும், அதனைத் தொடர்ந்து மருதங்கோடு -புனித அந்தோணியார் ஆலயத்தின் கிளையாகவும் இருந்தது. பின்னர் 05-11-2015 ல் தனிப் பங்காக உயர்ந்தது.

குழித்துறை மறை மாவட்டத்தில் குழித்துறையில் இருக்கின்ற ஆலயம் இது மட்டும் தான் என்பது தனிச்சிறப்பு. மேலும் இவ்வாலயமானது குழித்துறை மேற்கு இரயில் நிலையத்திற்கருகில் இருப்பது குறிப்பிடத் தக்கது.