இடம் : திருமழிசை
மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை -மயிலை உயர் மறை மாவட்டம்
மறை வட்டம் : ஆவடி
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், பழஞ்சூர்.
பங்குத்தந்தை : அருட்பணி F. ஜான் மில்லர் MMI
குடும்பங்கள் : 99
அன்பியங்கள் : 4
ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணிக்கு
செவ்வாய் திருப்பலி : மாலை 06.30 மணிக்கு
மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 06.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, விண்ணப்பம் ஏறெடுத்தல், நற்கருணை ஆராதனை, எண்ணெய் பூசுதல், புனித அந்தோணியார் நவநாள், தேர்பவனி, நேர்ச்சை உணவு.
திருவிழா : ஜூன் 11, 12, 13 ம் தேதிகளில் என மூன்று நாட்கள்.
வழித்தடம் : திருமழிசையில் இருந்து, காவல்சேரி பகுதியில் Jai Hind பள்ளிக்கூடத்திற்கு அருகாமையில் ஆலயம் அமைந்துள்ளது.
பேருந்துகள் :
153 பிராட்வே - திருமழிசை
54L வெள்ளவேடு
597 தியாகராயநகர் - திருவள்ளூர்.
👉Location Map : https://g.co/kgs/rKCp9p
வரலாறு :
திருமழிசை புனித அந்தோணியார் பங்கானது, பழஞ்சூர் பங்குத்தந்தை அருட்பணி ஆன்ட்ரூ மங்கள் ராஜ் அவர்களால் 28 கத்தோலிக்க குடும்பங்களைக் கொண்டு, ஆலயமானது கட்டப்பட்டு 18.03.2007 அன்று மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
தற்போது
புனித ஆரோக்கிய அன்னை அன்பியம்,
புனித பிரான்சிஸ் சவேரியார் அன்பியம்,
குழந்தை இயேசு அன்பியம்,
புனித செபஸ்தியார் அன்பியம், ஆகிய நான்கு அன்பியங்களைக் கொண்டு பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில், ஆன்மீகப் பாதையில் சிறப்பாக முன்னேறிச் செல்கின்றது.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி F. ஜான் மில்லர் MMI