தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம்
இடம் : சேந்தை மாநகர், சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அஞ்சல், நாமக்கல் மாவட்டம், 637409.
மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : நாமக்கல்
நிலை : திருத்தலம்
கிளைப்பங்குகள் :
1. புனித யூதா ததேயு ஆலயம், பேளுக்குறிச்சி
2. புனித வனத்து சின்னப்பர் மற்றும் புனித வனத்து அந்தோணியார் ஆலயம், துத்திக்குளம்
3. பொட்டணம் (ஆலயம் இல்லை)
4. கொண்டையம்பட்டி (ஆலயம் இல்லை)
பங்குத்தந்தை : அருட்பணி. வேதநாயகம், (கப்புச்சின் சபை)
குடும்பங்கள் : 106
அன்பியங்கள் : 6
திருப்பலி நேரங்கள் :
ஞாயிறு : காலை 08.30 மணிக்கு திருப்பலி
வாரநாட்கள் செவ்வாய் தவிர : மாலை 07.00 மணிக்கு திருப்பலி
செவ்வாய் : காலை 07.00 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி
சனி : மாலை 07.00 மணிக்கு தூய ஆரோக்கிய அன்னை நவநாள் திருப்பலி.
மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமை : இரவு 09.00 மணிமுதல் விடியற்காலை 04.00 மணிவரை இரவு செபவழிபாடு.
திருவிழா : செப்டம்பர் மாதம் 8-ம் தேதி
வழித்தடம் : நாமக்கல்- (இராசிபுரம் செல்லும் வழி)- சேந்தமங்கலம்.
நாமக்கல்லில் இருந்து 13கி.மீ தூரத்திலும், இராசிபுரத்தில் இருந்து 23கி.மீ தூரத்திலும் சேந்தமங்கலம் உள்ளது.
சேலம்- நாமக்கல்- இராசிபுரம் வழி- சேந்தமங்கலம்.
வரலாறு :
கி.பி.1623 ல் ஆண்டில் இராபர்ட் தே நோபிலி சேலம், அதன் சுற்று வட்டார பகுதிகள், சேந்தமங்கலம் ஆகிய ஊர்களுக்கு சென்று நற்செய்தி அறிவித்து வந்தார். அவர் நற்செய்தி அறிவித்த ஊர்களில் சேந்தமங்கலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி.1679 ஆம் ஆண்டு, வெள்ளாண்டிவலசையில் இருந்த 7 கிளைப்பங்குகளில் சேந்தமங்கலமும் ஒன்று. கி.பி.1750 ஆம் ஆண்டில் மைசூர் மறைபரப்புத்தளம் நன்கு வளர்ச்சி பெற்றது. அப்போதிருந்த நான்கு பங்குகளில் களங்காணிப் பங்கும் ஒன்று. சேந்தமங்கலம், களங்காணி பங்கின் கிளைப்பங்காக இருந்து வந்தது.
கி.பி.1895ம் ஆண்டு ஆலயம் கட்டுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆலயத்திற்காக பெரிய மணியும், புனித ஆரோக்கிய அன்னையின் அழகிய சுரூபமும் சேந்தமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கி.பி.1896 ஆம் ஆண்டில், அருட்பணி. பிரிக்கோ அடிகளாரின் விடாமுயற்சியால் சேந்தமங்கலத்தில் ஆலயத்திற்கு இடத்தை வாங்கி, புனித ஆரோக்கிய அன்னையை பாதுகாவலியாகக் கொண்டு அழகிய ஆலயம் கட்டப்பட்டது.
கப்புச்சின் சபை அருட்பணியாளர்களுக்கென ஒரு இல்லம் அமைத்து, 2003 -ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு கொசவம்பட்டி புனித சவேரியார் ஆலயத்தை தலைமைப்பங்காகக் கொண்ட சேந்தமங்கலம், 03.06.2004 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, கப்புச்சின் சபை அருட்தந்தையர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. கிளாரன்ஸ் (கப்புச்சின்) அவர்கள் பொறுப்பேற்றார்.
அருட்பணி. R. சேவியர் அவர்களின் பணிக்காலத்தில் இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.
நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்பட்டு, அருட்பணி. வில்சன் (கப்புச்சின்) அவர்களின் பணிக்காலத்தில் அன்னையின் ஆலயம் புதுப்பொலிவுடன் கட்டப்பட்டு, 09.02.2019 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் ஆண்டகை அவர்களால் அர்ச்சித்துப் புனிதப்படுத்தப் பட்டது. தற்போது பங்குத்தந்தை அருட்பணி. வேதநாயகம் (கப்புச்சின்) அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது சேந்தமங்கலம் இறைசமூகம்.
இவ்வாலயத்திற்கு சாதி, மதம் பாராமல் ஏராளமான இறைமக்கள் வருகை தந்து அன்னையிடம் ஜெபித்து ஆசீர் பெற்றுச் பெற்றுச் செல்கின்றனர். நீங்களும் வாருங்கள்..! இறைஆசீர் பெற்றுச் செல்லுங்கள்!
பங்கில் உள்ள பக்த சபைகள் :
1.பங்குப்பேரவை
2.அருங்கொடை செபக்குழு
3.அமைதிப்புறா இளைஞர் இயக்கம்
4.பாடகற்குழு
5.பீடச்சிறுவர்கள்
6.அன்பியங்கள்.
இல்லம் :
1. ஜீவநதி கப்புச்சின் துறவியர் இல்லம்.
பங்கில் பணியாற்றிய அருட்பணியாளர்கள்:
1. அருட்பணி. கிளாரன்ஸ் (கப்புச்சின்)
2. அருட்பணி. ஜான் பீட்டர் (கப்புச்சின்)
3. அருட்பணி. மரிய அந்தோணி (கப்புச்சின்)
4. அருட்பணி. R. சேவியர் (பொறுப்பு)
5. அருட்பணி. டேவிட் டோமினிக் (கப்புச்சின்)
6. அருட்பணி. கிறிஸ்துராஜ் (கப்புச்சின்)
7. அருட்பணி. தெரசநாதன் (கப்புச்சின்)
8. அருட்பணி. செல்வநாயகம் (கப்புச்சின்)
9. அருட்பணி. வில்சன் (கப்புச்சின்)
10. அருட்பணி. வேதநாயகம் (கப்புச்சின்)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. வேதநாயகம் (கப்புச்சின்) அவர்கள்.