26 மரியன்னை ஆலயம், மண்ணான்விளை


தூய மரியன்னை ஆலயம்.

இடம் : மண்ணான்விளை, அடைக்காகுழி அஞ்சல்.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : கிறிஸ்து அரசர் ஆலயம், இருதயபுரம்.

குடும்பங்கள் : 60
அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு.

பங்குத்தந்தை : அருட்பணி ஜெயபாலன்.

திருவிழா : செப்டம்பர் 8 ம் தேதியை உள்ளடக்கிய ஐந்து நாட்கள்.

சிறப்புகள்:

மக்களின் ஈடுபாடுகளால் நன்கு வளர்ந்து வருகின்ற இந்த இறை சமூகமானது 2006 ல் கிளைப்பங்கு நிலையை அடைந்து, அந்த ஆண்டு ஜூன் 4 முதல் ஞாயிறு திருப்பலிகள் வழக்கமாக்கப் பட்டது. ஆரம்ப காலத்தில் சிறு கூடாரத்தில் இருந்த ஆலயம் மாற்றப்பட்டு, பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் அருட்பணியாளர்களின் வழிகாட்டுதலால் புதிய ஆலயம் கட்டப்பட்டு 2010 செப்டம்பர் மாதம் 08 ம் தேதி கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

இவ் ஆலயமானது களியக்காவிளை - கொல்லங்கோடு சாலையில், செறுவாரக்கோணத்திலிருந்து சற்று உட்புறமமாக அமைந்துள்ளது.