562 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், ஆரோக்கியபுரம்

   

புனித ஆரோக்கிய மாதா ஆலயம் 

இடம் : ஆரோக்கியபுரம், சேசுராஜபுரம் (PO) 

மாவட்டம் : கிருஷ்ணகிரி 

மறைமாவட்டம் : தருமபுரி 

மறைவட்டம் : தேன்கனிகோட்டை

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : புனித அருளானந்தர் ஆலயம், சேசுராஜபுரம் 

பங்குத்தந்தை : அருள்பணி. P. ஜான் கென்னடி. 

குடும்பங்கள் : 45

அன்பியம் : 1

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு 

திருவிழா : செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி. 

வழித்தடம் : சேசுராஜபுரம் -ஆரோக்கியபுரம். 

வரலாறு :

சேசுராஜபுரத்திற்கு அருகே மசனட்டி பகுதியில் குடியேறிய கிறிஸ்தவர்கள், தங்கள் குடியிருப்புக்கு ஆரோக்கியபுரம் எனப் பெயரிட்டு, சேசுராஜபுரம் புனித அருளானந்தர் ஆலயத்திற்கு நடந்து வந்து திருப்பலியில் பங்கேற்று வந்தனர். 

1986 ஆம் ஆண்டில் அருள்பணி. செ. சிங்கராயன் (முன்னாள் சேலம் மறைமாவட்ட ஆயர்) அவர்கள் ஆரோக்கியபுரத்தில் புனித பீட்டர் பள்ளிக்கூடத்தைத் துவக்கினார். பின்னர் ஆரோக்கியபுரம் மக்களுக்காக பள்ளிக்கூடத்தில் வாரநாட்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 

ஆரோக்கியபுரம் மக்களின் ஆன்மீகத் தேவையை உணர்ந்து அருள்பணி. K ஆரோக்கிய ஜேம்ஸ் அவர்களின் முயற்சியால் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் கட்டப்பட்டு, 22.09.2010 அன்று தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு ஜோசப் அந்தோனி இருதயராஜ் அவர்களால் புனிதப் படுத்தப்பட்டது. 

பின்னர் சேசுராஜபுரம் பங்கின் கிளைப் பங்காக உயர்த்தப் பட்டு, பங்குத்தந்தையர்களின் வழிகாட்டுதலில் வளர்சியை நோக்கி பயணிக்கிறது ஆரோக்கியபுரம் இறைசமூகம். 

தற்போதைய பங்குத்தந்தை அருள்பணி. P. ஜான் கென்னடி அவர்களின் முயற்சியால், 2018 -ஆம் ஆண்டு இவ்வாலயத்தின் பலிபீடம் எழிலுற புதுப்பிக்கப்பட்டது. 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. P. ஜான் கென்னடி அவர்கள்.