347 புனித அந்தோணியார் திருத்தலம், மேல் நாரியப்பனூர்

  

புனித அந்தோணியார் திருத்தலம்.

இடம் : மேல்நாரியப்பனூர்

மாவட்டம் : விழுப்புரம்

மறை மாவட்டம் : பாண்டிச்சேரி - கடலூர் உயர் மறை மாவட்டம்.

மறை வட்டம் : கள்ளக்குறிச்சி

நிலை : திருத்தலம்

கிளைகள் : இல்லை

பங்குத்தந்தை : அருட்பணி ஆரோக்கிய தாஸ்

குடும்பங்கள் : 250
அன்பியங்கள் : 7

திருவழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி : காலை 08.15 மணி மற்றும் நண்பகல் 12.15 மணி

திங்கள் திருப்பலி : மாலை 06.30 மணிக்கு

செவ்வாய் காலை 06.15 மணி 08.15 மணிக்கம் திருப்பலி. நண்பகல் 12.15 மணி நவநாள் திருப்பலி.

மாலை 06.15 மணிக்கு ஜெபமாலையுடன் தேர்பவனி தொடர்ந்து நவநாள் திருப்பலி.

புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

மாதத்தின் முதல் திங்கட்கிழமை : காலை 10.00 மாலை மணி வரை இறைமக்களுக்கு தனி செபம செய்தலும், ஆற்றுப்படுத்தல் (counseling) கொடுக்கப்படும்.

மாலை 06.00 மணிக்கு புனிதரின் தேர்பவனியும், திருப்பலியும் தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆராதனையும், அற்புத குணமளிக்கும் செப வழிபாடும் நடைபெறும்.

மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை : காலை 05.00, காலை 06.15, காலை 08.15 மணிக்கும் திருப்பலி, நண்பகல் 12.15 மணிக்கு நவநாள் திருப்பலி. மாலை 06.00 மணிக்கு புனித அந்தோணியார் தேர்பவனி, திருப்பலி.

திருவிழா : ஜூன் 05 -ஆம் தேதி ஆரம்பித்து ஜூன் 12,13 தேதிகளில் தேர்த்திருவிழா.

மண்ணின் மைந்தர்கள் :

அருட்பணி அடைக்கலசாமி
மற்றும் ஏழு அருட்சகோநரிகள்.

வழித்தடம் :

இரயில் வசதிகள் :
விருத்தாசலம் - சேலம் பயணிகள் இரயில் : காலைஸ 07.15 மணி, காலை 11.30 மணி, மாலை 02.30 மணி, இரவு 08.30 மணி ஆகிய நேரங்களில் மேல்நாரியப்பனூர் வந்து சேரும்.

காரைக்கால் - பெங்களூரு காலை 11.30 மணி, பெங்களூரு - காரைக்கால் மாலை 03.00 மணி விரைவு பயணிகள் இரயில், திருவிழா நாட்களில் மேல்நாரியப்பனூர் நின்று செல்லும்.

பேருந்து வழித்தடம் : 
கள்ளக்குறிச்சி - சேலம் சென்னை நெடுஞ்சாலையில், V கூட்ரோடு இறங்கி, அங்கிருந்து ஷேர் ஆட்டோ மற்றும் மினிபஸ் வசதியும் உள்ளது.

வரலாறு :

சுமார் 1845-இல் மேல்நாரியப்பனூர் என்னும் கிராமத்தில் வணிகச் செட்டி என்ற ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். நீண்ட நாட்களாகவே, அவர்களுக்கு குழுந்தை பாக்கியம் இல்லை. இருப்பினும், தங்களுக்கு ஏற்பட்ட குறையை போக்க பல தெய்வங்களுக்கு காணிக்கைகளையும், பூஜைகளையும் தர்மங்களையும் செய்து வந்தனர். பிள்ளை வரம் கேட்டு கோயில்களை வலம் வந்தனர். பலன் ஏதும் இல்லை. பிள்ளைப் பேறு இல்லாமல் போகவே வாழ்க்கையில் மனமுடைந்து போனார்கள்.

மேலும், இச்சிற்றூரில் இந்து மதத்தை தழுவிய மூன்று ஆதிதிராவிட குடும்பங்கள் பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்தனர். இவர்களுள் குஞ்சான்- மொட்டச்சி என்னும் தம்பதியினர் பிள்ளை பெறுவதற்காக வேண்டுதலுடன் நீண்ட முடி வளர்த்துக் கொண்டனர். மேலும் அனைத்து தவ முயற்சிகளையும் மேற்கொண்டு கோயில்களுக்குச் சென்று வணங்கி வந்தனர்.

ஒரு நாள் வணிகச் செட்டி ஜோதிடனை அணுகி ஆலோசனை கேட்டார். அதற்கு ஜோதிடர்..! உனக்கு கெட்ட நேரமும், பழியும் உன்னைச் சூழ்ந்துள்ளது...! கருப்பண்ணசாமி கடவுளுக்கு படையலிட்டு..! பூசை செய்து உன்னுடைய கெட்ட நேரத்தை கழித்துவிடு...! அந்த கெட்ட நேரம்.. (ம்?????) கோயிலில் யார் உன் கண்ணில் முதலில் விழிப்பானோ அவன்மேல் தாண்டிவிடும் அதன் பிறகு நீ பிள்ளைப்பேறு பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வாய் என்று கூறினார்.

அவரின் சொற்படியே ஒரு மாலைநேரம் செட்டியார் குஞ்சானை அழைத்துக் கொண்டு கருப்பண்ணசாமி கோவிலுக்கு காணிக்கையை செலுத்திவிட்டு அங்கு தூங்கச் சென்றான். அதே இரவில் அவன் சொன்னது போல் கோழியை சமைத்து குஞ்சானுக்கும் கொடுத்தான். செட்டியார் நினைத்தபடியே முடிந்தது. குஞ்சான் நன்றாக கோயிலில் தூங்கினான்.

செட்டி அனைத்து பலியையும் செலுத்திவிட்டு விரைவாக குஞ்சானுக்குத் தெரியாமலே வீடு திரும்பினார்.

அந்த இரவு நேரத்தில் குஞ்சான் எழுந்து தனியான இருப்பதை உணர்ந்தான். அப்போது கருப்பண்ணசாமிக்கு மிகுந்த பயத்துடன் வணக்கம் செலுத்திவிட்டு வீடு திரும்பினான்.

சில நாட்களுக்குப்பிறகு, குஞ்சானுக்கு வியாதி ஏற்பட அவன் மனதிற்குள் கருப்பண்ணசாமி கடவுள் தான் சோதனைக்குக் காரணம் என்று நினைத்து வள்ளுவன் என்ற வைத்தியக்காரனை சந்தித்தான். தனக்கு ஏற்பட்ட அனைத்து கெடுதல்களையும் சொன்னான்.

அப்போது வைத்தியர், அந்த பலி பாவத்திலிருந்து விடுதலை அடைய மாதா சுவாமிக்கு பொருத்தனை வைத்து வேண்டிக் கொண்டால் குணமடைந்து, பிள்ளைப்பேறு பெறுவாய் என்று சொல்லி அனுப்பினார்.

வைத்தியர் வள்ளுவன் அறிவுரைப்படியே குஞ்சான் தன் தெய்வத்திற்கு வளர்த்து வந்த காளையை ரூ21க்கு விற்றான். அந்த பணத்தை தலையணையில் வைத்து தூங்கினான். அவன் தூங்கும்போது கனவு கண்டான். கனவில் தான் கள்ளக்குறிச்சி ரோட்டில் நடந்து போவதாகவும், சுரூபம் விற்பவனை சந்திப்பதாகவும், அதை பணத்திற்கு வாங்கியதாகவும் கனவு கண்டான்.

அவன் கனவு கண்டதுபோல் காலையில் எழுந்து கள்ளக்குறிச்சி ரோட்டில் நடந்தான். 2 ½ அடியுள்ள புனித அந்தோனியார் சுரூபத்தைச் சுமந்து வந்த பாண்டிச்சேரிக்காரனைச் சந்தித்தான். குஞ்சான் தான் வைத்திருந்த ரூ.21 க்கு அந்த சுரூபத்தை வாங்கிக்கொண்டு மேல்நாரியப்பனூர் வருகிற வழியில் தான் வளர்த்திருந்த நீண்ட முடியை அம்மையகரம் என்ற இடத்தில் மொட்டை அடித்துக்கொண்டு வீடு திரும்பினான்.

அதன் பிறகு தன்னுடைய நிலத்தில் ஒரு குடிசையைக் கட்டி அதனுள் புனித அந்தோனியார் சுரூபத்தை வைத்து இந்து முறைப்படி பூசையை செய்து வந்தான். இரண்டு ஆதிதிராவிட குடும்பத்தினரும் இவர்களுடன் சேர்ந்து வழிபட்டனர்.

விரைவில் குஞ்சான் குடும்பத்தாரும், அந்த இந்துக் குடும்பத்தாரும் பிள்ளைபேறு பெற்று மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கினர். பல இந்துக் குடும்பத்தினர் இதை அறிந்து அந்தோணியாரை “பதுவா” என்று அழைத்தனர்.

1881-ல் சேலம் ஆத்தூருக்கு வந்து சேர்ந்த அருட்தந்தை இலாசர் மேல்நாரியப்பனூர் மீது ஒரு தனிக்கவனம் செலுத்தி வந்தார். காரணம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் புனித அந்தோணியார் பக்தியால், அதிக ஆர்வமுடன் அங்கு கூடுகின்ற மக்கள் கூட்டம் அவருடைய ஆன்மீகத்தில் ஒரு பெரும் தாகத்தை ஏற்படுத்தியது.

எனவே அவர் அழகிய பெரியதொரு தேவாலயத்தை கட்ட திட்டமிட்டார். பல இடங்களில் இருந்தும் பொருள் உதவியும் அருள் உதவியும் வந்து குவிந்தது.

கோடி அற்புதர் புனித அந்தோணியார் பெயரில் ஆலயப்பணி வெகு வேகமாகவே நடந்தேறியது. அருட்தந்தை இலாசர் அவர்கள் ஆலயத்தின் கோபுர உச்சி வரை சிலுவையைத் தானே சுமந்து உயரே வைத்து கோயிலின் மீது நிலைநாட்டி அதில் தனது முழு பக்தியை வெளிப்படுத்தினார்.

மாலை நேரம் அவர் நடந்து வரும் பாதையில் ஒரு கூரிய மரத்துண்டு அவருடைய காலில் பட்டு ஒரு ஆழம்மிக்க காயத்தை ஏற்படுத்தியது. இரத்தம் அதிகமாக வெளிப்பட்டது. அவர் அந்த காயத்திற்காக கவலைப்பட்டதாய் தெரியவில்லை. ஆனால் அந்தக் காயம் பெரியதாய் வளர்ந்து கொண்டே இருந்தது.

நாட்கள் உருண்டோடின. காலில் ஏற்பட்ட அந்தக் காயம் அவரை மிகவும் உருத்திக் கொண்டே இருந்தது. அந்த ஊரில் இருந்த முடிவெட்டும் தொழிலாளி மூலமாக அவன் வைத்திருந்த கத்தியைக் கொண்டு அறுவை சிகிச்சையை அவரே செய்து கொண்டார்.

அப்படி அறுக்கின்ற போதே எதிர்பாராத விதத்தில் ஒரு நரம்பும் அறுபட்டது. இதனால் இரத்தம் மூலமாக உடலுக்கு விஷம் பாய்ந்தது. குளிர்காய்ச்சலும், மரண பய நடுக்கமும் அவரை சுற்றி வளைத்தது. அருட்ததை இலாசர் அவருடைய இறப்பை கணித்துக் கொண்டே இருந்தார்.

அருட்தந்தை ஃபெர்ரோன் விரியூர் பங்குத்தந்தை உடனடியாக மேல்நாரியப்பனூருக்கு செய்தி கேட்டு வந்து சேர்ந்தார். அவரும் அருட்தந்தை இலாசருக்கு நோயில் பூசுதல் என்ற கடைசி அருட்சாதனத்தை வழங்கினார்.

கடைசி அருட்சாதனத்தை பெற்றுக் கொண்ட இலாசர் அடிகள் புன்முறுவலோடு அருட்தந்தையை பார்த்தார். மக்கள் பலரும் அவருக்காக அழுது செபித்துக் கொண்டிருந்தார்கள். அந்த புன்சிரிப்போடு தான் அவருடைய கடைசி மூச்சு நின்று கொண்டது.

1894-ல் செப்டம்பர் 16ம் தேதி அருட்தந்தை இலாசர் முகமலர இறைவனடி சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 45. புதியதாக கட்டப்பட் புனித அந்தோணியாரின் திருக்கோவிலின் மேற்குப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டார்.

அருட்தந்தை இலாசரின் மறைவால் திருக்கோவிலின் கட்டிடவேலை முழுமை பெறாமல் நின்று போனது. 1906-ல் கட்டிடப்பணி முடிவுபெற்றது. தற்போது வரை மிகப் பொலிவுடன் காணப்படும் இத்திருத்தலத்தை பலரும் கண்டு அதிசயித்து செல்கின்றனர்.

70 அடி உயர புதிய கொடிமரம் மற்றும் புதுமை மாதா கெபியும் 12-12-2018 அன்று புதுவை-கடலூர் உயர் மறை மாவட்ட ஆயர் மேதகு அந்தோணி ஆனந்தராயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

திருவிழா ஆரம்பமாகும் ஜூன் 05-ஆம் தேதி முதல் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் மாட்டு வண்டி பூட்டி திருவிழாவில் கலந்து கொள்ள வருவது இத் திருத்தலத்தின் தனிச் சிறப்பு.

மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் வழியாக பல்வேறு புதுமைகள் நடந்து வருவதால் திருவிழா காலங்களில் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆசீர் பெற்று மகிழ்வுடன் செல்கின்றனர்.

திருப்பயணிகள் தங்குவதற்காக 50-க்கும் மேற்பட்ட தங்கும் அறைகள் (Rooms) உள்ளன.

பதிவு : புனித காணிக்கை மாதா ஆலயம் மாதாபுரம், குமரி மாவட்டம், குழித்துறை மறை மாவட்டம்.

மின்னஞ்சல் : joseeye1@gmail.com

https://www.facebook.com/permalink.php?story_fbid=2486415844926393&id=2287910631443583&__tn__=K-R