131 புனித ஆரோபண அன்னை ஆலயம், மேக்காமண்டபம்


புனித ஆரோபண அன்னை ஆலயம்

இடம் : மேக்காமண்டபம்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

பங்குத்தந்தை : அருட்பணி ராபர்ட் ஜான் கென்னடி.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், செம்பருத்திவிளை.

குடும்பங்கள் : 112
அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 05.00 மணிக்கு.

ஞாயிறு திருப்பலிக்குப் பின்னர் காலை 06.30 க்கு மறைக்கல்வி.
காலை 08.00 மணிக்கு பக்தசபைகள் கூட்டம்.

புதன்கிழமை மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி.

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 06 ம் தேதி முதல் 15 ம் தேதி வரையிலான பத்து நாட்கள்.

வரலாறு :

கிபி 16 ம் நூற்றாண்டு முதல் இப்பகுதியில் ஓலை ஜெபவீடு அமைத்து மக்கள் அதில் வழிபாடுகள் நடத்தி வந்த பழம் பெரும் வரலாற்றைக் கொண்டது மேக்காமண்டபம் கிளைப்பங்கு ஆகும். 1982 ம் ஆண்டு செம்பருத்திவிளை பங்குத்தந்தை அருட்பணி அருள்சுவாமி அவர்கள், மக்கள் வசதிக்காகவும் பயணிகள் பாதுகாப்பிற்காகவும் மேக்காமண்டபம் சாலையோரத்தில் ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டது. தொடர்ந்து பணிப்பொறுப்பேற்ற அருட்பணி வென்சஸ்லாஸ் அவர்கள் முன்னிலையில் குருகுல முதல்வர் பேரருட்பணி சூசைமரியான் அவர்கள் 1983 ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். பணிகள் நிறைவு பெற்று 16-08-1989 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு ஆரோக்கியசுவாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

இவ்வாலயத்திற்கு சொந்தமான மேக்காபண்டபம் மார்த்தாண்ட பெருந்தெரு பகுதியில் 1910 ம் ஆண்டிலேயே கட்டி எழுப்பப்பட்ட புனித குழந்தை தெரசாள் குருசடி உள்ளது. இக்குருசடிக்கு மக்கள் பலரும் வந்து ஜெபித்து பல புதுமைகள் பெற்ற செல்கின்றனர். அருட்பணி ஒய்ஸ்லின் சேவியர் பணிக்காலத்தில் ஆலய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு, அவரைத் தொடர்ந்து பணிப்பொறுப்பேற்ற அருட்பணி ஜோசப் ராஜ் அவர்கள் பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் நன்கொடைகளோடு சிறப்பாக பணிகளை கொண்டு சென்றார்கள். தொடர்ந்து பணிப்பொறுப்பேற்ற அருட்பணி ராபர்ட் ஜான் கென்னடி அவர்கள் விரிவாக்கப் பணிகளை நிறைவு செய்தார்கள்.

பல்வேறு சபைகள் இயக்கங்கள் சிறப்பாக நடத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு மேக்காமண்டபம் புனித ஆரோபண அன்னை ஆலயமானது பங்குத்தந்தையர்களின் சிறப்பான வழிநடத்துதலுடன் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி செல்கிறது.