478 புனித வளனார் ஆலயம், ஞானஒளிவுபுரம்

          

புனித வளனார் ஆலயம்

இடம் : ஞானஒளிவுபுரம், ஞானஒளிவுபுரம் அஞ்சல், 625016

மாவட்டம் : மதுரை
மறைமாவட்டம் : மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம் : மதுரை தெற்கு

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு:
புனித அந்தோணியார் ஆலயம், கரிமேடு.

பங்குத்தந்தை : அருட்பணி. S. செபாஸ்டின்

உதவிப் பங்குத்தந்தை : அருட்பணி. இக்னேஷியஸ் ஸ்டாலின்

குடும்பங்கள் : 1100
அன்பியங்கள் : 40

திருவழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி, காலை 07.30 மணி, மற்றும் இதே காலை 07.30 மணிக்கு மறைக்கல்வி மாணவர்களுக்கு திருப்பலி. மாலை 04.30 மணி (ஆங்கிலம்), மற்றும் மாலை 06.00 மணி.

வாரநாட்கள் : காலை 05.30 மணி மற்றும் மாலை 06.00 மணிக்கும் திருப்பலி.

புதன் : மாலை 06.00 மணிக்கு புனித வளனார் நவநாள் செபம், திருப்பலி.

சனி : மாலை 06.00 மணிக்கு இடைவிடா சகாய மாதா நவநாள் செபம், திருப்பலி.

மாதத்தின் முதல் புதன் : மாலை 06.00 மணிக்கு புனித வளனார் செபம், திருப்பலி, தேர்பவனி, நற்கருணை ஆசீர்.

மாதத்தின் மூன்றாவது புதன் : மாலை 06.00 மணிக்கு கனவு காணும் யோசேப்பு நவநாள், திருப்பலி.

மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 06.00 மணிக்கு கல்வாரி கெபியில் திருப்பலி.

மாதத்தின் முதல் சனி : மாலை 06.00 மணிக்கு மாதா கெபியில் திருப்பலி.

திருவிழா : மே மாதம் 1-ம் தேதி.

தொடர்புக்கு :
0452- 2361717
0452-2361919.

மண்ணின் மைந்தர்கள் :

1. அருட்பணி. அலெக்ஸ் கிளமென்ட், குஜராத்
2. அருட்பணி. ஜான் பிரான்சிஸ் செபாஸ்டின், கிளரீசியன் சபை
3. அருட்பணி. ஸ்டீபன் ஜோசப் SDB
4. அருட்பணி. சேவியர் ஜோ ஃபிரடி, SJ
5. அருட்பணி. ஜேம்ஸ் பால்ராஜ், மதுரை
6. அருட்பணி. ஜோசப் இருதயராஜ், OCD
7. அருட்பணி. தனிஸ்லாஸ் செல்வராஜ், SDB
8. அருட்பணி. ஜான் பிரிட்டோ, SJ
9. அருட்பணி. ராஜ் இருதயா, Society of Jesu Madurai Province
10. அருட்பணி. ஜேசு மிக்கேல் தாஸ், SJ
11. அருட்பணி. சகாயராஜ், கப்புச்சின் சபை
12. அருட்பணி. பிரான்சிஸ் டேவிட் ராஜ், SJ
13. அருட்பணி. டேனியல் ஜெய் ஜோசப்
14. அருட்பணி. ஜோசப் இருதயம், கப்புச்சின் சபை
15. அருட்பணி. அமல்ராஜ், மதுரை
16. அருட்பணி. பிரிட்டோ ராஜ் சுரேஷ், மதுரை
17. அருட்பணி. ராஜா, SAC
18. அருட்பணி. சார்லஸ் அல்போன்ஸ், கப்புச்சின் சபை
19. அருட்பணி. சாந்துராஜா இக்னேஷியஸ், SVD
20. அருட்பணி. பால் ஜெயக்குமார், SVD
21. அருட்பணி. டேவிட் பால்ராஜ், SHS.

மண்ணின் அருட்சகோதரர்கள்:
1. அருட்சகோ. சகாய சிலுவை தாஸ், ரொசாரியன் சபை
2. அருட்சகோ. ஸ்தனிஸ்லாஸ், Montfort Brothers of St. Gabriel
3. அருட்சகோ. பூபாலன் டோமினிக் விக்டர், மதுரை இயேசுவின் திருஇருதய சகோதரர்கள் சபை
4. அருட்சகோ. மைக்கேல் மாரிதாஸ், CMF.

மண்ணின் அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி. ரோஜாமணி, லயன்சின் புனித வளனார் சபை
2. அருட்சகோதரி. ரெஜினா மேரி, லயன்சின் புனித வளனார் சபை
3. அருட்சகோதரி. சேவியர் ஆக்னஸ் சின்னராணி, St. Ann's
4. அருட்சகோதரி. சகாயமேரி, புனித அலாய்சியஸ் கொன்சாகா
5. அருட்சகோதரி. யூஃப்ரஸ்யா, புனித மேரி லெயூகா சபை
6. அருட்சகோதரி. பாத்திமா மேரி சில்வியா, St. Ann's
7. அருட்சகோதரி. மார்கிரேட் ரஞ்சிதம், Sisters of Mary Immaculate
8. அருட்சகோதரி. மெர்சி ஆஞ்சலா மேரி, மரியாளின் மாசற்ற திருஇருதய வேதபோதக சபை
9. அருட்சகோதரி. யேசுவின் ஜோசப்பா, புனித அமலோற்பவ மாதா சபை
10. அருட்சகோதரி. குழந்தை தெரஸ், புனித லயன்ஸ் வளனார் சபை
11. அருட்சகோதரி. அல்போன்சா ரோமன் மைக்கேல், புனித மரியன்னை லேயூகா சபை
12. அருட்சகோதரி. விமலா, ICM
13. அருட்சகோதரி. சகாயராணி, காணிக்கை மாதா சபை
14. அருட்சகோதரி. கிரேஸி மார்கிரேட், Franciscan Sisters of Bon Secours.
15. அருட்சகோதரி. ஜேன் மடோனா, SAT

வழித்தடம் : மறைமாவட்ட தலைமை நகரான மதுரையிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் ஞானஒளிவுபுரம் உள்ளது.

ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 500மீ தொலைவில் ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயம் உள்ளது.

வரலாறு :

புனித வளனாரின் 22 அடி உயர திருஉருவத்தை தாங்கி, ஆரப்பாளையம் அரசடி சாலையில் நிமிர்ந்து நிற்கும் கோபுரத்தையும், எழில்மிகு சூழலையும் கொண்ட புனித வளனார் ஆலய பங்கானது, தன்னகத்தே 60 ஆண்டுகால வரலாற்றை தாங்கி நிற்கிறது.

கி.பி 1930 களில் மதுரையின் மேற்கு பகுதியில் இயங்கி வந்த ஹார்வி மில் என்ற தொழிற்சாலையில் பணிசெய்த பல கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், தொழிற்சாலையின் அருகாமையில் உள்ள மேடு பள்ளமான பகுதியில் குடியேறினர். அந்த மேடு பள்ளத்தை புகைவண்டியின் கரிசாம்பலைக் கொண்டு சமப்படுத்தியமையால் அப்பகுதிக்கு கரிமேடு என்று பெயரிட்டு, அங்கு வழிபடுவதெற்கென்று புனித அந்தோனியார் சிற்றாலயத்தைக் கட்டினர்.

1920-1941 வரை மதுரை புனித மரியன்னை பேராலயத்தின் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. கோமஸ் SJ அவர்கள், ஹார்வி மில் மேலாளராக இருந்த திரு. டோக்துரையை அணுகி அம்மக்களுக்கென சிறிய இடத்தை வாங்கினார். அப்பகுதி அவரது பெயரால் கோமஸ்பாளையம் என்று அழைக்கப் படுகிறது. இம்மக்களின் குழந்தைகளின் கல்வியறிவினை வளர்க்க R. C மில்கூலி ஆரம்பப் பள்ளியை தொடங்கினார்.

இந்தப் பகுதியில் வளர்ச்சியைத் திட்டமிட்ட மக்கள், தற்போதைய ஆரப்பாளையம் பங்கிற்கு உட்பட்ட பகுதிகளை வாங்கியுள்ளனர். அப்போதைய நகராட்சி ஆணையாளராகப் பணியாற்றி திரு. ஞானஒளிவு என்ற அலுவலர் 60 அடி அகலமுள்ள ஆரப்பாளையம் அரசடி ரோட்டினை இருபுறமும் இணைப்புச் சாலைகளோடு அமைத்து இப்பகுதியினை உருவாக்கியதால், இந்தப் பகுதி ஞானஒளிவுபுரம் என்று அழைக்கப்படுகிறது.

ஞானஒளிவுபுரம் பகுதியில் கத்தோலிக்கர்களை குடியமர்த்த விரும்பிய முன்னாள் கோவை ஆயராகிய C. M. விசுவாசம் அவர்கள், விசுவாசபுரி தெருக்களை வாங்கி அங்கு மக்களை குடியமர்த்தினார்.

இந்த மக்களின் ஆன்மீகத் தேவைகளுக்காக இங்கு ஒரு ஆலயம் அமைக்க எண்ணிய பேராயர் பீட்டர் லொயோனார்டு அவர்கள் 07.01.1956 அன்று புதிய ஆலய கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார். 06.08.1959 அன்று தனிப்பங்காக அறிவித்தார். 09.08.1959 அன்று முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. T. பிரிட்டோ SJ அவர்கள் பொறுப்பேற்றார்.

1964 ல் பொறுப்பேற்ற அருட்பணி. மோத்தா அவர்கள் லூர்து அன்னை கெபியினை கட்டி, சகாயமாதா நவநாளினை அறிமுகம் செய்தார். தினமும் மாலை திருப்பலியினையும் தொடங்கி வைத்தார்.

1981 இல் பொறுப்பேற்ற அருட்பணி. திவ்யானந்தம் அவர்கள் 1984 ஆம் ஆண்டு பங்கின் வெள்ளிவிழாவை அனைவரும் வியக்கும் வண்ணம் கொண்டாடினார்.

அருட்பணி. ஜெரோம் எரோணிமூஸ் அவர்கள் 2008 ஆம் ஆண்டு பங்கின் பொன்விழாவைத் தொடங்கி வைத்தார்.

அவரைத் தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. லூயிஸ் அவர்கள் 2010 ஆம் ஆண்டு பொன்விழா நினைவாக மக்களின் முழு ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவியுடன் ஆலயத்தை புதுப்பித்தார்.

அருட்பணி. எட்வின் சகாயராஜ் அவர்கள் 2013 ஆம் ஆண்டு புதிய பீடத்தையும், 2014 ஆம் ஆண்டு புதிய கொடிமரத்தினையும், 2015 ஆம் ஆண்டு 22 அடி உயர புனித வளனாரின் திருஉருவத்தையும், 2016 உம் ஆண்டு எழில்மிகு அன்னையின் கெபியையும், நற்கருணை சிற்றாலயத்தையும் அமைத்தார்.

2017 மே மாதத்தில் பொறுப்பேற்ற அருட்பணி. செபாஸ்டின் அடிகளார், புனித வளனார் பள்ளியின் விரிவாக்க கட்டிடத்தையும், பங்குத்தந்தை இல்லத்தை புதுப்பிக்கும் பணிகளைச் செய்தார். பங்கு தோற்றமாகிய (1959-2019) வைரவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. வைரவிழா நினைவாக கனவுகாணும் யோசேப்பு கெபி மற்றும் புனித லூர்து அன்னை கெபி அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு புதன்கிழமையும் புனித வளனாருக்கான சிறப்பு நவநாள் நடைபெறுகிறது. மாதத்தின் முதல் புதன்கிழமை புனித வளனாரின் தேர்பவனியும் நடைபெறுகிறது. மாதத்தின் முதல் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கல்வாரி கெபியிலும் மாதா கெபியிலும் திருப்பலிகள் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் திருவிழா ஏப்ரல் முதல் 22 ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி மே 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 30 ஆம் தேதியன்று புனித வளனாரின் திருவுருவம் தாங்கிய தேர்பவனி நடைபெறும்.

கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு மற்றும் புனித வாரநாட்களில் புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் திருப்பலிகள் நடைபெறுகிறது. இத்திருப்பலியில் பெருந்திரளான மக்கள் பங்கேற்கின்றனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் ஆலயம் வந்து திருமணவரம், வேலைவாய்ப்பு, குழந்தைவரம் வேண்டி பெற்றுக் கொள்கின்றனர். பங்கின் வளர்ச்சியிலும், சமூகத்தின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு பங்குத்தந்தையோடு இணைந்து செயல்படும் விதமாக 15 க்கும் மேற்பட்ட இயக்கங்கள், பக்தசபை அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பங்கிலிருந்து ஏழை மக்களுக்கென்று புனித வளனார் கல்வி உதவித்திட்டம் மற்றும் திருமண உதவித்திட்டம் வழியாக உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. பங்கில் திருமண தகவல் மையம் ஒன்று சிறப்பாக இயங்கி வருகிறது.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. T. பிரிட்டோ, SJ (1959-1961)
2. அருட்பணி. J. தனசாமி, SJ (1961-1964)
3. அருட்பணி. மோத்தா, SJ (1964-1968)
4. அருட்பணி. T. A. சூசை (1968-1978)
5. அருட்பணி. V. M. இருதயம் (1978-1981)
6. அருட்பணி. M. திவ்யானந்தம் (1981-1985)
7. அருட்பணி. அருள்வளன் (1985-1986)
8. அருட்பணி. S. M. செல்வராஜ் (1986-1988)
9. அருட்பணி. J. ஜூடு வடக்காரா (1988-1989)
10. அருட்பணி. M. ஞானப்பிரகாசம் (1989-1992)
11. அருட்பணி. அருள் (1992-1994)
12. அருட்பணி. வி. மி. சார்லி (1994-1999)
13. அருட்பணி. S. M. செல்வராஜ் (1999-2004)
14. அருட்பணி. ஜெரோம் எரோணிமூஸ் (2004-2009)
15. அருட்பணி. லூயிஸ் (2009-2012)
16. அருட்பணி. எட்வின் சகாயராஜ் (2012-2017)
17. அருட்பணி. S. செபாஸ்டின் (2017 முதல்...)

பங்கின் பக்தசபைகள்:
1. பங்குப்பேரவை
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. மரியாயின் சேனை
4. புனித வளனார் கத்தோலிக்க இளையோர் இயக்கம்
5. புனித வளனார் கத்தோலிக்க இளம்பெண்கள் இயக்கம்
6. பாடகற்குழு
7. பீடப்பணியாளர்கள் இயக்கம்
8. மறைக்கல்வி மாணவ மாணவியர்கள்
9. பெண்கள் பணிக்குழு
10. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
11. திரு இருதய நண்பர்கள் குழு
12. மீட்பரின் நற்செய்தி பணிக்குழு
13. நன்மரண சபை
14. திருவழிபாட்டுக் குழு
15. புனித வளனார் நற்செய்தி குழு
16. சமூக நல இயக்கம்
17. திருமண உதவிக்குழு
18. கல்வி உதவிக்குழு.

துறவற இல்லங்கள் :
1. இயேசு சபை குருக்கள் இல்லம்
2. திரு இருதய சபை அருட்சகோதரர்கள் இல்லம்
3. லயன்சின் புனித வளன் அருட்சகோதரிகள் இல்லம்
4. மரியின் ஊழியன் சபை அருட்சகோதரிகள் இல்லம்.

பங்கின் கல்வி நிறுவனங்கள்:

1. புனித ஜோசப் நர்சரி & பிரைமரி பள்ளி (பங்கு நிர்வாகம்)
2. ஆர்.சி. தொடக்கப்பள்ளி (பங்கு நிர்வாகம்)
3. புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி (மறைமாவட்ட நிர்வாகம்)
4. புனித பிரிட்டோ மெட்ரிகுலேசன் பள்ளி (மறைமாவட்ட நிர்வாகம்)
5. திருக்குடும்ப பெண்கள் மேல்நிலைப்பள்ளி (துறவற சபை நிர்வாகம்)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. செபாஸ்டின் அவர்கள்.