903 புனித சவேரியார் ஆலயம், கேத்தம்பட்டி கேத்தனஹள்ளி

      

புனித சவேரியார் ஆலயம்

இடம்: கேத்தனஹள்ளி / கேத்தம்பட்டி

மாவட்டம்: தருமபுரி

மறைமாவட்டம்: தருமபுரி

மறைவாட்டம்: தருமபுரி

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: 

தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், தும்பலஹள்ளி அணை

பங்குத்தந்தை: அருள்பணி. முனைவர். P. ஜான் கென்னடி

குடும்பங்கள்: 169 (கிளைப்பங்கு சேர்த்து 201)

அன்பியங்கள்: 6

திருப்பலி நேரங்கள்:

ஞாயிறு காலை 09:00 மணி

வாரநாட்கள் மாலை 06:30 மணி

முதல் வெள்ளி மாலை திருப்பலி முடிந்தவுடன் ஆராதனை

முதல் சனி மாலை திருப்பலி முடிந்தவுடன் தேர்பவனி.

பங்குத் திருவிழா:

டிசம்பர் 3 -சவேரியார் பெருவிழா

மே மாதம் கடைசி வெள்ளி -இருதய ஆண்டவர் பெருநாள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

Fathers:

1) Fr. Arulappan, Varanasi Diocese

2) Fr. Maria Paul Raj, Varanasi Diocese

3) Fr. Francis, ODMI 

Sisters:

1) Sr. Amala, Holy Cross

2) Sr. Sagayam, Gonsaga

3) Sr. Antonyammal, FSM

4) Sr. Clara, Cluny

5) Sr. Kiruba, Gonsaga

6) Sr. Magdlen, Cluny

7) Sr. Gnanamary, Gonzaga, Germany

Brothers:

4) Bro. Francis, Montfort 

5) Bro. Alexander, Montfort

6) Bro. Prince, Montfort (Studying in Seminary)

Map Location: https://goo.gl/maps/AwQwrTvCF7ecY6Xc8

வரலாறு:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் உள்ள கேத்தனஹள்ளி (கேத்தம்பட்டி) என்ற சிற்றூர், அனுமந்தபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இக்கிராமத்தை கேத்தம்பட்டி என்றும் கேத்தனஹள்ளி என்றும் அழைக்கின்றனர். 

1845 ஆம் ஆண்டு திருப்பத்தூர் -கோவிலூர் பகுதியில் இருந்து சில கிறிஸ்தவ குடும்பங்கள், கேத்தம்பட்டியில் நிலம் வாங்கி விவசாயத் தொழிலை செய்து குடியேறினர். ஊருக்கு நடுவில் இரண்டு சென்ட் நிலத்தில் புனித செபஸ்தியார் பெயரில் 1863 ஆம் ஆண்டு சிற்றாலயம் ஒன்று எழுப்பப்பட்டது.

1930 ஆம் ஆண்டில் கடகத்தூர் பங்கின் முதல் கிளை பங்காக கேத்தம்பட்டி திகழ்ந்தது.

பின்னர் 1937 இல் கடகத்தூர் பங்கு தந்தையாக பணியாற்றிய அருள்திரு. மேத்யூ புலிக்கல் அவர்கள், புனித சவேரியார் ஆலயத்தை கட்டும் பணியை துவங்கினார். கட்டிடம் ஜன்னல் உயரத்துக்கு எழுப்பப்பட்ட நிலையில், கடகத்தூர் பங்குத்தந்தையாக அருள்திரு. அலெக்சாண்டர் சவேலி பொறுப்பேற்றார். அவரால் 1938 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, அன்றைய சேலம் ஆயர் ஹென்றி புரூனியர் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது. 

பென்னாகரம் -மடம் என்ற ஊரில் இருந்து பிரான்சிஸ்கன் சகோதரிகள் வெளியேறிய பின்னர், அங்கிருந்த ஆலய மணியை முதலிப்பட்டியை சேர்ந்த வன்னியகவுண்டர் அவர்கள் 60 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி, கேத்தம்பட்டி ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

1939 ஆம் ஆண்டிலிருந்து தூய இருதய ஆண்டவர் திருவிழாவை கேத்தம்பட்டி மக்கள் சிறப்பாக துவங்கினர். 1949 ஆம் ஆண்டு சேலம் மறைமாவட்டம் முதல் ஆயர்  மேதகு ஹென்றி புரூனியர் அவர்கள், ஆயர் பணியில் இருந்து விலகினார். மேதகு V. S செல்வநாதர் மறைமாவட்ட ஆயராக பொறுப்பேற்றார். பணி ஓய்வு பெற்ற மேதகு ஆயர் ஹென்றி புரூனியர் தம் குருத்துவ பணியை ஒரு கிராமத்தில் தொடர விரும்பினார். அதற்காக அவர் கேத்தம்பட்டி கிராமத்தை தேர்ந்தெடுத்தார். 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஆயர் புரூனியர் கேத்தம்பட்டியில் தங்கினார். ஆலயத்தின் பின்புறம் இருந்த சிறிய அறையில் தங்கிய ஆயர் எளிய வாழ்வினை மேற்கொண்டார். 1949 ஆம் ஆண்டு துவக்கப்பள்ளி ஒன்றை தொடங்க விரும்பி ஆலயத்திற்கு அருகில் பள்ளிக்கான நிலம் வாங்கினார். பின்னர் துவக்கப்பள்ளி ஒன்றை 1952 இல் நிறுவினார். இப்போது இது ஆர். சி. பாத்திமா அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

1951 ஆம் ஆண்டு பங்கின் வளர்ச்சிக்காக 8.32 ஏக்கர் நிலத்தை ஆயர் புரூனியர் மறைமாவட்டத்தின் பெயரில் வாங்கினார். சிலுவை ஆண்டவர் என்று பாசத்தோடு அழைக்கப்பட்ட அவரை இன்றும் கேத்தம்பட்டி மக்கள் நன்றியோடு நினைவு கூறுகின்றனர்.

1985 ஆம் ஆண்டு பாலக்கோடு பங்கு உருவானபோது, கேத்தம்பட்டி அதன் கிளை பங்காக ஆனது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ஹென்றி போனால் MEP அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார். பாலக்கோடு பங்குத்தந்தையும், குளூனி கன்னியர்களும் வாரத்தின் இறுதி நாட்களில் கேத்தனஹள்ளியில் மறைப்பணியாற்றி, மக்களின் விசுவாச வாழ்வுக்கு துணையாக நின்றார்கள்.

1930 ஆம் ஆண்டில் 30 குடும்பங்களாக இருந்த இறைமக்களின் எண்ணிக்கை, பின்னர் வந்த ஆண்டுகளில் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆகவே இடநெருக்கடியால் புதிய ஆலயத்திற்கான தேவை ஏற்பட்டது. அதற்கென ஊருக்கு அருகில் 1.6 ஏக்கர் நிலம் 1974 ஆம் ஆண்டு சேலம் ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோவின் முயற்சியால் வாங்கப்பட்டது. 

இந்த நிலையில் புதிய ஆலயம் (இன்றைய ஆலயம்) கட்டப்பட்டு, 25-07-2000 அன்று தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு ஜோசப் ஆண்டனி இருதயராஜ் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது.

1873 ஆம் ஆண்டு புதுவை ஆயர் மேதகு லவுவெனான் கேத்தம்பட்டியை பார்வையிட்டு வந்தார். ஒரு காலத்தில் கேத்தம்பட்டி தனிபங்காக மாறும் என்று அப்போதே கூறினார் (MS ஜோசப் p.72).  என்றபோதிலும் 127 ஆண்டுகளுக்குப் பின் 19-07-2000 அன்று கேத்தம்பட்டி பாலக்கோட்டில் இருந்து பிரிந்து தனிப்பங்கானது. முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை மதலைமுத்து அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் குருக்கள் தங்குவதற்கு அழகிய இல்லத்தை கட்டி முடித்தார். 1990 ஆம் ஆண்டு முதல் தும்மனஹள்ளி அணைப்பகுதியில் குடியேறிய இலங்கை தமிழ் கத்தோலிக்கரின் ஆன்மீகத் தேவையை, கேத்தனஹள்ளி பங்குத்தந்தையர்கள் நிறைவேற்றி வருகின்றார்கள் . 

புனித சவேரியாரின் வழியாக இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்ல, கேத்தம்பட்டிக்கு வாருங்கள்...

குருசடிகள்:

1. கல்வாரி மலை குருசடி

2. புனித அந்தோணியார் குருசடி

3. புனித மகதலா மரியா குருசடி, மாதாமாநகர்

பங்கில் உள்ள கெபி:

அன்னை வேளாங்கண்ணி கெபி

பங்கில் உள்ள பள்ளி: 

ஆர். சி. பாத்திமா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி.

பங்கில் பணியாற்றிய பங்கு தந்தையர்களின் பெயர்கள்:

1. அருள்பணி. A. மதலைமுத்து (2000-2001)

2. அருள்பணி. M. சவரியப்பன் (2001-2006)

3. அருள்பணி. A. சூசைராஜ் (2006-2008)

4. அருள்பணி. G. பாக்கியநாதன் (2008-2011)

5. அருள்பணி. C. இலாசர் (2011-2015)

6. அருள்பணி. A. சூசைராஜ் (2015-2016)

7. அருள்பணி. முனைவர். S. ஹென்றி ஜார்ஜ் (2016-2017)

8. அருள்பணி. M. மோசஸ் (2017-2021)

9. அருள்பணி. முனைவர். P. ஜான் கென்னடி (2021 முதல்..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருள்பணி. முனைவர். P. ஜான் கென்னடி அவர்கள். 

தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள் திரு. Yesudass Joseph  கிருஷ்ணகிரி.