மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம் : கோட்டார்
மறைவட்டம் : தேவசகாயம் மவுண்ட்
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு :
புனித மலை சவேரியார் ஆலயம், காரியான்கோணம்
பங்குத்தந்தை : அருட்பணி. K. மரியதாஸ்
குடும்பங்கள் : 280
அன்பியங்கள் : 11
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு காலை : 07.00 மணிக்கு செபமாலை, காலை 07.30 மணிக்கு திருப்பலி.
திங்கள், வியாழன், வெள்ளி, சனி திருப்பலி :காலை 06.30 மணிக்கு.
புதன் மாலை 05.30 மணிக்கு செபமாலை, சகாயமாதா நவநாள், திருப்பலி, நோயுற்றோருக்கான செபம்.
மாதத்தின் முதல் வெள்ளி மாலை 05.30 மணிக்கு செபமாலை, புனிதரின் நவநாள், திருப்பலி, நோயுற்றோருக்கான செபம், எண்ணெய் பூசுதல், நற்கருணை ஆசீர்.
மாதத்தின் மூன்றாவது சனி மாலை 06.30 மணிக்கு கெபியில் செபமாலை, திருப்பலி, நோயுற்றோருக்கான செபம்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 06.00 மணிக்கு கெபியில் செபமாலை, புகழ்மாலை.
திருவிழா: அக்டோபர் 04 -ஆம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள். ஒன்பது மற்றும் பத்தாம் திருவிழாவின் போது சிறப்பு தேர்பவனி.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. பால் லியோன்
2. அருட்பணி. அந்தோணி தாஸ்
3. அருட்பணி. பென்சிகர்
4. அருட்பணி. ஆன்றனி அருள் ஜெரால்டு
5. அருட்பணி. பவுலிஸ்
6. அருட்பணி. ஜான் பால்
7. அருட்சகோதரி. செலின், CTC
வழித்தடம் : நாகர்கோவிலிருந்து 4 route பேருந்துகள்.
Address and location Map : St.Francis Assisi Church, Marthal
Marthal, Thittuvilai, Tamil Nadu 629852
https://maps.google.com/?cid=4035931774100792088
வரலாறு :
சுற்றிலும் மலைகள், காணும் இடமெல்லாம் அழகிய வயல்வெளிகள், சலசலத்து ஓடும் வாய்க்கால்கள், பசும் மரச் சோலைகள் என இயற்கையின் அத்தனை கொடைகளையும் கொண்ட அழகிய ஊர் தான் மார்த்தால். இந்த அழகிய ஊரில் ஓங்கி நிற்கும் தூய பிரான்சிஸ் அசிசியார் ஆலய வரலாற்றைக் காண்போம்.
அருட்பணி. ஜான்மேரி அவர்களின் முயற்சியால் மார்த்தால் பகுதியில் 01.04.1929 அன்று ஒரு சிற்றாலயம் அமைக்கப்பட்டு, புனித பிரான்சிஸ் அசிசியாரை பாதுகாவலராகக் கொண்டு, நாகர்கோவில் குருசடி பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.
கோட்டார் மறைமாவட்டத்தில் புனித பிரான்சிஸ் அசிசியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயமும், ஒரே ஆலயம் இது என்பது குறிப்பிடத் தக்கது.
குருசடி பங்கிலிருந்து அருட்பணியாளர்கள் இங்கு வந்து, இப்பகுதி மக்களை ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தினார்கள்.
வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் 25.07.1936 அன்று தனிப்பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. E. பிரான்சிஸ் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தினார்கள்.
தற்போது புனித பிரான்சிஸ் அசிசியார் சமூக நலக்கூடமானது இருக்கும் இடத்தில், பங்குதந்தை இல்லம் கட்டப்பட்டது.
தனிப் பங்கான தொடக்க காலத்தில் எட்டாமடை, தடிக்காரன்கோணம், சுருளோடு, கீரிப்பாறை, செக்கடி, பெருந்தலைக்காடு, திடல், தெள்ளாந்தி, சீதப்பால் மற்றும் இறச்சகுளம் ஆகியன மார்த்தாலின் கிளைப் பங்குகளாக விளங்கின.
1973 ல் எட்டாமடை மற்றும் தடிக்காரன்கோணம் ஆகியன தனிப் பங்குகளாயின.
அருட்பணி. மார்ட்டின் அலங்காரம் (1972-1978) பணிக்காலத்தில் திட்டுவிளையிலிருந்து ஆலயம் வரை உள்ள சாலை சீர்செய்யப்பட்டது.
அருட்பணி. S. ஜோசப் பணிக்காலத்தில் (1982-1990) அம்பர் சர்க்கா ராட்டை தொழில் மற்றும் பீடி சுற்றும் தொழில், தட்டச்சு பயிற்சி ஆகியன தொடங்கப் பட்டது.
பங்கு ஆலயமானது புதுப்பிக்கப்பட்டு 23.08.1988 அன்று குருகுல முதன்மைப் பணியாளர் அருட்பணி. சூசை மரியான் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
அருட்பணி. செல்லையன் (1990- 1993) பணிக்காலத்தில் அன்பியங்கள் துவக்கப் பட்டன. மேலும் இவரது பணிக்காலத்தில் தூய அசிசி ஆங்கிலப்பள்ளி, அருட்சகோதரிகள் இல்லம் ஆகியன நிறுவப்பட்டு பங்கின் வளர்ச்சிக்கு வழி காட்டினார்.
அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் (1993-1996) பணிக்காலத்தில் புதிய பங்குதந்தை இல்லம் கட்டி முடிக்கப்பட்டது.
அருட்பணி. மரிய மிக்கேல் (1996-2001) பணிக்காலத்தில் புனித அசிசியார் கலைக்குழு சிறப்புற்று விளங்கியது. அன்றைய இளைஞர்களின் முயற்சியால் ஆலயத்தின் முன்புறம் காணப்பட்ட பள்ளங்கள் நிரப்பப்பட்டு சரிசெய்யப்பட்டது.
ஆலயத்தின் முன்பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டு 09.10.1999 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அர்ச்சிக்கப் பட்டது.
2002 ஆம் ஆண்டு சீதப்பால் தனிப் பங்கானது.
2006 ஆம் ஆண்டு செக்கடி தனிப் பங்கானது.
அருட்பணி. பெனோ ராஜ் பணிக்காலத்தில் மார்த்தால் பங்கு மக்களின் ஒத்துழைப்பு மற்றும் நன்கொடையால் ஆலயம் அழகுற புதுப்பிக்கப்பட்டு 06.05.2009 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
அருட்பணி. ஆன்றனி கோமஸ் பணிக்காலத்தில் திருமண மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
புனித லூர்து அன்னை கெபி கட்டப்பட்டு 15.08.2019 அன்று பங்குத்தந்தை அருட்பணி. K. மரியதாஸ், இணைப் பங்குத்தந்தை அருட்பணி. A. ஆரோக்கிய ஜெனிஷ் ஆகியோரால் அர்ச்சிக்கப் பட்டது. பங்குதந்தை அருட்பணி. மரியதாஸ் அவர்களின் முயற்சி மற்றும் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் மண்டபத்தின் கீழ் மற்றும் மேல் தளங்கள் கட்டி முடிக்கப்பட்டது. கீழ்த்தளமானது 11.04.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது. மேல்த்தளமானது 15.08.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது. மக்களரங்கம் கட்டப்பட்டு 31.05.2023 அன்று திறந்து வைக்கப்பட்டது.
2021 வரை திட்டுவிளை, திடல் ஆலயங்கள் மார்தாதாலின் கிளைப் பங்குகளாக செயல்பட்டு வந்தன. 2021 பிப்ரவரி மாதத்தில் திட்டுவிளை தனிப் பங்கான போது திடல் அதன் கிளைப் பங்காக ஆனது.
தற்போது காரியாங்கோணம் ஆலயம் மட்டுமே மார்த்தாலின் கிளைப் பங்காக செயல்பட்டு வருகிறது.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. பங்கு அருட்பணிப் பேரவை
2. நிதிக்குழு
3. அன்பிய ஒருங்கிணையம்
4. மறைக்கல்வி
5. வழிபாட்டுக் குழு
6. பாடகற்குழு
7. பீடச்சிறார்கள்
8. பாலர் சபை
9. சிறுவழி இயக்கம்
10. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
11. இளைஞர் இயக்கம்
12. புனித வின்சென்ட் தே பவுல் சபை
13. பிரான்சிஸ்கன் 3 ஆம் சபை
14. பெண்கள் கிராம முன்னேற்ற சங்கம்
15. குடும்ப நலப் பணிக்குழு
16. இறையழைத்தல் பணிக்குழு
17. மரியாயின் சேனை
18. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. அருட்பணி. ஜான்மேரி (1929-1936)
2. அருட்பணி. பிரான்சிஸ் (1936-1940)
3. அருட்பணி. லூக்காஸ் (1940-1943)
4. அருட்பணி. பால்ஸ்டீபன் (1943-1949)
5. அருட்பணி. ரபேல் (1944-1951)
6. அருட்பணி. ஏசுதாசன் (1951-1952)
7. அருட்பணி. அகஸ்டின் பெர்னாண்டோ (1952-1957)
8. அருட்பணி. ஜார்ஜ் வி. எம் (1957-1961)
9. அருட்பணி. சூசைய்யா (1961-1967)
10. அருட்பணி. கிறிஸ்துதாஸ் (1967-1972)
11. அருட்பணி. மார்ட்டின் அலங்காரம் (1972-1978)
12. அருட்பணி. அருளப்பன். எஸ் (1978-1982)
13. அருட்பணி. ஜோசப். எஸ் (1982-1990)
14. அருட்பணி. செல்லையன். பி. கே (1990-1993)
15. அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் (1993-1996)
16. அருட்பணி. மரியமிக்கேல் (1996-2001)
17. அருட்பணி. லியோ அலெக்ஸ் (2001-2003)
18. அருட்பணி. பெர்பெச்சுவல் (2003-2006)
19. அருட்பணி. பெனோராஜ் (2006-2010)
20. அருட்பணி. ஆன்றனி கோமஸ் (2010-2014)
21. அருட்பணி. புஷ்பராஜ் (2014-2019)
22. அருட்பணி. K. மரியதாஸ் (2019 முதல் தற்போது வரை..)
இணைப் பங்குத்தந்தையர்கள் :
அருட்பணி. குருசு கார்மல்
அருட்பணி. லிகொரியஸ்
அருட்பணி. ஆரோக்கிய ஜெனிஷ்
இயற்கையையும், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றையும் அதிகமாக நேசித்த புனித பிரான்சிஸ் அசிசியார் எளிமையானவர், ஏழ்மையை அதிகமாக நேசித்தவர். பாலன் இயேசுவுக்கு முதன் முதலாக குடில் அமைத்து வழிபாடு நடத்தியவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த புனிதரின் ஆலயம் அமைந்துள்ள மார்த்தால் வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்....
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருள்பணி. K. மரியதாஸ் அவர்கள்.