896 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், கிருஷ்ணாபுரம்

      

புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்

இடம்: கிருஷ்ணாபுரம், துறையூர் தாலுகா, கோவிந்தபுரம் அஞ்சல், 621008

மாவட்டம்: திருச்சி

மறைமாவட்டம்: கும்பகோணம்

மறைவட்டம்: பெரம்பலூர்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், துறையூர் 

பங்குத்தந்தை அருட்பணி.‌ P. அகஸ்டின்

குடும்பங்கள்: 83

ஞாயிறு காலை 07:00 மணிக்கு திருப்பலி

நாள்தோறும் மாலை 06:30 மணி ஜெபமாலை

திருவிழா: ஜூலை மாதத்தில் இரண்டாவது சனி ஞாயிறு

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. R. லூயிஸ்

2. அருட்பணி.‌ N. பிரான்சிஸ் சேவியர்

3. அருட்பணி. S. லூர்துசாமி

4. அருட்சகோதரி. S. பபியானா

5. அருட்சகோதரி. S. பார்பரா

6. அருட்சகோதரி.‌ A. கிளாரா (late)

7. அருட்சகோதரி. S. சந்தனசிந்தியா மேரி

8. அருட்சகோதரி. S. மணி

9. அருட்சகோதரி. D. அமல் (late)

10. அருட்சகோதரி. D. குழந்தைதெரஸ்

11. அருட்சகோதரி. S. சாந்தி

12. அருட்சகோதரி. S. பிரான்சிஸ்கா

13. அருட்சகோதரி. J. ரீனா

14. அருட்சகோதரி. S. பவுலாமேரி

15. Bro. K. சிமியோன்

வழித்தடம்:

திருச்சி -துறையூர் -செல்லிபாளையம் வழித்தடத்தில், துறையூரிலிருந்து 4கி.மீ தொலைவில் கிருஷ்ணாபுரம்  அமைந்துள்ளது. 

காவிரியிலிருந்து 40கி‌.மீ

காவிரிக்கு வடக்கே 45கி.மீ

கொல்லிமலைக்கு தெற்கே 23கி.மீ

புளியஞ்சோலை 22கி.மீ 

பச்சைமலைக்கு தெற்கே 10கி.மீ.

Location map: https://maps.app.goo.gl/6hVV2gnCc9jxZ7Nr9

வரலாறு:

கிருஷ்ணாபுரம் கிராம இறைமக்களுக்காக, புறத்தாக்குடி, கல்பாளையம் மிஷனரி குருக்களால் கிருஷ்ணாபுரத்தில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் 1923-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1923-ஆம் ஆண்டு முதல் 1937-ம் ஆண்டு வரை கோட்டப்பாளையம் பங்கின் கீழ் கிருஷ்ணாபுரம் செயல்பட்டு வந்தது. 1937-ம் ஆண்டு முதல் 1974-ம் ஆண்டு வரை பெருமாள்பாளையம் பங்குத்தலத்துடன் இணைந்து செயல்பட்டது. 

1974-ம் ஆண்டு முதல் துறையூர் பங்குத்தலத்துடன் கிருஷ்ணாபுரம் கிளைப் பங்காக செயல்பட்டு வருகிறது.

1990 ஆம் ஆண்டு அருட்பணி.‌ A. அந்தோணி ராஜன் அவர்களின் முயற்சியால் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

1996 ஆம் ஆண்டு பங்குத்தந்தை அருட்பணி. K. பால்தாஸ் அவர்களின் முயற்சியால் கொடிமரம் புதுப்பிக்கப்பட்டு, கல்லறைத் தோட்டத்திற்கு வேலி அமைக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு அருட்பணி. M. குழந்தை ராஜ் முயற்சி மற்றும் மக்களின் பங்களிப்புடன் ஆலயத்தின் உட்புறம் வர்ணம் பூசப்பட்டது. மேலும் கல்லறைத் தோட்டத்தில் வியாகுல மாதா ஆலயம் கட்டப்பட்டு, மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டு ஆலய வளாகத்தில் கலையரங்கம் கட்டப்பட்டது.

அருட்பணி. P. ஹென்றி புஷ்பராஜ் முயற்சியால், திரு. குழந்தை சாமி அவர்கள் இலவசமாக வழங்கிய நிலத்தில் 2011 ஆம் ஆண்டு புதிய பள்ளிக்கூட கட்டிடத்திற்கு மறைமாவட்ட முதன்மை குரு அருட்பணி. பீட்டர் பிரான்சிஸ் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. பள்ளிக்கூடத்திற்கு ஒன்றிய கவுன்சிலர் திரு. தர்மன் இராஜேந்திரன் அவர்களும், கிராம மக்களும் இதற்கு பேருதவி புரிந்தனர். 

மண்ணின் மைந்தர் அருட்பணி. லூயிஸ் அவர்களின் குருத்துவ வெள்ளிவிழா, ஆலயத் திருவிழா, உறுதி பூசுதல் விழா, ஆர்.சி தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் திறப்புவிழா (முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. ஹென்றி புஷ்பராஜ் பணிக்காலத்தில் பணிகள் தொடங்கப்பட்டு, அருட்பணி. J. மைக்கேல் ராஜ் பணிக்காலத்தில் நிறைவு செய்யப்பட்டது), ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா என ஐம்பெரும் விழா 13.07.2013 அன்று கொண்டாடப்பட்டது.

மக்களின் முயற்சியால் பங்குத்தந்தை அருட்பணி. J. மைக்கேல் ராஜ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ஆர். சி சமூக நலக்கூடமானது கட்டிமுடிக்கப்பட்டு, பங்குத்தந்தை அருட்பணி. P. அகஸ்டின் அவர்களால் 2018 ஆம் ஆண்டு அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

ஆலய நூற்றாண்டு விழா நினைவாக ஆலயமானது அழகுற புதுப்பிக்கப்பட்டு, சுற்றிலும் பேவர்பிளாக் போடப்பட்டு, 15.07.2023 அன்று குடந்தை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆலயத்தில் உள்ள கெபிகள்:

1. புனித லூர்து மாதா கெபி

2. புனித அந்தோனியார் கெபி

பங்கேற்பு அமைப்புகள்:

1. மரியாயின் சேனை

2. இளையோர் இயக்கம்

ஆர்.சி தொடக்கப்பள்ளி:

1927 ஆம் ஆண்டு ஆரம்பிப்பட்டது.‌ பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

கிருஷ்ணாபுரத்தில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

கோட்டப்பாளையம் பங்கின் கீழ்:

1. Fr. மெர்ச்சிரி (1922-1924)

2. Fr. M. சஞ்சீவி (1924)

3. Fr. ஹவுமண்ட் (1924-1925)

4. Fr. மைக்கேல் (1925-1926) 

5. Fr. ஹவுமண்ட் (1926-1928)

6. Fr. M. R. குழந்தை (1928-1929)

7. Fr. பாக்கியநாதர் (1929)

8. Fr. S. அம்புரோஸ் (1929-1930)

9. Fr. A. ஆரோக்கிய சாமி (1930-1937)

பெருமாள்பாளையம் பங்கின் கீழ்:

1. Fr. பாலக்கல் (1937-1940)

2. Fr. லூர்துநாதர் (1940-1951)

3. Fr. மரிய மைக்கேல் (1951-1952)

4. Fr. ஆபிரகாம் (1952-1955)

5. Fr. ரோச் மாணிக்கம் (1955-1958)

6. Fr. A. P. அருள்சாமி (1958-1959)

7. Fr. M. தாவீது (1959-1962)

8. Fr. செபாஸ்டின் (1963-1964)

9. Fr. M. குழந்தை (1965-1967)

10. Fr. சின்னப்பநாதன் (1967-1970)

11. Fr. G. சூசைநாதன் (1970-1974)

துறையூர் பங்கின் கீழ் 16.07.1974 முதல்:

1. Fr. A. அந்துவான் (1974-1975)

2. Fr. S. ராயலு (1977-1987)

3. Fr. A. அந்தோணிராஜன் (1987-1990)

4. Fr. A. அருள்ராஜ் (1990-1992)

5. Fr. K. பால்தாஸ் (1992-2000)

6. Fr. M. குழந்தைராஜ் (2000-2006)

7. Fr. P. ஹென்றி புஷ்பராஜ் (2006-2012)

8. Fr. J. மைக்கேல் ராஜ் (2012-2018)

9. Fr. P. அகஸ்டின் (2018----)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தையின் வழிகாட்டலில், ஆலய பொறுப்பாளர் திரு. அந்தோணி சாமி அவர்கள்.