871 புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயம், வேட்டவலம்

           

புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயம் -கேட்டவரம் தரும் புனித சூசையப்பர் மலைக்கோயில் திருத்தலம் 

இடம்: வேட்டவலம், 606754

மாவட்டம்: திருவண்ணாமலை

மறைமாவட்டம்: வேலூர்

மறைவட்டம்: வேட்டவலம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித அருளானந்தர் ஆலயம், ஓலைப்பாடி

2. புனித அந்தோனியார் ஆலயம், நாரையூர் 

பங்குத்தந்தை பேரருட்பணி. A. ஆரோக்கியசாமி (மறைவட்ட முதல்வர்) 

உதவி பங்குத்தந்தை அருட்பணி. S. வேளாங்கண்ணி 

குடும்பங்கள்: 840

அன்பியங்கள்: 17

வழிபாட்டு நேரங்கள்

ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி மற்றும் காலை 08:00 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணி

மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 06:00 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி 

மாதத்தின் முதல் புதன் காலை 06:00 மணி புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி (மலைக்கோவிலில்) மாலை 06:00 மணி திருப்பலி (பங்கு ஆலயத்தில்)

முதல் வெள்ளி காலை 06:00 மணி திருஇருதய ஆண்டவர் நவநாள் திருப்பலி. மாலை 06:00 மணி திருஇருதய ஆராதனை

முதல் சனி மாலை 06:00 மணி அன்னையின் தேர்பவனி, ஜெபமாலை, திருப்பலி (கெபியில்) 

திருவிழா: டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றம். ஜனவரி மாதம் 03 ஆம் தேதி ஆடம்பர தேர்பவனி

மலைக்கோயில் திருவிழா: ஜனவரி மாதம் 02 ஆம் தேதி.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. D. பெரியநாயகம்

2. அருட்பணி.‌ M. R. துரைஜாய், MEP

3. அருட்பணி. M. கோர்கோனியுஸ், SJ

4. அருட்பணி.‌ S. மேரி ஜான், SVD

5. அருட்பணி. M. ஜோ லூர்துசாமி, Vellore Diocese

6. அருட்பணி. S. அருளப்பன், Vellore Diocese

7. அருட்பணி. C. ராயப்பன், SVD

8. அருட்பணி. M. பெரியநாயகம், SJ

9. அருட்பணி. S. மரியசூசை

10. அருட்பணி. M. அமலதாஸ், CPPS

11. அருட்பணி. S. ஜான்பீட்டர், SIOL

12. அருட்பணி.‌ C. அமலநாதன், SVD

13. Bro. C. ஜோ டோனிதாஸ், SJ

14. அருட்பணி. M. ஜெரார்ட் மர்ஜிலா, SIOL

15. அருட்பணி.‌ S. சேவியர் அமல்ராஜ், SVD

16. அருட்பணி. A. மங்களடேவிட், Vellore Diocese

17. அருட்பணி. S. ஜூலியன், SJ

18. அருட்பணி. C. பால்ராஜ், SDS

19. அருட்பணி. C. பன்னீர்செல்வம், CPPS

20. அருட்பணி. A. டேவிட், CPPS

21. அருட்பணி. A. சூசைநாதன், CPPS

22. அருட்பணி. A. ஞானமணி, CPPS

23. அருட்பணி. A. பாலசுந்தரம், CPPS

24. அருட்பணி. A. தோமினிக் சேவியர், Janchi diocese

25. அருட்பணி. M. பெர்னார்டின் செல்வதுரை, OSM

26. அருட்பணி. A. ராயப்பன், OMI

27. அருட்பணி. T. ஜெனித் வில்லியம், SJ

28. அருட்பணி.‌ A. ஜோசப்சன், Vellore Diocese

29. அருட்பணி. S. கிறிஸ்டின் ஜெயசீலன், OMI

30. அருட்பணி. G. ஆண்ட்ரூஸ் லோபு, SVD

31. அருட்பணி. M. அந்தோனி பீட்டர் இம்மானுவேல், OMI

32. அருட்பணி. A. விக்டர் ஆல்பர்ட் லியோ

33. அருட்பணி.‌ S. பீட்டர் சானல், CPPS

34. அருட்பணி. A. மரியாந்து பெலவேந்திரன், MS

35. அருட்பணி.‌ A. குழந்தையேசு ராஜன், CMF

36. அருட்பணி. M.  குழந்தையேசு ராஜா, SVD (ஓலைப்பட்டி)

37. அருட்பணி. A. சதீஷ் சாந்தராஜ், MMI

38. அருட்பணி.‌ K. பீட்டர் பால், MS

மண்ணின் அருட்சகோதரிகள்:

1. Sr. மரியன்னா

2. Sr. சூசைஜீஸ்தின் மேரி

3. Sr. சகாயம்

4. Sr. தார்சியுஸ்

5. Sr. செராபின் மேரி

6. Sr. இரும்பினா

7. Sr. பெர்பெத்துவா, CSJ

8. Sr. மரிய புஷ்பம்

9. Sr. சலேத்மேரி

10. Sr. லூயிசா

11. Sr. சகாய மேரி

12. Sr. பெரிய நாயகம்

13. Sr. பிலோமினா

14. Sr. புஷ்பராணி

15. Sr. சகாயமேரி

16. Sr. மரிய செல்வி

17. Sr. A. ராஜேஸ்வரி, FSAG

18. Sr. P. அபித்தா சந்தனசெல்வி, SJT

19. Sr. ஆரோக்கிய ராணி, SCB

20. Sr. அந்தோணியம்மாள், SJT

21. Sr. A. பவுலின் சகாய ராணி, FSAG

22. Sr. S. மத்திமார்கிரேட், FSAG

23. Sr. M. மோட்சராக்கிணி, FSA

24. Sr. A. ஆரோக்கிய ராணி

25. Sr. கிலிட்டா சுமங்கலி, FSAG

26. Sr. சூசைலதா, FMA

27. Sr. மாலாசீனா

28. Sr. R. மோனிக்கா மேரி, PHJC

29. Sr. J. லில்லி புஷ்பம், MMI

30. Sr. லூர்து மேரி

31. Sr. ஜெனித்தா மேரி, FMM

32. Sr. H. ஜாய்ஸ் சாந்தி, FSAG

33. Sr. S. ரோஸ்லின் மேரி, SJT

34. Sr. ஆரோக்கிய அமலி, FSAG

35. Sr. மோனிஷா ஜாய்ஸி, FSAG

36. Sr. A. ஸ்டெபிகிராப் மேரி

37. Sr. ஏஞ்சல் சவரியம்மாள், SMI

38. Sr. T. ஜான்சி அமலராணி, FSAG

வழித்தடம்: விழுப்புரம் -கண்டாச்சிபுரம் வழி வேட்டவலம்

திருவண்ணாமலை -வேட்டவலம்

Location map: https://g.co/kgs/T43Z6U

பங்கு வரலாறு:

வேட்டவலம் பெயர்க்காரணம்:

சங்க இலக்கியங்களில் மூவேந்தர்களுக்கு இணையாக போற்றப்படும் கடையெழு வள்ளல்களில் திருக்கோவலூர் மலையமான் நெடுமுடிக்காரியும் ஒருவன். மலையமான் என்பது இவனது வம்சத்தை குறிக்கும், மலையமான் மன்னர்கள் ஆண்ட திருக்கோவலூர் பகுதி மிலாடு (மலையமான் நாடு என்பதன் திரிபு) நாட்டின் தலைநகரமாக வேட்டைவலம் இருந்தது. பொது ஆண்டு 1151ல் எழுதப்பட்ட இரண்டாம் ராஜராஜனின் கல்வெட்டில் ‘மிலாடான வேட்டைவலம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் ஜமீன்தார்களின் ஆட்சியில் சிங்கவரம், சிங்க நகர் என்றெல்லாம் மாறி தற்போது வேட்டவலம் என அழைக்கப்படுகிறது.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் குறுநில மன்னர்கள் வேட்டவலத்தை ஆட்சிபுரிந்து வந்தார்கள். ஆற்காடு நவாப் அரசர் வேலூருக்கு அருகில் உள்ள ஆற்காட்டை தலைநகரமாகக் கொண்டு வேலூர், திருவண்ணாமலை, வேட்டவலம் போன்ற இடங்களை ஆட்சி செய்தனர். 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு நுழைந்த போது, சேர  சோழர்களின் ஆதிக்கம் வேட்டவலத்தில் இருந்தது. வடநாட்டில் இருந்த வேடர்வனம் - வேட்டவலம் என்ற சொல்லாடல், சேர சோழர் காலத்தில் இருந்தது.

1840 ஆம் ஆண்டுவரை வேட்டவலம், பாண்டிச்சேரி மறைமாவட்டத்தின் கீழ் அத்திப்பாக்கத்தின் கிளைப்பங்காக இருந்தது. 1840 ஆண்டு பங்காக பிரிக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தது. தற்போது வேட்டவலம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் பழைமையான பங்காக திகழ்கிறது. வேட்டவலத்தில் கிறிஸ்தவத்தின் தொன்மையை உறுதிபடுத்த, ஒரே ஆதாரம் புனித அருளானந்தர் தங்கி வசித்த இடங்களில் வேட்டவலமும் ஒன்றாகும். 

MEP பிரான்ஸ் நாட்டு மத போதகர்களால்,

1858 ஆம் ஆண்டு வேட்டவலத்தில் ஆலயம் கட்டப்பட்டது. அதன் பிறகு பங்குத்தந்தை வசிக்கும் அறைகள் 1861-1869 ஆண்டுகள் வரை கட்டப்பட்டது. 

1870 ஆம் ஆண்டு ஆலத்தின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. 1865 அண்டு தந்தை தாராஸ் பணிக்காலத்தில், மக்களை காலரா கொள்ளை நோய் தாக்கியதால், புனித சூசையப்பரிடம் வேண்டியதால், கிறிஸ்தவ மக்கள் எவரும் தொற்று நோயால் சாகமல் புனிதரின் பரிந்துரையால் பாதுகாப்புடன் வாழ்ந்தனர். 

ஆகவே கேட்டவரம் தரும் புனித சூசையப்பருக்கு மலைக்கோயிலில் சிற்றாலயம் கட்டப்பட்டது. வேட்டவலத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இராணுவத்தில் பணிபுரிந்தனர். ஆகையினாலேயே, முதல் உலகப்போரில் வேட்டவலம் பங்கின் படைவீரர்கள் எவரும் இறக்கவில்லை.

மேலும் தூய லூர்து அன்னையின் எழில் மிகு கெபி 1918 ஆம் ஆண்டு  கட்டப்பட்டது.

மக்களின் அறிவுக்கண் திறக்க, 1908 ஆம் ஆண்டு  புனித மரியன்னை துவக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

1919 ஆம் ஆண்டு புனித அலோசியஸ் கன்னியர் மடம் தொடங்கப்பட்டது. 

1945-1950 காலகட்டத்தில் தொடக்கப்பள்ளியானது, தடுநிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது. 

1969 ஆம் ஆண்டு, வேட்டவலம் பங்கானது வேலூர் மறைமாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. 

பழைய ஆலயம் இடிக்கப்பட்டு, தற்போது உள்ள புதிய ஆலயம் கட்டப்பட்டு, 02.01.2011 அன்று சென்னை -மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு Dr. A. M. சின்னப்பா, SDB அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. தற்போது ஆலயமானது, வர்ணம் தீட்டப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இயற்கை எழிலோடு எல்லாமக்களும் செபிக்கும் செபவீடாக இருக்கிறது.

மலைக்கோயில் எனப்படும் கேட்டவரம் தரும் புனித சூசையப்பர் திருத்தல திருவிழாவானது, ஜனவரி மாதம் 02 ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான இறைமக்கள் வருகை தருகின்றனர்.

பங்கில் உள்ள கல்வி நிலையங்கள்:

1. புனித மரியன்னை RCM துவக்கப்பள்ளி

2. புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 

கன்னியர் மடம்:

புனித அலோசியஸ் கொன்சாகா சபை கன்னியர் மடம் உள்ளது. இவர்கள் வழிநடத்தும் கல்வி நிலையங்கள். 

1. புனித அலோசியஸ் துவக்கப் பள்ளி (ஆங்கிலம்)

2. புனித அலோசியஸ் துவக்கப் பள்ளி (தமிழ்)

3. புனித அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. சூசையப்பர் சபை

2. மரியாயின் சேனை

3. திருஇருதய ஆண்டவர் சபை

4. புனித வின்சென்ட் தே பவுல் சபை

5. தொன்போஸ்கோ இளையோர் (ஆண்கள்) 

6. மரிகொரற்றி இளம்பெண்கள்

7. கோல்பிங் இயக்கம்

8. விவசாய சங்கங்கள்

9. முன்னாள் இந்நாள் இராணுவ சங்கம்

10. பாலர் சபை

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி.‌ புஷ்பநாதர் (1840)

2. அருட்பணி.‌ தாராஸ், MEP (1860)  (மலைக்கோவில் கட்டியவர்)

3. அருட்பணி. அருள்நாதர்

4. அருட்பணி. பிரியர்

5. அருட்பணி.‌ தாராஸ், MEP (இரண்டாம் முறையாக) (1872)

6. அருட்பணி. நோயேல் 1880

7. அருட்பணி.‌ மைஸ்டன் (1881)

8. அருட்பணி.‌ ஆரோக்கியம் (1883) 

9. அருட்பணி.‌ ஷேக்மில்லர் (1884)

10. அருட்பணி.‌ U. மில்லார்டு (1886)

11. அருட்பணி.‌ அன்னாபிரான்சிஸ் (1887)

12. அருட்பணி.‌ போஜிரா (1888)

13. அருட்பணி.‌ L. துருடென்ட் (1889)

14. அருட்பணி. M. இராயப்பநாதர் (1894)

15. அருட்பணி.‌ L. ஆந்திரே (1900)

16. அருட்பணி. M. அமலதாஸ் (1912-1931)

17. அருட்பணி.‌ A. L. பாக்கியநாதர் (1931-1942)

18. அருட்பணி.‌ ஞானமாணிக்கம் (1942-1945)

19. அருட்பணி.‌ அந்தோனி பள்ளிப்பரம்பில் (1945-1950)

20. அருட்பணி.‌ பிலிப் தொடுக்கா (1950-1961)

21. அருட்பணி. S. சூசை (1961-1972) (வேட்டவலம் பங்கு வேலூர் மறைமாவட்டத்தில் சேர்க்கப்பட்டது)

22. அருட்பணி. K. O. ஆபிரகாம் (1972-1973)

23. அருட்பணி. K. மத்தியாஸ் (1973-1974)

24. அருட்பணி. V. P. அந்தோனிசாமி (1974-1977)

25. அருட்பணி.‌ ஜான் பீட்டர் (1977-1982)

26. அருட்பணி. துரைசாமி நாரலா (1982-1985)

27. அருட்பணி. Y. அந்தோணி ராஜ் (1985-1990)

28. அருட்பணி. சிலுவைரத்தினம் (1990-1991)

29. அருட்பணி.‌ P. செபாஸ்டின் (1991-1993)

30. அருட்பணி.‌ பிலோமின்ராஜ் (1993-2000)

31. அருட்பணி. D. அமல்ராஜ் (2000-2002)

32. அருட்பணி. D. மரிய ஜோசப் (2002-2006)

33. அருட்பணி. R. ஜேம்ஸ் வின்சென்ட் (2006-2012)

34. அருட்பணி. A. அக்டேவியஸ் (2012-2017)

35. அருட்பணி. Y. கிளமெண்ட் ரொசாரியோ (2017-2019)

36. அருட்பணி. A. ஆரோக்கியசாமி (2019----)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை பேரருட்பணி.‌ A. ஆரோக்கியசாமி அவர்களின் அனுமதி மற்றும் வழிகாட்டலுடன் உதவி பங்குத்தந்தை அருட்பணி. S. வேளாங்கண்ணி அவர்கள்.

கூடுதல் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சேகரிப்பில் உதவி: வேட்டவலம் மண்ணின் மைந்தர்கள் திரு. ஜோசப் ரெஜிஸ் மற்றும் சகோதரர் மரிய ஜோசப் (ஸ்காட்லாந்து) ஆகியோர்.