தூய அந்தோணியார் ஆலயம்
இடம் : வாள்வச்சகோஷ்டம்
மாவட்டம் : கன்னியாகுமரி
மறைமாவட்டம் : குழித்துறை
மறைவட்டம் : முளகுமூடு
நிலை : பங்குத்தளம்
பங்குத்தந்தை : அருட்பணி. G. மார்க்கோனி ரவிச்சந்திரன்
குடும்பங்கள் : 305
அன்பியங்கள் : 6
ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு
வாரநாட்களில் திருப்பலி : காலை 06.30 மணிக்கு
செவ்வாய் மாலை 06.30 மணிக்கு தூய அந்தோணியார் நவநாள், திருப்பலி.
திருவிழா : டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து வருகிற வெள்ளி தொடங்கி ஜனவரி மாதத்தில் முதல் வாரத்தில் நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள்.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்சகோதரி. மரிய தங்கம்
2. அருட்சகோதரி. ரெஜூலா சாந்தி.
வழித்தடம் : நாகர்கோவில் -மார்த்தாண்டம் வழித்தடத்தில், இரவிபுதூர்கடை சந்திப்பிலிருந்து பள்ளியாடி செல்லும் சாலையில், குன்னம்பாறை சந்திப்பில் வந்து அரை கி.மீ தூரம் உள்ளே சென்றால் வாள்வச்சகோஸ்டத்தில் இவ்வாலயத்தை அடையலாம்.
Location map : St Antony's church, valvachaghostam Karungal - Palliyaadi - Eraviputhhoorkadai Rd, Valvaithankoshtam, Tamil Nadu 629158
வரலாறு :
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியை ஆண்டு வந்த அரசர்கள் தங்களது போர் வாள் பூஜை செய்த தோட்டம், என்ற பெயர் பின்னாளில் வாள்வச்சகோஷ்டம் ஆனது. இந்த ஊரில் அமைந்துள்ள தூய அந்தோணியார் ஆலயமானது தொடக்க காலத்தில் முள்ளங்கினாவிளை பங்கோடு செயல்பட்டு வந்தது. பின்னர் பள்ளியாடி பங்கோடு சேர்க்கப்பட்டது.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மறைப்போதகர் அருட்பணி. பீட்டர் தாமஸ் அவர்கள் பள்ளியாடி பங்கில் பணியாற்றிய போது, அவரது நிதியுதவியோடு வாள்வச்சகோஷ்டம் பகுதி மக்களிடமிருந்து சிறிது நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. இந்த நிலத்தில் ஒரு குருசடி பங்கின் மக்களால் அமைக்கப்பட்டு திருப்பலி மற்றும் ஜெபவழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தது.
1973 ஆம் ஆண்டில் ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப் பட்டன. அனைவரின் ஒத்துழைப்புடன் ஆலயப் பணிகள் நிறைவு பெற்று 1977 ஆம் ஆண்டில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு ஆரோக்கியசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. ஆலய வளாகத்தில் ஒரு பகுதியில் அமைந்திருந்த கற்சிலுவை அகற்றப்பட்டு, பங்கின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மலையில் நிலை நிறுத்தப் பட்டது. இந்த சிலுவையில் மக்கள் நாள்தோறும் வந்து ஜெபித்து நலம் பெற்றுச் செல்கின்றனர்.
பள்ளியாடி பங்குத்தந்தையாக அருட்பணி. ஜோக்கிம் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த போது, அவரின் துணையுடன் முதல் பங்குப்பேரவை அமைக்கப்பட்டு துணைத் தலைவராக திரு. அந்தோணிமுத்து, பொருளராக அருளப்பன் அவர்களும் பொறுப்பேற்று பணிபுரிந்தனர்.
பள்ளியாடி பங்குத்தந்தை அருட்பணி. மார்ட்டின் அலங்காரம் அவர்கள் பணிக்காலத்தில் குன்னம்பாறையில் உள்ள குருசடி 1989 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை மாலை 06.30 மணிக்கு இந்த குருசடியில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இத்திருப்பலியை ஒவ்வொரு மாதமும் தலா ஒரு அன்பியத்தினர் சுழற்சி முறையில் சிறப்பிக்கின்றனர்.
அருட்பணி. S. கிளேட்டன் அவர்கள் பணிக்காலத்தில் ஆலய கொடிக்கம்பம் வைக்கப்பட்டு, கோட்டார் மறைமாவட்ட முதன்மைப் பணியாளர் பேரருட்பணி. E. ஜாண் குழந்தை அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
அருட்பணி. C. ஆன்றனி ஜெயா அவர்களின் பணிக்காலத்தில் அவரது முயற்சி, மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு 30.01.2004 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
24.05.2010 அன்று பள்ளியாடி பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு வாள்வச்சகோஷ்டம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, முதல் பங்குத்தந்தை அருட்பணி. M. தேவசகாயம் அவர்கள் நியமிக்கப்பட்டார். அப்போதைய முளகுமூடு வட்டார முதன்மைப் பணியாளர் பேரருட்பணி. சகாயதாஸ் அவர்கள் தலைமையில் தனிப்பங்கான விழா சிறப்பிக்கப்பட்டது.
திரு. V. பால்ராஜ் குடும்பத்தாரின் நிதியுதவியுடன் சிறு புனித அந்தோணியார் கெபி கட்டப்பட்டு 02.04.2013 அன்று அர்ச்சிக்கப்பட்டு பங்கு ஆலயத்தோடு இணைக்கப்பட்டது.
அருட்பணி. சுஜன் குமார் அவர்கள் பணிக்காலத்தில் ஆலய நுழைவுவாயில் கட்டப்பட்டு 15.08.2013 அன்று பேரருட்பணி. சகாயதாஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. M தேவசகாயம் (2010-2012)
2. அருட்பணி. D. M. சுஜன்குமார் (2012-2017)
3. அருட்பணி. M. டென்சிங் (2017-2018)
4. அருட்பணி. G. மார்க்கோனி ரவிச்சந்திரன் (07.05.2018 முதல் தற்போது வரை..)
பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :
1. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்
2. கத்தோலிக்க சேவா சங்கம்
3. இளையோர் இயக்கம்
4. சிறார் இயக்கம்
சிறுவழி இயக்கம்
பாலர்சபை
5. கைகள் இயக்கம்
6. புனித வின்சென்ட் தே பவுல் சபை
7. இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம்
8. அன்பிய ஒருங்கிணையம்
9. பங்குப்பேரவை
10. மறைக்கல்வி.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. G. மார்க்கோனி ரவிச்சந்திரன் அவர்கள்.