632 தூய இருதய அன்னை ஆலயம், நெட்டூர்

      

தூய இருதய அன்னை ஆலயம் 

இடம் : நெட்டூர் 

மாவட்டம் : தென்காசி 

மறைமாவட்டம் : பாளையங்கோட்டை

மறைவட்டம் : தென்காசி

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள் :

1. தூய இருதய அன்னை ஆலயம், களக்குடி 

2. திருஇருதய ஆண்டவர் ஆலயம், தெற்குபட்டி 

3. தூய சூசையப்பர் ஆலயம், சீதைக்குறிச்சி

4. தூய சூசையப்பர் ஆலயம், கிடாரகுளம் 

5. தூய ஞானபிரகாசியார் ஆலயம், காவலாகுறிச்சி 

6. திருஇருதய ஆண்டவர் ஆலயம், ரெட்டியார்பட்டி

7. தூய விண்ணரசி மாதா ஆலயம், உக்கிரங்கோட்டை

8. தூய அமல அன்னை ஆலயம், காடுவெட்டி 

9. தூய சூசையப்பர் ஆலயம், அருணாசலபேரி

10. குழந்தை இயேசு ஆலயம், ரஸ்தா 

பங்குத்தந்தை : அருட்பணி. ராஜதேவன், SDB 

இணைப் பங்குத்தந்தை : அருட்பணி. D சிலுவை அடிமை, SDB

குடும்பங்கள் : 195 (கிளைப்பங்குகள் சேர்த்து 590)

அன்பியங்கள் : 8 (கிளைப்பங்குகள் சேர்த்து 22)

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு 

வாரநாட்களில் திருப்பலி : காலை 06.00 மணிக்கு 

மாதத்தின் முதல் வெள்ளி திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை. 

மாதத்தின் முதல் சனி மாலையில் திருப்பலி, நோயாளிகளை எண்ணெய் பூசி ஜெபித்தல். 

திருவிழா : செப்டம்பர் மாதம் 08 -ஆம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருட்பணி. அந்தோணிராஜ் 

2. அருட்பணி. பால்சாமி, SDB 

3. அருட்சகோதரி. வேளாங்கண்ணி 

4. அருட்சகோதரி. ஜெசிந்தா 

5. அருட்சகோதரி. சுரேகா. 

6. அருட்சகோதரி. மாதா

வழித்தடம் : திருநெல்வேலி -தென்காசி சாலை -ஆலங்குளம் வழியாக நெட்டூர். 

திருநெல்வேலி -அழகியபாண்டியபுரம் -நெட்டூர். 

Location map : https://g.co/kgs/mKRkvn

வரலாறு :

தென்காசி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த அழகிய சிறு கிராமம் தான் நெட்டூர்.

அக்காலத்தில் நெட்டூர் கிராம மக்கள் ஏழ்மையிலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலும் வாழ்ந்து வந்தனர். 

இந்த காலகட்டத்தில் 1904 ஆம் ஆண்டில் ஆலயம் கட்டப்பட்டது. 

1931 ஆம் ஆண்டு சிங்கம்பாறை தனிப்பங்காக ஆன போது அதன் கிளைப் பங்காக நெட்டூர் செயல்பட்டு வந்தது. 

1945 ஆம் ஆண்டில் ஊத்துமலை தனிப்பங்கான போது நெட்டூர் அதன் கிளைப் பங்காக ஆனது. 

தொடர்ந்து ஊத்துமலையில் பணியாற்றிய அருட்பணியாளர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் வழிகாட்டுதலில் நெட்டூர் கத்தோலிக்க இறைமக்கள் கல்வி மற்றும் சமூக பொருளாதார நிலையில் மெல்ல மெல்ல வளரத் தொடங்கினர். 

ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 18.05.1991 அன்று பாளை மறைமாவட்ட ஆயர் மேதகு S. இருதயராஜ், D.D,D.C.L அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

ஊத்துமலை பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு 08.06.2002 அன்று நெட்டூர் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, சலேசிய சபை குருக்களிடம் ஒப்படைக்கப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. அந்தோணிசாமி ஜோக்கிம், SDB அவர்கள் பணிப் பொறுப்பேற்றார். 

தொடர்ந்து சலேசிய சபை குருக்களின் வழிகாட்டுதலில் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது நெட்டூர் இறைசமூகம். 

பங்கில் உள்ள சபைகள் மற்றும் இயக்கங்கள் :

1. பாலர்சபை 

2. பீடப்பூக்கள் 

3. இளைஞர் இயக்கம் 

4. மரியாயின் சேனை 

5. பங்குப்பேரவை

6. மறைக்கல்வி 

7. மகளிர் சுயஉதவி குழுக்கள் 

பங்கில் உள்ள இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் :

*புனித அன்னாள்சபை கன்னியர் இல்லம். 

*புனித ஆரோக்கிய மாதா மருந்தகம். 

*சலேசிய சபை குருமாணவர் பயிற்சி இல்லம். 

*RC தொடக்கப்பள்ளி.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. Rev. Fr. Antonysamy Joachim, SDB 

2. Rev. Fr. Arulmaran, SDB 

3. Rev. Fr. Francis Xavier, SDB 

4. Rev. Fr. Arockiaraj, SDB 

5. Rev. Fr. Felix, SDB

6. Rev. Fr. Jeyaraj, SDB

7. Rev. Fr. Vijayan, SDB

8. Rev. Fr. Rajadevan, SDB

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. ராஜதேவன், SDB மற்றும் உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. D. சிலுவை அடிமை, SDB