532 புனித வனத்து அந்தோணியார் புனித வனத்து சின்னப்பர் ஆலயம், துத்திக்குளம்

  

புனித வனத்து அந்தோணியார் புனித வனத்து சின்னப்பர் ஆலயம்

இடம் : துத்திக்குளம், துத்திக்குளம் அஞ்சல், 637404

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : நாமக்கல்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், சேந்தமங்கலம்

பங்குத்தந்தை : அருட்பணி. வேதநாயகம், OFM Cap

குடும்பங்கள் : 5
அன்பியம் : 1

திருப்பலி நேரங்கள் :

செவ்வாய் : மாலை 06.30 மணிக்கு திருப்பலி

மாதத்தின் முதல் செவ்வாய் : மாலை 06.30 மணிக்கு நவநாள் செபம், திருப்பலி, நோயாளிகளை மந்திரித்தல், அன்பின் விருந்து.

திருவிழா : ஜனவரி 17- கொடியேற்றம், 18- புனித வனத்து அந்தோணியார் திருவிழா, 19- புனித வனத்து சின்னப்பர் திருவிழா.

வழித்தடம் : சேந்தமங்கலத்திலிருந்து இராசிபுரம் செல்லும் வழியாக 4கி.மீ தொலைவில் துத்திக்குளம் உள்ளது.

Location map :


வரலாறு :

சேலம் மறைமாவட்டத்தில் இரு வனத்து புனிதர்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட முதல் ஆலயமும், ஒரே ஆலயமும் துத்திக்குளம் புனித வனத்து அந்தோணியார் புனித வனத்து சின்னப்பர் ஆலயம் ஆகும்.

இவ்வாலயம், பல ஆண்டுகளுக்கு முன்பு ஓலையால் வேயப்பட்ட ஒரு சிற்றாலயம் போல் இருந்தது. பிறகு, ஒரு அரங்கம் அமைத்து அதில் திருப்பலி நிறைவேற்றி வந்தனர்.

பின்னர், சேந்தமங்கலம் பங்கில் கப்புச்சின் சபையைச் சேர்ந்த அருட்பணி. கிளாரன்ஸ் அவர்களால் இங்கு தற்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டு, 07.06.2003 அன்று சேலம் மறைமாவட்ட மக்கள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சித்துப் புனிதப்படுத்தப்பட்டது.

சேந்தமங்கலம் பங்கின் கிளைப்பங்காகிய இவ்வூரில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில், பல பங்குகளிலிருந்தும் இறைமக்கள் வருகை புரிந்து இறையாசீர் பெறுவது தனிச்சிறப்பாகும்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. வேதநாயகம் OFM Cap அவர்கள்.