புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: தளவாய்புரம், கணபதிபுரம் அஞ்சல், 629502
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: கோட்டாறு
மறைவட்டம்: முட்டம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித மங்கள அன்னை ஆலயம், காட்டுவிளை, வெள்ளிச்சந்தை அஞ்சல்
பங்குத்தந்தை : அருட்பணி. ஜேக்கப் ஆஸ்லின்
தளவாய்புரம் ஆலய பொறுப்புத்தந்தை (Incharge) அருட்பணி. ஆல்வின் மதன் ராஜ்
குடும்பங்கள்: 94
அன்பியங்கள்: 4
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி
செவ்வாய் திருப்பலி மாலை 06:30 மணி
தினமும் மாலை 07:00 மணி ஜெபமாலை
திருவிழா: ஜனவரி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள்.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. T. Y. ராசையா, OSM
2. அருட்சகோதரி. கரோலா (தாயம்மாள்), Immaculate Heart of Mary
3. அருட்சகோதரி. டங்ஸ்டன் (மிக்கேலம்மாள்), Immaculate Heart of Mary
வழித்தடம்:
நாகர்கோவில் (வழி: கோணம், இராஜக்கமங்கலம் )
5D, 14V, 14DV, 14 A, 5M, 5J, 5E - இறங்குமிடம்: ஸ்ரீகிருஷ்ணபுரம்
நாகர்கோவில் (வழி- ஆசாரிப்பள்ளம்) இறங்குமிடம்: வெள்ளிச்சந்தை
5B, 14C, 14, 14B, 5Bv
Location map: St. Anthony's Church, Thalavaipuram
https://maps.app.goo.gl/NV1tqmfagAVbiV2x6
வரலாறு:
கி.பி. 16-ஆம் நூற்றண்டிலேயே தளவாய்புரம் பகுதியில் சுமார் 35 கிறிஸ்தவ குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவரும் "சகல மோட்சாழியார்" என்ற குருசடியை வைத்து வழிபாடு செய்து வந்துள்ளதை செவிவழிச்செய்திகளும், எழுத்துமூல செய்திகளும் உறுதி செய்கின்றன. இக்குருசடி இன்றும் எளிய தோற்றத்துடன் காட்சி தருகிறது. காலப்போக்கில் காலரா எனும் கொள்ளைநோய் இக்குடும்பங்களை பலிகொள்ள, இறுதியில் 6 குடும்பத்தினர் மட்டுமே எஞ்சியிருந்திருக்கின்றனர்.
"சகல மோட்சாழியார்" குருசடி தனியார் பூமியில் இருந்ததால், பின்னர் பொதுநிலம் வாங்கி அத்துடன் புனித அந்தோனியார் குருசடி அமைத்து வழிபாடுகள் நடத்தி வந்தனர். இந்த குருசடி அமைத்து 10 ஆண்டுகளுக்குப்பின் மக்களின் ஆன்மீக வளர்ச்சியைக் கண்டு, பிள்ளைத்தோப்பு பங்குப்பணியாளர் அருட்பணி. இம்மானுவேல் அவர்கள், தளவாய்புரத்தில் மறைக்கல்வி நடைபெறச்செய்தார்.
தொடக்கத்தில் தளவாய்புரம் ஊர், காரங்காடு தாய்ப்பங்கோடு இணைந்திருந்தது. நாளடைவில் மக்களின் ஈடுபாடுகளினாலும் அருள்பணியாளர்களின் முயற்சியாலும், தளவாய்புரத்திலே திருப்பலி நடைபெறத் தொடங்கியது. பிறகு சரல் பங்கின் கிளைப்பங்காக செயல்படத் தொடங்கியது.
அருள்பணியாளர் அகஸ்டின் அவர்கள் சரல் பங்குப் பணியாளராக பொறுப்பேற்ற போது, காட்டுப்பகுதியில் அமைந்திருந்த புனித அந்தோனியார் குருசடியை சாலை ஓரத்தில் அமைத்திட முயற்சி மேற்கொண்டார். மக்களின் ஒத்துழைப்போடு புதிய ஆலயம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. பங்குமக்களின் தாராள உதவியோடும், பங்குப்பணியாளரின் கடின முயற்சியாலும், புதிய ஆலயம் அமைக்க நிலம் வாங்கப்பட்டது. முன்னாள் ஆயர் அவர்கள், புனித அந்தோனியார் குருசடியை பார்வையிட்டு, இன்னும் அதிகமாக நிலம் தேவை என்பதை எடுத்துரைத்ததற்கேற்ப, மீண்டும் நிலம் வாங்கப்பட்டது. இந்நிலையில் அருள்பணி. அகஸ்டின் பங்கு மாற்றம் பெற்றார்.
பின்னர் பங்குப் பொறுப்பேற்ற அருள்பணி. உபால்டுராஜ் அவர்கள் ஆலயம் எழுப்பும் பணியில் அதிக முயற்சி மேற்கொண்டார். பங்கு மக்களின் ஒத்துழைப்போடு ஆலயம், குருசடி மற்றும் பங்குப்பணியாளர் இல்லம் ஆகியவை கட்டிமுடிக்கப்பட்டு, 16-4-1977 அன்று அன்றைய ஆயர் மேதகு ஆரோக்கிய சாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டன.
குடிநீர் வசதிக்காக ஆலயத்தின் அருகே கிணறு வெட்டப்பட்டது.
அருள்பணி. ஞானப்பிரகாசம் அவர்கள் பணிப்பொறுப்பில் இருந்தபோது ஆலயமணி ஏற்றப்பட்டது. தொடர்ந்து பணிப்பொறுப்பேற்ற அருள்பணி. A. செல்வராஜ் அவர்களின் முயற்சியால் ஆலய வளாக முன்புறம் மதில்சுவர் அமைக்கப்பட்டது. பாலர் பள்ளியும் ஏற்படுத்தப்பட்டது.
அருள்பணி. பெலிக்ஸ் அவர்கள் பணிக்காலத்தில் பீடத்தின் மேற்கூரையில் பலகை வேயப்பட்டது. தொடர்ந்து வந்த அருள்பணியாளர்களின் காலத்தில் பங்கு பல்வேறு வகையில் முன்னேற்றம் கண்டது. அருள்பணி. M. டேவிட் மைக்கேல் பணிப்பொறுப்பை ஏற்றபின் கல்லறைத் தோட்டத்திற்கு சாலை அமைக்கப்பட்டது. பங்கு மக்களின் உதவியோடும், ஆயரின் உதவியோடும் தண்ணீர் குழாய் அமைக்கப்பட்டு தண்ணீர் வசதி செய்யப்பட்டது. ஆலயவளாகத்தை சுற்றி சுவர் அமைத்து தென்னங்கன்றுகள் நடப்பட்டன. அருட்பணி. உபால்டுராஜ் நினைவு கலையரங்கு அமைக்கப் பட்டது.
2004 ஆம் ஆண்டு காட்டுவிளை தூய மங்கள அன்னை ஆலயம் தனிப்பங்கான போது, தளவாய்புரம் ஆலயமானது காட்டுவிளையின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.
புனித அந்தோனியார் குருசடி மிகவும் சிறியதாக இருந்ததால் அதனை அகற்றிவிட்டு, அவ்விடத்தில் 20.09.2009 அன்று பங்குத்தந்தை அருட்பணி. வ. ஜான்போஸ்கோ அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, புனித அந்தோனியார் நற்பணி இயக்கம், தளவாய்புரம் இறைமக்கள் மற்றும் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் பணிகள் நிறைவு பெற்று, 06.02.2010 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு பங்குத்தந்தை இல்லம் புதிதாக கட்டப்பட்டது.
புதிய சிந்தனைகளோடும், ஒருமித்த செயல்பாடுகளோடும் தளவாய்புரம் பங்கு இறையாட்சியை நோக்கி நடைபோடுகிறது.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. பாலர்சபை
2. சிறுவழி இயற்கம்
3. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
4. இளைஞர் இயக்கம்
5. புனித அந்தோனியார் தொழிலாளர் இயக்கம்
6. தலித் இயக்கம்
7. கத்தோலிக்க சேவா சங்கம்
8.புனித வின்சென்ட் -தே-பவுல் சபை
9. மறைக்கல்வி மன்றம்
10. பங்கு அருட்பணிப் பேரவை
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பொறுப்புத்தந்தை அருட்பணி. ஆல்வின் மதன் ராஜ் அவர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர்.