742 கிறிஸ்து அரசர் ஆலயம், கல்லூரணி

  

கிறிஸ்து அரசர் ஆலயம்

இடம்: கல்லூரணி

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: குறுக்குச்சாலை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித வியாகுல அன்னை ஆலயம், சிப்பிகுளம்

பங்குத்தந்தை: அருள்பணி. R. சந்தியாகு

குடும்பங்கள்: 4

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலையில் திருப்பலி நடைபெறும்

திருவிழா: செப்டம்பர் மாதம் நான்காம் ஞாயிறு

வழித்தடம்: தூத்துக்குடி -வேம்பார் -வேப்பலோடையில் இருந்து, சிப்பிகுளம் செல்லும் வழியில் கல்லூரணி அமைந்துள்ளது.

Location map: Christ the King Church, Kallurani 082480 56183

https://maps.app.goo.gl/sQuVNJN66fmWEy9AA

வரலாறு:

தூத்துக்குடி -இராமேஸ்வரம் கடற்கரை நெடுஞ்சாலையில், வேப்பலோடையை கடந்ததும் கிழக்கு நோக்கி செல்ல, இடப்புறமாக பரந்து விரிந்து கிடக்கும் உப்பு குவியலைக் கடந்து செல்லுகையில் வடக்கே திரும்ப வைப்பாற்றுக்கும், நேர்கிழக்கே சிப்பிகுளத்துக்கும் வழிகாட்டும் நான்குமுனை சந்திப்பில் தெற்கு முகமாகத் திரும்பியதும் சில மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கிராமம் கல்லூரணி. இங்கு அமைந்துள்ள கிறிஸ்து அரசர் ஆலய வரலாற்றைக் காண்போம்..

கல்லூரணிக்கு வடக்கே  சிதிலமடைந்து காணப்படும் குருசடிக்கு அருகே தொடக்கத்தில் ஆலயம் கட்டப்பட்டு தூய வியாகுல அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. குழுமி வாழ்ந்த கத்தோலிக்க மக்கள் தொழில் காரணமாக இருபிரிவுகளாகப் பிரிந்து ஒருசாரார் சிப்பிகுளத்திற்கும், எஞ்சியவர்கள் இன்றைய கல்லூரணியிலும் குடிபெயர்ந்தனர்.

இவ்வாறு குடிபெயர்ந்த இடத்தில் தற்போதைய ஆலயம் இருக்கும் முற்றத்தின் ஒரு ஓரத்தில் ஓலைக் குடில் ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தனர்.

காலஞ்சென்ற திரு. சூசை அந்தோனி மோத்தா அவர்களின் நேர்ச்சை நிறைவேறியதால், குடிசை ஆலயத்தை மாற்றி சிற்றாலயம் எழுப்பினார். பங்கு ஆலயமான சிப்பிகுளத்திலும்  தூய வியாகுல மாதா ஆலயமாக விளங்குவதால், கிளைப் பங்கான கல்லூரணி ஆலயம் கிறிஸ்து அரசர் ஆலயமாக மாற்றம் பெற்றது.

கல்லூரணியில் கத்தோலிக்க மக்கள் குறைவாக வாழ்ந்தாலும், பிற சமய மக்கள் அனைவரும்  ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

தகவல்கள் மற்றும் புகைப்படம்: பங்குத்தந்தை அருள்பணி. R. சந்தியாகு அவர்கள்