324 ஆரோக்கிய அன்னை ஆலயம், பொழிச்சலூர்


ஆரோக்கிய அன்னை ஆலயம்.

இடம் : பொழிச்சலூர், சென்னை -74

மாவட்டம் : காஞ்சிபுரம்
மறை மாவட்டம் : செங்கல்பட்டு
மறை வட்டம் : பல்லாவரம்

நிலை : பங்குத்தளம்
கிளைகள் : இல்லை

பங்குத்தந்தை : அருட்பணி ஜெயசிங் டேவிட் CPPS

குடும்பங்கள் : 543
அன்பியங்கள் : 17

வழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு காலை 07.10 மணிக்கு ஜெபமாலை, காலை 07.30 மணிக்கு திருப்பலி (தமிழ்).

ஞாயிறு காலை 10.00 மணிக்கு ஆங்கில திருப்பலி.

ஞாயிறு மாலை 05.00 மணிக்கு திருப்பலி (தமிழ்)

திங்கள், புதன், வியாழன் திருப்பலி : காலை 06.15 மணிக்கு.

செவ்வாய், வெள்ளி, சனி மாலை06.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி.

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 08-ஆம் தேதி வரை.

மண்ணின் மைந்தர்கள் :

1. அருட்பணி ஜஸ்டின் லாரன்ஸ்
2. கென்னடி
அருட்சகோதரர் அன்பு

1. அருட்சகோதரி ஜோஸாபின் டயானா
2. அருட்சகோதரி இம்மாகுலேட் அருள்தாஸ்
3. அருட்சகோதரி குளோறி
4. அருட்சகோதரி சியாக்கினா

ஆலய முகவரி : புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பொழிச்சலூர் பேருந்து நிலையம் எதிரில், கலைஞர் தெரு, எம்.ஜி.ஆர் நகர், பொழிச்சலூர், சென்னை – 600 074, தமிழ்நாடு.

ஆலய தகவல் தொடர்புகளுக்கு :
polichalurchurch@gmail.com
facebook.com/polichalurchurch
http://www.polichalurchurch.com

பேருந்துகள் : M52, 52, 60G.

வரலாறு :

பொழிச்சலூர் ஆலயத்தின் தாய்ப் பங்கு புனித பல்லாவரம் பிரான்சிஸ் சேவியர் ஆலயம். 1965-ஆம் ஆண்டு அருட்தந்தை ஜோசப் கோட்டூர் பங்குத்தந்தையாக இருந்த போது, அவர் பொழிச்சலூர்-ல் புனித ஆரோக்கிய அன்னைக்கு ஆலயம் கட்ட இடம் வாங்கினர். தாழ்மையான தொடக்கமாய், ஒரு சிறிய குடிசையில் பிரார்த்தனை சேவை தொடங்கியது.

30 -06-1971 அன்று சென்னை மயிலை பேராயர் மேதகு Dr. அருள்ளப்பா அவர்களால் ஆலயம் கட்ட அடிக்கல் போடப்பட்டு, அருட்தந்தை ஜோசப் கோட்டூர் ஒரு சிறு ஆலயமாக கட்டினார். மாதம் ஒரு திருப்பலி சேவையை புனித அன்னையின் நினைவாக இங்கே அருட்தந்தை சாகோ நிறைவேற்றி வந்தார்.

புதிய ஆலயம்:

1976 ஆம் ஆண்டில், இந்த ஆலயத்தில் சுமார் 25 குடும்பங்கள் இருந்தன. வாரந்தோறும் பல்லாவரம் பங்குத்தந்தை அருட்தந்தை செபாஸ்டியன் அடிகளார் திருப்பலி நிறைவேற்றி வந்தார். நாட்கள் நகர "பொழிச்சலூர் புனித ஆரோக்கிய அன்னையின்" பரிந்துரையை நாடிவரும் இறைமக்கள் அதிகமாய் இருந்ததால், அருட்தந்தை செபாஸ்டியன் அடிகளார் பெரிய ஆலயம் கட்ட முடிவு செய்தார்.

அதன்படி 15 ம் தேதி ஆகஸ்ட் மாதம், 1990 வருடம் ஒரு புதிய ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டினார். ஆகஸ்ட் 15 ஆம் நாள், 1993 அன்று சென்னை மயிலை பேராயர் மேதகு Dr. கஸ்மிர் ஆன்டகையால் ஆலயம் அர்ச்சித்து திறக்கப்பட்டது.

அதன்பின் எல்லா ஞாயிற்றுகிழமைகளில், ஈஸ்டர், கிறிஸ்துமஸ் மற்றும் மாதாவின் மோட்ச ஆரோப நாட்களில் அருட்தந்தை ஜான் பிரிட்டோவால் திருப்பலி கொண்டாடப்பட்டது.

புதிய பங்கு:

2000 ஆம் ஆண்டில், பொழிச்சலூர் ஒரு புதிய பங்காக முறைப்படி அறிவிக்கப்பட்டது. அப்போது பல்லாவரம் பங்குத்தந்தையாக அருட்தந்தை பேட்ரிக் அடிகளார் இருந்தார். சென்னை மயிலை ஆயர் மேதகு Dr. லாரன்ஸ் பயஸ் முன்னிலையில் ஆண்டவரின் திரு இரத்த சபை குருக்களிடம் ஆலய பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டது.

அப்போது பங்கில் சுமார் 450 குடும்பங்கள் இருந்தன. 2002 ஆம் ஆண்டு பொழிச்சலூர் ஆலயம் செங்கல்பட்டு உயர்மறை மாவட்டதின் கீழ் வந்தது.