846 புனித லூர்து அன்னை ஆலயம், கீழக்காட்டுவிளை

    

புனித லூர்து அன்னை ஆலயம்

இடம்: கீழக்காட்டுவிளை, மணிக்கட்டி பொட்டல் அஞ்சல், 629501

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: கோட்டார்

மறைவட்டம்: கோட்டார்

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை: அருட்பணி. ஜார்ஜ் வின்சென்ட்

குடும்பங்கள்: 120

அன்பியங்கள்: 4

ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணிக்கு

நாள்தோறும் திருப்பலி மாலை 06:00 மணிக்கு

செவ்வாய் மாலை 06:30 மணி ஜெபமாலை தொடர்ந்து புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி (புனித அந்தோனியார் குருசடியில்)

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 07:00 மணிக்கு மாதா நவநாள் திருப்பலி

திருவிழா: மே மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்து நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. சேவியர் பால், அஸ்ஸாம்

2. அருட்பணி.‌ லியோன் ஹென்சன், Kottar diocese

3. அருட்பணி. ஆரோக்கிய ஆன்றோ, Kottar diocese

4. அருட்சகோதரி. நிலாமன் மேரி, SAT (late)

5. அருட்சகோதரி. பெர்த்தா, CTC (late)

6. அருட்சகோதரி. தெரசம்மாள், ICM (late)

7. அருட்சகோதரி.‌ மரிய கிரேஸ், SAT

8. அருட்சகோதரி.‌ ஆரோக்கிய மேரி, SAT

9. அருட்சகோதரி.‌ சகாய செல்வி, SAT

10. அருட்சகோதரி. கிரேசியா (ராணி), CTC

வழித்தடம்: நாகர்கோவில் - (பிள்ளையார்புரம்) சிவந்தி ஆதித்தனார் கல்லூரி. இங்கிருந்து 2கி.மீ தொலைவில் கீழக்காட்டுவிளை அமைந்துள்ளது.

37A அம்பலபதி பேருந்து.

Location map: https://g.co/kgs/ztbXEo

வரலாறு:

கீழக்காட்டுவிளை ஊரைச் சேர்ந்த முன்னோர்கள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திக்காட்டுவிளை லண்டன் மிஷன் திருச்சபையின் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் மீது ஏற்பட்ட பற்றுதலால், தொலைவில் உள்ள காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலயத்திற்கு திருப்பலியில் பங்கேற்கச் சென்று வந்தனர்.

1934 ஆம் ஆண்டு பஞ்சவங்காடு குருசடி புனித அந்தோனியார் ஆலயமானது தனிப் பங்கான போது, கீழக்காட்டுவிளை அதன்கீழ் செயல்படத் தொடங்கியது. முதல் வழிபாட்டுத் தலமாக எழுந்த மாதா குருசடியும் (தற்போதைய கல்லறைத் தோட்டத்தில்) அதைச் சார்ந்த 14 சென்ட் நிலமும் பஞ்சவங்காடு புனித அந்தோனியார் ஆலய வகைச் சொத்து என்ற நில ஆவணம் இதற்குச் சான்றாக உள்ளது.

பின்னர் குருசடி பங்கிலிருந்து, புத்தன்துறை பங்கின் கிளைப் பங்காக கீழக்காட்டுவிளை மாற்றப்பட்டது. புத்தன்துறை பங்கிலிருந்து, பள்ளம் புனித மத்தேயு ஆலயமானது தனிப்பங்காக 1939 ஆம் உயர்த்தப்பட்டது (ஆனால் 1941 ஆம் ஆண்டு தான் முதல் பங்குத்தந்தை நியமிக்கப்பட்டார்). இவ்வேளையில் தற்போது ஆலயம் உள்ள இடத்தில் மண்சுவர் கொண்ட சிறிய ஆலயம் கட்டப்பட்டு, வழிபாடுகள் தொடங்கின. வாரத்திருப்பலிகள் நடைபெற்றுள்ளன.

பள்ளம் பங்கின் முதல் பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் போர்ஜியோ பீட்டர்ஸ் பணிக்காலத்தில் (1941-1944) மண்சுவர் ஆலயம் மாற்றப்பட்டு, கல்சுவர் -ஓட்டுக்கூரை வேய்ந்த ஆலயம் கட்டும் பணி தொடங்கப்பட்டு, 1949 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

இதனிடையில் குருக்களின் வசதிக்கேற்ப மீண்டும் புத்தன்துறை -பள்ளம் -புத்தன்துறை என்று மேற்கூறிய இரண்டு பங்குகளிலும் மாறிமாறி கீழக்காட்டுவிளை கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது.

பின்னர் 1980 ஆம் ஆண்டு முதல் புத்தன்துறை பங்கின் கிளைப் பங்காக நிலையாக செயல்பட்டு வந்தது.

கற்கோவில் பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால், புத்தன்துறை பங்குத்தந்தை அருட்பணி. சி.எம். எரோணிமூஸ் பணிக்காலத்தில், தற்போது உள்ள ஆலயத்திற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால், 29.05.1989 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

அருட்பணி. எரோணிமூஸ் அவர்களின் முயற்சியாலும், கீழக்காட்டுவிளை இறைமக்களின் ஒத்துழைப்பாலும், தொடர்ந்து பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி. எல்பின்ஸ்டன் ஜோசப் அவர்களின் அயராத முயற்சி மற்றும் வழிகாட்டலில் அழகிய ஆலயமானது கட்டிமுடிக்கப்பட்டு, 01.12.1990 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

30.09.2013 அன்று கீழக்காட்டுவிளை தனிப் பங்காக உயர்த்தப்பட்டது.‌ முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. செபாஸ்டின் அடிகளார் பொறுப்பேற்று வழிநடத்தினார்.

இரு நூற்றாண்டுகளாக இவ்வூரின் ஆன்மீக மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அருட்பணியாளர்களும், பங்கு பொதுநிலை தலைவர்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர். தொடர்ந்து தூய லூர்து அன்னையின் பாதுகாவலில் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது கீழக்காட்டுவிளை இறைசமூகம்...

பங்கில் உள்ள சபைகள் மற்றும் இயக்கங்கள்:

1. கத்தோலிக்க சேவா சங்கம்

2. கிறிஸ்தவ வாழ்வு இயக்கம்

3. மரியாயின் சேனை

4. சிறுவழி இயக்கம்

5. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

6. திருவழிபாட்டுக் குழு

7. மறைக்கல்வி.

பங்கின் கெபி குருசடி:

புனித அந்தோனியார் குருசடி

புனித லூர்து மாதா கெபி

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. செபாஸ்டின்

2. அருட்பணி. ஸ்டீபன் ஹென்றி

3. அருட்பணி. ஜான்சன்

4. அருட்பணி. தேவதாஸ்

5. அருட்பணி. சேவியர் ராஜா

6. அருட்பணி. ஜார்ஜ் வின்சென்ட் (தற்போது..)

ஆலய வரலாறு: கீழக்காட்டுவிளை தனிப்பங்காக உயர்வு விழா மலர்.

தகவல்கள்: பங்கு நிர்வாகம்.