329 காணிக்கை மாதா ஆலயம், செல்லம்பட்டிடை

  

காணிக்கை மாதா ஆலயம்

இடம் : செல்லம்பட்டிடை

மாவட்டம் : காஞ்சிபுரம்

மறை மாவட்டம் : செங்கல்பட்டு

நிலை : பங்குத்தளம்

கிளைகள் :
1. புனித அந்தோணியார் ஆலயம், இலம்பையன் கோட்டூர்.
2. புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்.

பங்குத்தந்தை : அருட்தந்தை - S.D. ஆரோக்கியராஜ், OMI

குடும்பங்கள் : 186
அன்பியங்கள் : 8

ஞாயிறு திருப்பலி : காலை 07.40 மணிக்கு
மற்ற நாட்களில் : காலை 5.40 மணிக்கு.

திருவிழா : ஜனவரி 23-ஆம் தேதி கொடியேற்றம், பிப்ரவரி 02-ஆம் தேதி திருவிழா.

புனித அந்தோணியார் கெபி திருவிழா ஆகஸ்ட் 17-ஆம் தேதி.

மண்ணின் மைந்தர்கள் :

1. Fr B. ராஜப்பா
2. Fr B. L பீட்டர்
3. Fr D. S பால்
4. Fr A.அருள்ராஜ்
5. Fr J.போஸ்கோ பெனடிக்ட்
6. Fr B. D லாரன்ஸ்
7. Fr S. காணிக்கை ராஜ்
8. Fr P. D அருளானந்தம்
9. Fr A. மார்ட்டீன் ஜோசப்
10. Fr G. காணிக்கை ராஜ்
11. Fr D. S ஜான்பீட்டர்
12. Fr ஸ்டீபன்
13. Fr D. S சகாயராஜ்
14. Fr G. B லியோ ஜோசப்
15. Fr K. விக்டர் இம்மானுவேல்
16. Fr B. ஜோசப்
17. Fr I. பால்ராஜ்
18. Fr P.M. ரீகன் ஜூடு
19. Fr S. பால்
20. Fr அருண் குமார்

அருட்சகோதரிகள் :

1. Sis மேரி பேட்ரிக்ஸ்
2. Sis மேரி டெக்கோரா
3. Sis மேரி பீட்டர்
4. Sis மேரி பிலோமினா
5. Sis மேரி ரபேக்கா
6. Sis லீமாரோஸ்
7. Sis அடைக்கலமேரி
8. Sis இருதயமேரி
9. Sis பெர்னத்ராணி
10. Sis ரெஜினா மேரி
11. Sis ஜெனிபர்
12. Sis ஜெரால்டு மஜெல்லா

வழித்தடம் : பேருந்துகள்- Poonamallee via perambakkam.
and Chennai via SV Chatram-Maduramangalam-Sellampattidai.

வரலாறு :

இரண்டாம் உலகப்போருக்கு முன் பிரிட்டிஷ் ஆதிக்கம் நடந்து கொண்டிருக்கும் காலம், மழை வெள்ளத்தால் ஆந்திராவில் பல பகுதிகள் மூழ்கிவிட்டன. பொருட்சேதம், உயிர்சேதம், ஆடு, மாடுகள், விவசாயம் அனைத்தும் தொலைந்து போன மக்களை பிரெஞ்சு குருவானவர், ஹென்றி அர்னால்டு அவர்கள் சித்தூர், பலமனேரி, சிவ்வாடி, புங்கனூர், வேலூர், நெல்லூர், ஐதராபாத் மாவட்டத்தின் சில கிராம மக்களை அழைத்து வந்து, மேட்டுப் பகுதிகளான செல்லம்பட்டிடை, உரியூர்குப்பம், எலுமியன் கோட்டூர், தக்கோலம், நரசிங்கபுரம், கீழச்சேரி, கண்ணூர், பண்ணூர் போன்ற இடங்களில் குடியமர்த்தி வாழ வைத்து கிறிஸ்துவத்தை போதித்தனர்.

கிறிஸ்துவ நம்பிக்கையில் வாழ விருப்பட்டவர்கள் கிறிஸ்துவை வணங்கி அவர் வழியில் கிறிஸ்துவர்களாக மாறினர்.

செல்லம்பட்டிடையின் பெயர்க்காரணம் :

"செல்லன்" என்னும் ஐமீன்தார் (நிலச்சுவான்தாரர்). அவருக்குச் சொந்தமான இடமாக இருந்த பட்டிடை கிராமம், எலுமியன் கோட்டூர் கிராமம் வரை பரந்து விரிந்த அனைத்து விளை நிலங்களை குருவானவர் விலை கொடுத்து வாங்கி, இம் மக்களுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுத்து, விவசாயம் செய்து ஆடு மாடுகள் வளர்க்கும் நிலையை உருவாக்கி வாழ வழி காட்டினார்.

மேலும், அந்தக் குருவானவருக்கு அடுத்து இரண்டு அயல்நாட்டு குருக்கள் இந்த கிராமத்தை, நல்ல பாரம்பரியமிக்க அன்னையின் விசுவாச பூமியாக, புனித அந்தோணியாரின் விசுவாசிகளாக மாற்றி இயேசுவின் வழியில் நடத்தி கிராமத்தில் மக்களோடு மக்களாக குடிசையில் தங்கி வாழ்ந்தனர்.

ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு நாள் குருவானவருக்கு உணவளித்தனர். கேழ்வரகு, கம்பங்களி மற்றும் அரிசி உணவுகள் வழங்கப்பட்டன. எந்த வகை உணவானாலும் மக்களுடன் மக்களாக உண்டு, பல துன்பங்களுக்கு மத்தியில் இந்த கிராமத்தில் கிறிஸ்துவத்தை வேரூன்றச் செய்தார்.

கிராமங்கள் அதிகமானதால் கீழச்சேரி, பண்ணூர், உரியூர்குப்பம், மொளச்சூர், எலுமியன் கோட்டூர் இப்படி பல இடங்களில் நிலங்கள் வாங்கி குடியமர்த்தியதால் பல கிராமங்கள் உருவெடுத்தன.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு கிராமத்தில் திறந்த வெளியில் குருக்கள் திருப்பலி நிறைவேற்றுவர். இலத்தீன், பிரஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம் மேலைநாட்டு மறை போதகர்களின் அயராத உழைப்பாலும் தன்னலமற்ற சேவையாலும் நம் நாட்டு மக்களில் அநேகர் திருமறையை மனமுவந்து ஏற்றுக்கொண்டு வந்த காலம். ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா, அனந்தபூர், சித்தூர் முதலிய இடங்களில் வாழ்ந்த மக்களிடையே தங்கி அவர்களுக்குத் திருமறையை போதித்து வந்த அருட்தந்தை. அர்னால்டு, சே.சு. அவர்கள் அநேகரை திரு மறையில் சேர்த்திருந்தார்.

தங்களில் பலர் கிறிஸ்தவம் தழுவியதை விரும்பாதவர்கள், அவர்களை வெறுத்து பலவிதங்களில் துன்புறுத்தி வந்தனர். அவர்களின் உடைமைகளுக்கும் சேதம் விளைவித்தனர்.

அருட்தந்தை. அர்னால்டு அவர்கள், ஓநாய்களிடமிருந்து செம்மறிகளைக் காக்கும் ஆயன்போல கிறிஸ்தவம் தழுவிய மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

தங்கள் ஞான மேய்ப்பன் மேல் மாறாத அன்பும் உறுதியான நம்பிக்கையும் கொண்டிருந்த மக்கள், எஞ்சியிருந்த தம் உடைமைகளோடு 1773-ஆம் ஆண்டு தற்போது திருப்பெரும்புதூர் வட்டத்திலுள்ள எலுமியன் கோட்டூர் ஊரின் நத்தத்தில் இல்லங்களை அமைத்துக் கொண்டனர்.

அந்த இடம் விவசாயத்திற்கு ஏற்றதாக இருந்தாலும் பயிர் செய்ய சொந்த நிலமில்லாததைக் கண்டு அருட்தந்தை. அர்னால்டு, சே.சு. அவர்கள், கோட்டுர் ஜமீன்தாரின் ஆதிக்கத்திலிருந்த செல்லன் என்பவர் பேரால் விளங்கிய பட்டிடையை (நிலங்களை) ரூ. 200/-க்கு குத்தகைக்கு எடுத்து மக்கள் பயிர் செய்து பிழைக்க வழி செய்து தந்தார். வயல்கள் தங்களின் குடியிருப்புக்கு சற்று தள்ளியிருந்ததை விரும்பாத மக்கள் ஒருவர்பின் ஒருவராக செல்லன் பட்டிடையிலிருந்த நத்தத்தில் வீடுகளைக் கட்டிக் கொண்டு நிரந்தரமாக குடியமர்ந்தனர். இதுவே, செல்லம்பட்டிடை தோன்றிய வரலாறு ஆகும்.

செல்லன் என்பவரிடம் இருந்து வாங்கிய "கழனிகளை" அதாவது "பட்டிடை" என்றால் "கழனிகள்", "வயல்கள், என்று பொருள் இவ்வாறாக "செல்லம்பட்டிடை" என இவ்வூருக்கு பெயர் வந்தது.

கிராமத்தில் மக்கள் விவசாயத் தொழிலை அவர்களை உயிரினும் மேலாக போற்றி முப்போகமும் விளைவித்தனர். பனிப்பயிர்களாக மொச்சை, அவரை, துவரை, உளுந்து. காராமணி, கம்பு, சோளம் போன்றவைகளை குண்ணுமோடு குன்றுமேட்டில், மாடுகட்டி ஏர் உழுது அந்தக் கூழாங்கற்களிடையே விதைத்து விட்டு வந்து விடுவார்கள். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இத்தானியங்கள் மிக அருமையாக விளைந்து நல்ல மகசூலைக் கொடுக்கும்.
வருமானமும் கிடைக்கும், கால்நடைகளுக்கு தீவனமும் கிடைக்கும்.

கால்நடைகளின் எண்ணிக்கையானது ஊர் மக்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு. செல்லம்பதியில் ஒவ்வொரு வீட்டிலும் பால் அதாவது பசும்பால், எருமைப்பால் என பால்வளமும் வெண்ணெய், நெய்வளமும் பெருகி மக்கள் முழு சுகாதாரம், ஆரோக்கியம் பெற்று, எந்தப் போர் நடந்தாலும் போரிட தயாராக இருக்கும் வீரர்கள் போல் கம்பீரமாக, ஒற்றுமையாக வாழ்ந்தனர்.

வேர்க்கடலை, மிளகாய், நெல், எள் இன்னும் எது வேண்டுமானாலும் விதைகளாக பதப்படுத்தி விற்றனர். வியாபாரத்திற்கும் விற்றனர்.
செல்லம்பட்டிடை கிராமமே மேலே குறிப்பிட்ட இப்பயிர் வகைகளுக்குப் பெயர் பெற்றதாகும்.

வெள்ளைக்காரர்கள் அவர்கள் ஆணைப்படி பருத்தியும், பருத்திக்கு வண்ணமேற்றும் அவுரி (or) நீலம் பயிர்களை கட்டாயப்படுத்தி பயிர் செய்வித்தனர். செல்லம்பட்டிடை கிராமத்தில் இருந்து அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு பருத்தியும், வண்ணமேற்றும் பயிராக இண்டிகோ நீலம் ஏற்றுமதி செய்யப்பட்டது. சில நிலங்களில் இன்றும் வண்ணம் காய்ச்சிய அவுரி தொட்டிகள் இருக்கின்றன.

இந்த ஏற்றுமதி பயிர்கள் மூலம் லாபம் பெற்று மேலும் நிதிகள் பெற்று செல்வந்தர்களானதால், இம்மக்கள் ஊரைச் சுற்றியுள்ள பல விளை நிலங்களை ஆலயம் கட்டவும், ஆலய திருப்பணிகளுக்கும், திருப்பணியாளர்களின் தேவைகளுக்காகவும், தானமாக வழங்கினர்.

இரண்டாம் உலகப் போரில் செல்லம்பதியின் பங்கு

இவ்வாறாக பருத்தியும், பருத்திக்கு வண்ணம் தரும் நிறமும் ஏற்றுமதி செய்வதால், வெள்ளைக்காரன் ஆதிக்கத்தில் இருந்த நம் தாயகம், இரண்டாம் உலகப் போரை சந்திக்க நேர்ந்தது. அச்சமயத்தில் ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள், இராணுவ வாகனங்களில் ஊருக்குள் நுழைந்து 13 வயது முதல் உள்ள ஆண் பிள்ளைகள் பலரை செல்லம்பட்டிடை, எலுமியன்கோட்டூர், கண்ணூர், பண்ணூர் போன்ற இடங்களில் இருந்து, ராணுவத்தில் கட்டாயம் பணிபுரிய அழைத்துச் சென்றனர். இவர்கள் இரண்டாம் உலகப் போரில் பணிபுரிந்ததால், அரசு இவர்களுக்கு இராணுவ தரப்பில் இருந்து இனாமக நிலம் வழங்கியது.

செல்லம்பட்டிடை மறைத்தலம் மற்றும் பங்கின் வரலாறு:

1. 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிறிஸ்தவம் தொடங்கி அப்போது Rev.Fr.அர்னால்டு, சே.ச, தந்தை Rev.Dr.அலோசியஸ்
2. அவர்களுக்கு பிறகு 1924-ம் ஆண்டு வரை எத்தனை பங்குத்தந்தையர்கள் பணிபுரிந்தனர் என்ற குறிப்புகள் இல்லை.அதன்பிறகு
3. (1924 - 1938) Rev.Fr.E.D. நோரோனா
4, (1938 – 1939) Rev.Fr. K.G. அமலன்
5. (1939 - 1941) Rev.Fr. சல்டானா
6. (1942 - 1952) Rev.Fr. C.G. மரிய ஜோசப்
7. (1954 - 1954) Rev.Fr. J.N ரோட்ரிக்ஸ்
8. (1954 - 1962) Rev.Fr c அருமைநாதன்
9. (1962 - 1968) Rev.Fr. C இன்னைய்யா
10. (1968 - 1969) Rev.Fr. அந்தையா
11. (1969 - 1970) Rev.Fr G.S இருதயராஜ்
12. (1970 - 1971) Rev.Fr. M. லூயிஸ்
13, (1971 - 1974) Rev.Fr. D. அந்தோணிதாஸ்
14, (1974 - 1988) Rev.Fr. ஜோசப் சோல்லானால்
15. (1988 - 1990) Rev.Fr. K.C. ஜோசப்
16. (1990 - 1994) Rev.Fr.G. நம்பிக்கை நாதன்
17, (1994 - 1997) Rev.Fr. பாக்கியராஜ் ராயன் ச.ச.
18, (1997) Rev.Fr.ஸ்டீபன் பெர்னாண்டோ ச.ச
19, (1997 - 1998) Rev.Fr. சௌந்தராஜ் ச.ச
20. (1998 - 2000) Rev.Fr. G.G. லூர்துராஜ்
21, (2000 - 2004) Rev.Fr. G. கிறிஸ்துராஜ்
22, (2004 - 2009) Rev.Fr. L. ஜான் பெஞ்சமின்
23, (2009 - 2010) Rev.Fr. ஜேம்ஸ் (O.M.I.)
24. (2010 - 2013) Rev.Fr. அம்ரோஸ் அந்தோணிசாமி (O.M.I.)
25, (2013 - 2015) Rev.Fr. ஜோசப் மரிய செல்வம் (O.M.I.)
26. (2015 - 2016) Rev.Fr. ஆரோக்கியசாமி (O.M.I.)
27. (2016 - 2019) Rev.Fr. S.D. ஆரோக்கியராஜ் (O.M.I.)

ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் ஆகியவர்கள் வணிக ரீதியாக ஏற்பட்டிருந்த போட்டி மனப்பான்மை மதத்தளவிலும் ஊடுருவி இருந்தது. அச்சமயத்தில் இங்கே இரண்டு ஆலயங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. அதற்கு சான்று பகிர்வது போல இங்கே சிறியதும் பெரியதுமாக இரண்டு ஆலய மதிற்சுவர்கள் இன்றும் இருக்கின்றன. டச்சுக்காரர் வசம் இரண்டாவதாக கட்டிய சிறிய ஆலயம் இருந்ததாக தெரிகிறது. ஒரே சேசுவை தங்கள் தெய்வமாக வழிபடும் மக்கள் இரு சபைகளாக பிறிந்திருக்கும் அவலத்தை காலப்போக்கில் உணர்ந்த மக்கள் ஒரு மனப்பட்டவராய் முதலில் எழும்பியிருந்த ஆலயத்தை 1861-ம் ஆண்டு சிலுவை வடிவமாக சற்று பெரியதாக அமைத்து வழிபாடு நடத்தியிருக்கிறார்கள்.

செல்லம்பட்டிடையானது அப்போது கீழச்சேரி மறைதளத்தின் கிளை தளமாக இருந்த காலத்தினால் குருவானவர் கீழச்சேரியில் சில நாளும் செல்லம்பட்டிடையில் சில நாளுமாக பணிசெய்து வந்திருக்கிறார்.

செல்லம்பட்டிடையில் விசுவாசிகளின் எண்ணிக்கை வளர்ந்து வந்தாலும் கீழச்சேரி சுற்றிய பக்கங்களில் பல கிளைத்தலங்கள் ஏற்பட்ட காரணத்தினாலும் அப்போதைய ஆயர். அவர்கள் இதனை 1911-ம் ஆண்டு தனி மறைத்தலமாக உயர்த்தினார். இதன் முதல் பங்கு குருவாக அருட்தந்தை அலோசியஸ் அவர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்.

அப்போதைய செல்லம்பட்டிடை மறை தலத்தில் இப்போதும் கிளை தலங்களாக உள்ள எலுமியன் கோட்டூர் (நரசிங்கபுரம்), ப்ளேசஸ் கார்டன்

ஆகியவற்றோடு உரியூர்குப்பம், அகரம், புதுமா\விலங்கை ஆகிய கிளைத்தளங்களும் இருந்திருக்கின்றன. அப்போதைய கிறிஸ்தவரின் எண்ணிக்கை 1003 பேர் ஆகும்.

காணிக்கை அன்னையின் திருவிழாவும், திருக்கொடியேற்றமும் கண்கொள்ளா திருத்தேர்பவனியும் செல்லம்பதியின் செல்வமாகிய தூய காணிக்கை அன்னை திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி 23-ஆம் தேதி திருக்கொடியேற்றி ஒன்பது நாட்கள் நவநாள் பக்தியுடன் ஆரம்பமாகும்.

நற்கருணை திரு உலா
பிப்ரவரி முதல் தேதி அன்று, இறைமகனை (இம்மானுவேலர், எல்ஷடாய்) திவ்விய நற்கருணை பேழையில் அமரச்செய்து, அரசராக பவனியாக திருப்பயணம் மேற்கொள்வர்.

பிப்ரவரி 2-ஆம் நாள் திருவிழா நாள், இயேசு பாலன் பிறந்த 40-ஆம் நாள் காணிக்கையாக அன்னை ஆலயத்தில் கொடுத்த நாள். ஆம் இவ்வாலயத்தின் 250 ஆண்டுகள் சிறப்பு மிக்க நாள்! சீர்மிகு நாள்..!

அன்னை மரியாள் பிப்ரவரி 2-ஆம் நாள் ஆலயத்தில் காணிக்கையாக தன் அன்பு மகன், அற்புத மகனை கொடுக்கும் இந்நாளில் "செல்லம்பதி” கிராமம் முழுவதையும் இயேசுவிடம் காண்பித்து, இதோ உன் மக்கள், மற்றும் என் மக்கள் இவர்களை காப்பது உன் கடமை, உன் கரங்களில் செல்லம்பதியின் முத்துக்களை தருகிறேன் என்று சொல்வது போல இருக்கும்.

புதுமைகள் நிறைந்த புனித அந்தோணியார் கெபி,
புனித குழந்தை தெரசாள் கெபி,
லூர்து அன்னை கெபி :
ஆகியன உள்ளது குறிப்பிடத்தக்கது.

புனித லூயிஸ் கருணை இல்லம்:
1962-ஆம் ஆண்டில் இங்கு இருந்த தாயார் அவர்களின் முயற்சியாலும் அருட்திரு. இன்னையா அவர்களின் முயற்சியாலும் இங்கு ஒரு "கருணை இல்லம்" ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது. சென்னையிலிருந்தும், சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் 150 சிறுவர் சிறுமியர் இங்கு தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

ஆர்.சி.எம். பள்ளியும் கன்னியர் இல்லமும் சிறப்புற செயல்பட்டு மக்களின் வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன.

செல்லம்பதியும் பல்லவர் கால சிற்பங்களும் அடையாளங்களும் :
செல்லம்பட்டிடை கிராமத்திலும் அன்றும் இன்றளவிலும் கிணறு தோண்டும் போது குளம் வெட்டும் போதும் கால்வாய்கள் அமைக்கும் போதும் வீடு கட்ட மண்ணை தோண்டும் போதும் கல்வெட்டுகள் அதிகமான அளவில் கண்டுபிடிக்கப்பட்டன.

பங்குத்தந்தையர்களின் முக்கிய பங்களிப்புகள்:

அருட்திரு. நோரோனா அவர்கள் (1924-38):
மக்களை ஆன்மீக வழியில் நடத்திச் சென்றதுடன் கல்வியின் அவசியத்தைக் கருதி புனித அடைக்கல மாதா சபையின் கிளை இல்லம் ஒன்றை பெரும் முயற்சியின் பயனாய் இங்கு நிறுவி, பள்ளியின் நிர்வாகத்தை அவர்களிடம் ஒப்படைத்தார்.

அருட்திரு. சால்டானா அவர்கள் (1939 - 41):
புனித வெள்ளியன்று உபயோகிக்கும் 15 அடி உயர தேக்குமர சிலுவையும் 5 1/2 அடி உயர சேசுவின் திருவுடல் சுரூபமும் அன்று இவர் வாங்கி வைத்து மக்களின் விசுவாசத்தை ஆழப்படுத்தினார்.

அருட்திரு. சி.ஜி. மரிய ஜோசப் அவர்கள் (1941 - 52):
ஆலயத்தை பழுது நீக்கம் செய்து புதுப்பித்தார்.

அருட்திரு. N. R. ரோட்ரிக்ஸ் அவர்கள் (1952 - 54):
மக்களை ஆட்டிக்கொண்டிருந்த குடிப்பழக்கதையும், சாராயத்தொழிலையும் ஒழிக்க அரும்பாடுபட்டார். தவறு தெய்தவர்களை கடுமையாகக் கடிந்து அவர்கள் திருந்தி வாழ உழைத்தார்.

அருட்திரு எல். அருமைநாதன் அடிகள் (1954 - 62):
இவரது காலத்தில் ஆலயம் மின்சார வசதியைப் பெற்றது. கோயில் நிலங்களையும் பத்திரங்களையும் வகைப்படுத்தி ஒழுங்கு படுத்தினார்.

அருட்திரு. இன்னையா அடிகள் (1962 - 68):
கோழிப் பண்ணைகள், தையல் பயிற்சி நிலையமும் நிறுவி சுய வேலை வாய்ப்பு பெற உதவினார். கன்னியர் மேற்பார்வையில் இயங்கிவரும் கருணை இல்லம் துவக்கப்பட்டது.

அருட்திரு. அந்தையா அவர்கள் (1968-69):
குளங்களையும், கிணறுகளையும் ஆழப்படுத்தவும், கால்வாய்கள் வெட்டவும், சமூக நல நிறுவனங்களிலிருந்து உதவி பெற்றுத் தந்தார்.

அருட்திரு. ஜோசப் சொல்லால் அவர்கள் (1974 - 1988):
சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளாக விழாக்காலங்களில் சீரழிந்து வந்த சாராயத் தொழில் இவரது காலத்தில் ஒழிக்கப்பட்டது. ஆலயத்தை புதுப்பித்தார். நிச்சயமற்ற நீர் பாசனத்தால் ஏற்பட்ட ஏழ்மையினின்றும் மக்களை விடுவிக்க நீர்பாசன அபிவிருத்திக்காக திட்டங்கள் தீட்டி செயலாக்க முயன்று வெற்றியடையச் செய்தார்.

அருட்திரு. Rev. Fr. நம்பிக்கை நாதன் (1990 – 1994):
கிளைப்பங்கான எலுமியன் கோட்டூர்-ஐ சீர்படுத்தி ஆலயம் கட்டினார்.

அருட்திரு. Rev. Fr. S.D. ஆரோக்கியராஜ் OMI (2016 - 2019)
உரத்த குரலுக்கு சொந்தக்காரர். ஒவ்வொரு நாளும் திருப்பலி நிகழ்வுகளில் வரும் புனிதர்களின் பிறப்பு - இறப்பு விழாக்களையும், அவர்களின் வரலாறு மற்றும் பூர்வீகத்தையும் மிக சிறப்பாக சொல்லி மறையுரை ஆற்றுபவர். 23-01-2019 அன்று 72 அடி உயரத்தில் புதிய கொடிமரம் அமைத்து சிறப்புற செய்துள்ளார் . அலங்கார நுழைவு வாயில் அமைத்தார். மேலும் பல்வேறு வளர்ச்சிக்குரிய பணிகளை செய்ததுடன், தற்போது சுமார் இரண்டாயிரம் மக்கள் அமர்ந்து திருப்பலி காணும் வகையில் புதிய ஆலயம் கட்ட தீர்மானித்து அதற்குரிய காரியங்களை செய்து வருகின்றார்.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட செல்லம்பட்டிடை இறைசமூகம் மென்மேலும் வளர வாழ்த்துவோம்..!