946 புனித தோமையார் ஆலயம், தெற்கு விஜயநாராயணம்

          

புனித தோமையார் ஆலயம்

இடம்: தெற்கு விஜயநாராயணம், 627118

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித ஜெபமாலை அன்னை ஆலயம், மன்னார்புரம்

பங்குத்தந்தை அருட்பணி. J. எட்வர்ட்

குடும்பங்கள்: 55 (உள்ளூர்10, வெளியூர் 45)

மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 06:00 மணி திருப்பலி

திருவிழா: மே மாதம் 01-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்சகோதரி. பனிமயம்

2. அருட்சகோதரி. சகாயராணி

3. அருட்சகோதரி. மரியா சூசை தஸ்நேவிஸ்

4. அருட்பணி. ஆரோக்கிய லாசர் சூசை

வழித்தடம்: திருநெல்வேலி -திசையன்விளை வழித்தடத்தில், தெற்கு விஜயநாராயணம் (INS கட்டபொம்மன்) அமைந்துள்ளது. 

Location map: St. Thomas RC Church, South Vijayanarayanam

https://maps.app.goo.gl/douEdH1sYHqYothA6

வரலாறு:

19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கூத்தென்குழியைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் மீன் மற்றும் சுண்ணாம்பு வணிகத்தின் காரணமாக தெற்கு விஜயநாராயணத்தில் குடியேறினர். அவ்வேளையில் புனித தோமையாரை பாதுகாவலராகக் கொண்டு ஓலைக் குடிசை ஆலயம் அமைத்து, இறைவனை வழிபட்டு வந்துள்ளனர்.

பின்னர் 1870 ஆம் ஆண்டில் தற்போதைய ஆலயத்தை சுண்ணாம்பு கலந்த சுவர்கள் மற்றும் ஓடு வேய்ந்த கூரையுடன் அமைத்தனர். 

1923 ஆம் ஆண்டு ஆலய முன்புறம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

1934 ஆம் ஆண்டு ஆலயத்தின் வடக்கு பகுதியில் கல்லறைத் தோட்டத்திற்கு இடம் வாங்கப்பட்டது.

1969 ஆம் ஆண்டு அருட்பணி. ஹெர்மாஸ் முடுதகம் அவர்களின் உதவியுடன் ஆலயத்தை சுற்றிலும் மதிற்சுவர் கட்டப்பட்டது.

அணைக்கரை மிஷனின் கீழ் செயல்பட்டு வந்த தெற்கு விஜயநாராயணமானது, 1982 ஆம் ஆண்டு முதல் மன்னார்புரம் பங்கின் கிளைப் பங்காக  மாற்றப்பட்டது.

2000 மில்லினியம் ஆண்டு நினைவாக, 2000 ஆம் ஆண்டில் மில்லினியம் நினைவு அரங்கம் கட்டப்பட்டது.

2011 ஆம் ஆண்டில் தெற்கு விஜயநாராயணம் மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயமும், பீடமும் புதுப்பிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு அசன மண்டபம் கட்டப்பட்டது.

2016 ஆம் ஆண்டு தூய ஆரோக்கிய அன்னை கெபி கட்டப்பட்டது.

01.05.2018 அன்று கொடிமரம் புதுப்பிக்கப்பட்டது.

ஆலய பீடமானது மீண்டும் அழகுற புதுப்பிக்கப்பட்டு, 08.05.2022 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

மிகவும் பழைமையான புனித தோமையார் மரச்சுரூபம், மாதா சுரூபம், புனித செபஸ்தியார் சுரூபம் மற்றும் பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித லேபர் (St S.Labre) சுரூபம் ஆகியன இவ்வாலயத்தில் உள்ளது தனிச் சிறப்பு.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர் திரு. அருள் அவர்கள்

ஆலய வரலாறு: தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழா மலர்.