905 புனித பதுவை அந்தோனியார் ஆலயம், அன்பின் நகரம்

 

புனித பதுவை அந்தோனியார் ஆலயம்

இடம்: அன்பின் நகரம், பனையடிபட்டி அஞ்சல், வெம்பக்கோட்டை தாலுகா

மாவட்டம்: விருதுநகர்

மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: விருதுநகர்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: அற்புத குழந்தை இயேசு ஆலயம், ஒத்தையால்

பங்குதந்தை: அருள்பணி. ஜான் மில்டன், MSFS

குடும்பங்கள்: 125

அன்பியங்கள்: 6

ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி

மாதத்தின் முதல் செவ்வாய் மாலை நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர் 

திருவிழா: மே மாதம் முதல் சனி, ஞாயிறு 

வழித்தடம்: சாத்தூர் -வல்லம்பட்டி

சாத்தூர் -ஏழாயிரம்பண்ணை -கிருஷ்ணாபுரம் விளக்கு

கண்டியாபுரம் பேருந்து நிறுத்தம்.

Location map:

https://maps.app.goo.gl/jyCcQavyJdbZqfqF8

வரலாறு:

பட்டாசு தொழிலுக்கு பெயர் பெற்ற கிராமங்களில் ஒன்றான அன்பின்நகரில், கத்தோலிக்க விசுவாசமானது தொடக்க காலத்தில் ஓலைக் குடிசையில் ஆரம்பித்து, இன்று வானுயர்ந்த கோபுரங்களுடன் உயர்ந்து வளர்ச்சி பெற்று நிற்கிறது.

சுமார் 1960 காலகட்டத்தில் சாத்தூர் பங்கின் ஒருபகுதியாக அன்பின் நகரம் விளங்கி வந்தது. ஊரில் ஆலயம் இல்லாததால் பந்தல் மற்றும் குடிசை ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்துள்ளனர். சாத்தூர் பங்குத்தந்தையாக 1967 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அருட்பணி. சந்தியாகு அவர்களின் வழிகாட்டலில் ஆலயம் கட்ட நிலம் வாங்கப்பட்டு, ஆலய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது.‌ அதன் பின்னர் அருட்பணி. மட்டம் அவர்களின் பணிக்காலத்தில் ஆலயம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, 1970 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டது. அப்போது அன்பின் நகரில் 20 குடும்பங்கள் இருந்தன. 

அருட்பணி. சேவியர் ராஜ் அவர்களின் வழிகாட்டலில் 1997 ஆம் ஆண்டு புனித பதுவை அந்தோனியார் திருவிழா முதன் முதலாக கொண்டாடப்பட்டது.

1999 ஆம் ஆண்டு ஒத்தையால் அற்புத குழந்தை இயேசு ஆலயமானது தனிப்பங்கான போது, அன்பின் நகரம் ஆலயமானது ஒத்தையாலின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது. அப்போது முதல் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஒத்தையால் பங்கின் முதல் பங்குத்தந்தை அருட்பணி. ஜேம்ஸ் ஆனந்தராஜ் MSFS அவர்களால் அன்பின் நகரில் ஞாயிறு தோறும் காலை 10:30 மணிக்கு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பணிபுரிந்த பங்குத்தந்தையர்களால் செவ்வாய் மாலையில் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர் நிறைவேற்றப்பட்டது. 

பழைமையான ஆலயம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் புதிய ஆலயத் தேவை ஏற்பட்டது. ஆகவே அருட்பணி. L. ஜெயராஜ் MSFS அவர்களின் முயற்சி மற்றும் அன்பின் நகரம் இறைமக்களின் ஒத்துழைப்புடன் புதிய ஆலயத்திற்கு 31.07.2022 அடிக்கல் நாட்டப்பட்டது. அருட்பணி. L. ஜெயராஜ் MSFS அவர்கள் பல்வேறு மறைமாவட்ட ஆலயங்களுக்குச் சென்று நிதிதிரட்டி ஆலய கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து வந்தார். மேலும் அன்பின் நகரம் மக்களின் தன்னலமற்ற ஒத்துழைப்பு மற்றும் நிதிபங்களிப்புடன் வானுயர்ந்த இரண்டு கோபுரங்களுடன் கூடிய அழகிய ஆலயம் கட்டப்பட்டு, 23.05.2023 அன்று மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு Dr. அந்தோனி பாப்புசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, தமிழ்நாடு -புதுச்சேரி மாகாண MSFS தலைவர் அருட்பணி. A. பாட்ரிக் ஜெயராஜ் MSFS அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அன்பியங்கள் பெயர்கள்:

1. புனித விண்ணரசி மாதா

2. புனித இராயப்பர்

3. புனித கபிரியேல்

4. புனித அந்தோணியார்

5. புனித தொன் போஸ்கோ

6. புனித மத்தேயு 

ஆலய பங்கேற்பு அமைப்புகள்:

1. பாடகற்குழு

2. பீடப்பூக்கள்

3. மரியாயின் சேனை

4. புனித அந்தோனியார் இளைஞர் நற்பணி மன்றம்.

கோடி அற்புதராம் புனித பதுவை அந்தோனியாரின் வல்லமை நிரம்பப் பெற்ற அன்பின் நகரம் வாருங்கள்...‌ இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்லுங்கள்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய நிர்வாகி திரு. பாக்கியராஜ் அவர்கள் வழிகாட்டலில் புல்லக்கவுண்டன்பட்டி ஆலய உபதேசியார் V. சசி ( A ) சாலமோன்.