606 திருஇருதய ஆண்டவர் ஆலயம், கரைப்பூண்டி


திருஇருதய ஆண்டவர் ஆலயம் 

இடம் : கரைப்பூண்டி

மாவட்டம் : திருவண்ணாமலை 

மறைமாவட்டம் : வேலூர் 

மறைவட்டம் : போளூர் 

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : புனித தோமினிக் சாவியோ ஆலயம், புலிவானந்தல்

பங்குத்தந்தை : அருள்பணி. M. பாக்கியராஜ் மோயீசன்

குடும்பங்கள் : 24

அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு 

திருவிழா : ஜூலை மாதத்தில். 

மண்ணின் இறையழைத்தல்:

அருள்பணி. வளன், இத்தாலி 

வழித்தடம் : சேத்துப்பட்டு -போளூர். 

வரலாறு : 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறு கிராமமான கரைப்பூண்டியில் வாழ்ந்து வந்த கத்தோலிக்க மக்களின் ஆன்மீகத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஓடு வேய்ந்த சிறு ஆலயம் கட்டப்பட்டு, போளூர் ஆலயத்தின் கிளைப் பங்காக சலேசியன் சபை குருக்களால் வழிநடத்தப்பட்டு வந்தது. 

2004 -ஆம் ஆண்டு புலிவானந்தல் தனிப் பங்காக உயர்த்தப் போது, அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

புலிவானந்தல் பங்குத்தந்தை அருள்பணி. ஆரோக்கியசாமி அவர்களின் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 09.06.2007 அன்று வேலூர் மறைமாவட்ட பரிபாலகர் பேரருள்பணி. M. ஜோ லூர்துசாமி அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. M. பாக்கியராஜ் மோயீசன்.