610 புனித சவேரியார் ஆலயம், இறையமங்கலம்

   

புனித சவேரியார் ஆலயம் 

இடம் : இறையமங்கலம்

மாவட்டம் : நாமக்கல் 

மறைமாவட்டம் : சேலம் 

மறைவட்டம் : திருச்செங்கோடு

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சோழசிராமணி 

பங்குத்தந்தை : அருட்பணி. K. பிரசன்னா 

குடும்பங்கள் : 27

ஞாயிறு காலை 07.00 மணிக்கு திருப்பலி 

திருவிழா : டிசம்பர் மாதம் 25 ம் தேதி. 

வழித்தடம் : சோழசிராமணியிலிருந்து பட்லூர் செல்லும் சாலையில் இறையமங்கலம் அமைந்துள்ளது. 

வரலாறு :

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அழகிய சிறிய கிராமமான இறையமங்கலத்தில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலய வரலாற்றைக் காண்போம். 

நாமக்கல் பங்குத்தந்தை அருட்பணி. மத்தேயு தெக்கடம் அவர்கள் புதிதாக கிறிஸ்தவம் தழுவிய மக்களை வழிநடத்தி வந்தார். தொடர்ந்து நாமக்கல் பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்களின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வந்த இறையமங்கலம், 1946 -ல் பெருங்குறிச்சி தனிப்பங்காக ஆனபோது அதன் கீழ் செயல்பட்டு வந்தது. 

பெருங்குறிச்சி பங்குத்தந்தை அருட்பணி. M. S. மார்ட்டின் (2004-2006) பணிக்காலத்தில் இறையமங்கலத்தில் புனித சவேரியார் ஆலயம் கட்டப்பட்டு 28.08.2005 அன்று சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

2005 ஆம் ஆண்டு சோழசிராமணி தனிப்பங்கான போது, இறையமங்கலம் அதன் கிளைப் பங்காக ஆனது.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. K. பிரசன்னா.