புனித செபஸ்தியார் ஆலயம்.
இடம்: நெட்டுத்தெரு, திண்டுக்கல்
மாவட்டம்: திண்டுக்கல்
மறைமாவட்டம்: திண்டுக்கல்
மறைவட்டம்: திண்டுக்கல்
நிலை: கிளைப்பங்கு
பங்கு : தூய வளனார் கத்தீட்ரல் பேராலயம், திண்டுக்கல்
பங்குத்தந்தை: அருள்பணி. தா. சகாயராஜ் (வட்டார அதிபர்)
உதவிப் பங்குத்தந்தையர்கள்
அருள்பணி. ஜெபராஜ்
அருள்பணி. நெல்சன்
குடும்பங்கள் : 50 (சிறிய தெரு)
அன்பியங்கள்: 2
1. புனித செபஸ்தியார் அன்பியம்
2. புனித வளனார் அன்பியம்
பிரதி மாதம் இரண்டாம் ஞாயிறு அன்று அன்பிய கூட்டம் நடைபெறும்.
ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் செவ்வாய்க்கிழமை மாலை 06:30 மணி திருப்பலி
திருவிழா: ஜனவரி மாதம் இரண்டு மற்றும் மூன்றாம் வாரம் (10 நாட்கள்)
ஆலய வழிபாட்டு நிகழ்வுகள் :
திங்கட்கிழமை மாலை 07:15 மணிக்கு புனித சூசையப்பர் நவநாள் செவ்வாய்க்கிழமை மாலை 07:15 மணிக்கு புனித செபஸ்தியார் நவநாள், வெள்ளிக்கிழமை மாலை 07:15 மணிக்கு திருஇருதய ஆண்டவர் மன்றாட்டுக்கள், சனிக்கிழமை மாலை 07:15 மணிக்கு புனித ஆரோக்கிய அன்னையின் ஜெபமாலை நடைபெறும்.
வழித்தடம்: திண்டுக்கல் சோலை ஹால் தியேட்டர் அருகில்
Location map:
St, Sebastian Church, Nettu Street ,Dindigul.
https://maps.app.goo.gl/xwcJfUaDcCMNf7Pu8
வரலாறு:
1924 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சுண்ணாம்பு காரையால் கட்டப்பட்ட புனித செபஸ்தியார் ஆலயத்தில் வழிபாடுகள் நடந்து வந்தது. திருச்சி மறைமாவட்ட ஆளுகையின் கீழ், திண்டுக்கல் புனித வளனார் ஆலயத்தின் பகுதியாக நெட்டுத்தெரு அப்போதிருந்தது.
ஆலயம் ஊருக்கு உட்பகுதியில் இருந்ததாலும், ஆலயம் பழுது பட்டதாலும் அதனை இடித்து விட்டு, ஊரின் பிரதான பகுதியில் தற்போதைய புதிய ஆலயம் அருள்பணி. எஸ். சின்னப்பன் அவர்கள் பணிக்காலத்தில் 1986 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
2003 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, திண்டுக்கல் மறைமாவட்டம் உதயமான போது புனித வளனார் பங்கு மறைமாவட்ட கத்தீட்ரல் பேராலயமாக ஆனது. அப்போதுமுதல் நெட்டுத்தெரு புனித செபஸ்தியார் ஆலயமானது பேராலய பங்கின் கிளைப்பங்காக சிறப்புற செயல்பட்டு வருகிறது.
ஜனவரி மாதத்தில் நடைபெறும் திருவிழாவினை ஊரில் உள்ள பிற சமய மக்கள் அனைவரும் இணைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இரண்டு தேர்கள் திருவிழாவில் ஊரைச் சுற்றி வலம் வந்து மக்களுக்கு ஆசி வழங்கி வருகிறது.
தகவல்கள்: ஆலய செயலாளர் மற்றும் பொருளாளர்