784 புனித அல்போன்சா ஆலயம், சாலாமேடு

  

புனித அல்போன்சா ஆலயம்

இடம்: சாலாமேடு, விழுப்புரம்

மாவட்டம்: விழுப்புரம்

மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: விழுப்புரம்

பங்கு: புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், விழுப்புரம்

பங்குத்தந்தை: அருட்பணி. A. ஆல்பர்ட் பெலிக்ஸ்

குடும்பங்கள்: 120

அன்பியங்கள்: 4

புனித பவுல் அன்பியம்

புனித அந்தோனியார் அன்பியம்

புனித அல்போன்சா அன்பியம்

புனித அடைக்கல மாதா அன்பியம்

ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி

வாரநாட்களில் திருப்பலி காலை 06:30 மணி

திருவிழா: ஜூலை மாதம் 28-ம் தேதி

வழித்தடம்: விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து, பெரியார் பணிமனையின் இடதுபுறமாக சென்றால் சாலாமேடு ஆலயத்தை வந்தடையலாம்.

Location map:

https://g.co/kgs/2Jircx

வரலாறு:

விழுப்புரம் புனித பிரான்சிஸ் சவேரியார் பங்கின் ஒரு பகுதியாக சாலாமேடு பகுதி விளங்கி வந்தது. இந்த சாலாமேடு பகுதியில் இருந்து பங்கு ஆலயம் வெகுதொலைவில் இருந்ததால், சாலாமேடு பகுதியிலேயே ஒரு ஆலயம் கட்ட,  அருட்பணி. பால் தலமோர் (2008-2013) பணிக்காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, நிதி சேகரிக்கும் பணிகள் நடந்தது. முயற்சிகள் கைகூடவே அருட்பணி.‌ A. ஆல்பர்ட் பெலிக்ஸ் அவர்களால் 08.08.2017 அன்று ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 

புதுவை கடலூர் உயர் மறைமாவட்டம், சாலாமேடு இறைமக்கள், Carmalite Sisters of St. Theresa, St. Ann's of Madavaram, St. Joseph of Chambery மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களின் உதவியுடன், ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 24.04.2021 அன்று பங்குத்தந்தை அருட்பணி. A. ஆல்பர்ட் பெலிக்ஸ், உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. ஜீவா மற்றும் இறைமக்களின் முன்னிலையில் மேதகு ஆயர் Dr. A. பீட்டர் அபீர்  (Bishop of Sulthanpet & Apostolic Administrator Archdiocese of Pondicherry -Cuddalore) அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

பங்குத்தந்தை மற்றும் இப்பகுதியில் பணிபுரியும் அருட்சகோதரிகளின் வழிகாட்டலில் ஆன்மீகப் பாதையில் சிறப்பாக பயணித்து வருகிறது சாலாமேடு புனித அல்போன்சா ஆலயம் இறைசமூகம்.

28.07.2022 ஆகிய இன்று புனித அல்போன்சாவின் பெருவிழா தினம். ஆகவே சாலாமேடு ஆலயத்தில் இன்று திருவிழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது. சாலாமேடு இறைசமூகத்தினருக்கு திருவிழா நல் வாழ்த்துகள்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. A. ஆல்பர்ட் பெலிக்ஸ் அவர்கள்.