குடந்தை மறைமாவட்டம் (இலத்தீன்: Kumbakonamen(sis)) என்பது கும்பகோணம் புனித மரியன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
மக்கள் தொகை கத்தோலிக்கர் 195,582 (2004 இன் படி)
கதீட்ரல் புனித மரியன்னை கதீட்ரல்
வரலாறு
செப்டம்பர் 1, 1899: பாண்டிச்சேரி உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு குடந்தை மறைமாவட்டம் உருவானது.
சிறப்பு ஆலயங்கள்
சிறு பேராலயம்: பூண்டி மாதா திருத்தலப் பேராலயம்
தலைமை ஆயர்கள்
குடந்தை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
ஆயர் பிரான்சிஸ் அந்தோனிசாமி (மே 31, 2008 – இதுவரை)
ஆயர் டேனியல் பால் அருள்சுவாமி (மே 5, 1955 – ஆகஸ்ட் 16, 1988)
ஆயர் பீட்டர் பிரான்சிஸ் ராயப்பா (பிப்ரவரி 24, 1931 – செப்டம்பர் 20, 1954)
ஆயர் மரி-அகஸ்டின் சாப்புயிஸ், M.E.P. (மே 21, 1913 – டிசம்பர் 17, 1928)
ஆயர் ஹூகஸ்-மதலேன் பொத்தேரோ, M.E.P. (செப்டம்பர் 5, 1899 – மே 21, 1913)
குடந்தை மறைமாவட்டத்தின் இணையதளம்