586 புனித பாத்திமா அன்னை ஆலயம், பள்ளத்தாதனூர்

   

புனித பாத்திமா அன்னை ஆலயம்

இடம் : பள்ளத்தாதனூர்

மாவட்டம் : சேலம்

மறைமாவட்டம் : சேலம்

மறைவட்டம் : சேலம்

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : புனித செபஸ்தியார் ஆலயம், கூட்டாத்துப்பட்டி 

பங்குத்தந்தை : அருள்பணி. அந்தோணிதாஸ், HGN

குடும்பங்கள் : 30

ஞாயிறு : காலை 10.30 மணிக்கு திருப்பலி

திருவிழா : மே மாதம் 13 ம் தேதி. 

வழித்தடம் : கூட்டாத்துப்பட்டியிலிருந்து, அயோத்தியாபட்டணம் -பேளூர் செல்லும் சாலையில் 7கி.மீ தொலைவில் பள்ளத்தாதனூரில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 

வரலாறு :

அக்ரஹாரத்திலிருந்து பேளூர் செல்லும் சாலையில் 12கி.மீ தொலைவில் அமைந்துள்ள பள்ளத்தாதனூர் எனும் ஊரில், புனித ஞானப்பிரகாசியார் துறவற சபை அருள்சகோதரிகள், சுமார் 26 ஆண்டுகளாக மக்கள் வாழும் பகுதியில், வாடகை வீட்டில் தங்கி மறைப்பரப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.  

அருள்சகோதரிகள் மக்களை சந்திப்பதிலும், அவர்களுக்கு ஞான உபதேசம் புகட்டுவதிலும் ஈடுபட்டு பலரை திருமறையில் இணைத்தனர். அன்பியங்களை வழிநடத்தியும், முறையற்ற திருமணங்களை முறைப்படுத்தியும், ஏழை குழந்தைகளுக்குக் கல்வி புகட்டியும் மகத்தான பணிகளை அக்ரஹாரம் பங்கின் பங்குத்தந்தையுடன் இணைந்து செய்து வந்தனர். 

இங்கு ஆலயம் கட்டப்படும் வரை அருள்சகோதரிகள் இல்லத்திலேயே இறைமக்கள் வழிபாடுகளுக்காக ஒன்று கூடினர்.

ஊருக்கு வெளியில் அக்ரஹாரம் பங்குத்தந்தை அருள்பணி. ஆரோக்கியராஜ் அவர்களால் ஆலயம் கட்டப்பட்டு, 18.12.1989 அன்று அர்ச்சிக்கப் பட்டது. 

பின்னர் அக்ரஹாரம் பங்கிலிருந்து, பிரிந்து கூட்டாத்துப்பட்டி தனிப்பங்கான போது, அதன் கிளைப் பங்காக பள்ளத்தாதனூர் மாற்றப்பட்டது. 

பள்ளத்தாதனூரில் புனித ஞானப்பிரகாசியார் துறவற சபை அருள்சகோதரிகள், பணியாற்றி வருவதன் வெள்ளிவிழா நினைவாக (1974 -1999), பாத்திமா அருள்சகோதரிகள் இல்லமானது  கட்டப்பட்டு 12.09.1999 அன்று அருள்பணி. Dr. R. விக்டர் சுந்தர்ராஜ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

தற்போதைய புதிய ஆலயமானது கூட்டாத்துப்பட்டி பங்குத்தந்தை அருள்பணி. விக்டர் குரூஸ், HGN பணிக்காலத்தில் கட்டப்பட்டு, அப்போதைய சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சிங்கராயன் அவர்களால் 30.05.2016 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

தகவல்கள் : பங்குத்தந்தை அருள்பணி. அந்தோணிதாஸ், HGN.