387 புனித சூசையப்பர் ஆலயம், ஏரல்


புனித சூசையப்பர் ஆலயம்.

🌺இடம் : ஏரல்

🏵மாவட்டம் : தூத்துக்குடி
🏵மறை மாவட்டம் : தூத்துக்குடி
🏵மறை வட்டம் : தூத்துக்குடி

🌳நிலை : பங்குத்தளம்
🍀கிளைப்பங்குகள் :
🌷1. புனித சந்தியாகப்பர் ஆலயம், கொற்கை
🌷2. புனித தோமையார் ஆலயம், அதிசயபுரம்
🌷3. புனித அந்தோணியார் ஆலயம், அரசன்குளம்
🌷4. புனித அந்தோணியார் ஆலயம், திருவழுதிநாடார் விளை

💐பங்குத்தந்தை : அருட்பணி ஜேசுதுரை ஜான்சன்

🌹குடும்பங்கள் : 110
🌷அன்பியங்கள் : 7

🔥ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு

🔥நாள்தோறும் திருப்பலி : காலை 06.00 மணிக்கு.

🔥புதன் மாலை 06.00 மணிக்கு நவநாள், நற்கருணை ஆசீர், திருப்பலி.

🎉திருவிழா : துணை பாதுகாவலர் புனித செபஸ்தியார் திருவிழா ஜனவரி மாதத்தில் 4வது சனி, ஞாயிறு நிறைவடைகின்ற வகையில் பத்து நாட்கள்.

🎉பாதுகாவலர் புனித சூசையப்பர் திருவிழா மே மாதத்தில் முதல் சனி, ஞாயிறு நிறைவடையும் வகையில் பத்து நாட்கள்.

🍇மண்ணின் மைந்தர்கள் :
💐1. அருட்பணி ஜேசுராஜ்

💐1. அருட்சகோதரி அல்போன்ஸ்
💐2. அருட்சகோதரி கிளமென்டின்
💐3. அருட்சகோதரி இந்திரா பவுலின்.
💐4. அருட்சகோதரி பிரமிளா
👉வழித்தடம் : தூத்துக்குடி - ஏரல். மற்றும்
திருச்செந்தூர் - ஆத்தூர். இங்கிருந்து ஏரல் 5 கி.மீ.

👉Location map : St.Joseph's Church
Eral, Tamil Nadu 628801
https://maps.google.com/?cid=7660894269720860446

வரலாறு :
**********
🍀ஏரல் என்றவுடன் இயற்கை காட்சிகள் நிறைந்த ஊர் என்பது தான் நினைவில் வரும். 'பசும் பயிர் காட்சி பசியைத் துரத்தும்' என்பது போல எங்கெங்கு நோக்கினும் வாழைத் தோட்டங்கள், காய்த்து குலுங்கும் தென்னை மரத் தோப்புகள், பச்சைக் கம்பளம் விரித்தாற்போல பசும்நெல்வயல்கள், ஆற்றங்கரை ஓரத்திலே ஆடி நிற்கும் உமரிக் கீரைகள், கொழுந்து வெற்றிலை தோட்டங்கள், நெளிந்தோடும் நீரோடைகளில் குளித்து களித்து மகிழும் மக்கள் என ஏரலின் இயற்கை அழகினை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

🍇இயற்கை வளத்துடன் நின்றுவிடுவதில்லை ஏரலின் புகழ். வாணிபம் செய்யும் சிறந்த ஊர். காய்கறிகள் முதல் மளிகைப் பொருட்கள் வாங்கவும் சிறந்த இடம் ஏரல் என்று சொன்னால், அது மிகையில்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஏரல் ஊரில் புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

🌺புன்னைக்காயலிலிருந்து 6 மைல் தொலைவில் உள்ள ஏரல் ஆலயம் துவங்கிய காலத்தை சரியாக கூற இயலவில்லை என்றாலும், இலங்கை நாட்டில் புனித லேனாள் நாடகம் நடத்தப்பட்டு, அதிலிருந்து கிடைத்த நிதி மற்றும் ஊர் பெரியவர்களின் ஒத்துழைப்பாலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாலயம் கட்டப்பட்தாக கூறப்படுகிறது. இத்துடன் புனித சூசையப்பர் ஆலயம் பழைய காயல் பங்கின் கிளைப்பங்காக இருந்தது.

🙏இவ்வாலயத்தின் கிழக்கே மசூதியும், மேற்கே சவுக்கை முத்தாரம்மன் கோவிலும் அமைந்து சமய நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்குகிறது.

🍇10-07-1977 அன்று மேதகு ஆயர் அம்புறோஸ் ஆண்டகையின் ஆணையின்படி பழைய காயல் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, ஏரல் புனித சூசையப்பர் ஆலயம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு முதல் பங்குத்தந்தை அருட்பணி ஆஸ்வால்ட் அவர்கள் பொறுப்பேற்றார். இத்துடன் ஏரல் ஒத்தாசை மாதா ஆலயம், கொற்கை, அதிசயபுரம், திருவழுதிநாடார் விளை, அரசன்குளம் ஆகிய ஐந்து ஆலயங்களும் இதன் கிளைப் பங்குகளாக விளங்கின.

🌸1977 ம் ஆண்டில் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது. அருட்தந்தை ஆஸ்வால்ட் அவர்கள் தாய் சேய் நல மையத்தை ஏற்படுத்தி எல்லா சமய பெண்களையும் பங்கேற்கச் செய்து சமய நல்லிணக்கத்தை உருவாக்கினார்.

🌸1980 ம் ஆண்டு கொன்சாகா அருட்சகோதரிகள் இல்லம் கட்டப்பட்டது.
2001 ம் ஆண்டு ஏரல் ஒத்தாசை மாதா ஆலயம் தனிப் பங்கானது.

🍎அருட்பணி அந்தோணி பிச்சை (1997-2003) பணிக்காலத்தில் பங்கின் வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

📚பங்கின் கல்வி நிலையங்கள் :

🌸1940 ம் ஆண்டு தூய வளன் துவக்கப்பள்ளி, ஏரல்.

🌸1940 ம் ஆண்டில் புனித ஞானப்பிரகாசியார் நடுநிலைப் பள்ளி, கொற்கை துவக்கப்பட்டது.

💐பங்கின் சபைகள், இயக்கங்கள் :

🌷1. பீடப்பணியாளர் இயக்கம் :
🌷2. ஞாயிறு மறைக்கல்வி மன்றம் :
🌷3. அமலோற்பவ மாதா இளம் பெண்கள் இயக்கம் :
🌷4. செபஸ்தியார் இளைஞர்கள் இயக்கம் :
🌷5. மரியாயின் சேனை :
🌷6. திருஇருதய சபை :
🌷7. புனித வின்சென்ட் தே பவுல் சபை :
🌷8. பாடகற்குழு :
🌷9. புனித அந்தோணியார் சபை :
ஆகிய அமைப்புகள் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :

1. Rev. Fr. ஆஸ்வால்ட் (1977-1982)
2. Rev. Fr. தேவசகாயம் (1982-1987)
3. Rev. Fr. அமலதாஸ் (1987-1993)
4. Rev. Fr. பீட்டர் ராஜா (1993-1997)
5. Rev. Fr. அந்தோணி பிச்சை (1997-2003)
6. Rev. Fr. ஜாண் பென்சன் (2003-2004)
7. Rev. Fr. சகாயம் (2004-2006)
8. Rev. Fr. அலாய்சியுஸ் (2006-2011)
9. Rev. Fr. கிருபாகரன் (2011-2012)
10. Rev. Fr. ரெனால்டு மிசியர் (2012-2017)
11. Rev. Fr. ஜான்சன் (2007 முதல் தற்போது வரை...)

👉தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி ஜான்சன் அவர்கள்.