390 புனித அந்தோணியார் ஆலயம், திருவழுதிநாடார் விளை


புனித அந்தோணியார் ஆலயம் (கரிந்தகை அந்தோணியார் )

🖐இடம் : திருவழுதிநாடார் விளை, ஏரல்

🍀மாவட்டம் : தூத்துக்குடி
🍀மறை மாவட்டம் : தூத்துக்குடி
🍀மறை வட்டம் : தூத்துக்குடி

🍇நிலை : கிளைப்பங்கு
🍇பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், ஏரல்

💐பங்குத்தந்தை : அருட்பணி ஜேசுதுரை ஜான்சன்

🌳குடும்பங்கள் : 15
🌷அன்பியம் : 1

🏵ஞாயிறு திருப்பலி : இல்லை

🏵செவ்வாய்க்கிழமை திருப்பலி : மாலை 05.30 மணிக்கு

🏵மாதத்தின் முதல் செவ்வாய் காலை 10.00 மணிக்கு நற்செய்தி கூட்டம், திருப்பலி, அசனவிருந்து.

💐மண்ணின் இறையழைத்தல் : Rev. Sr ஜெயசீலி.

🎉திருவிழா : மே மாதத்தில் மூன்றாவது ஞாயிறு நிறைவடையும் வகையில் 13 நாட்கள்.

திருவழுதிநாடார் விளை வரலாறு :
*****************
🍇ஏரல் புனித சூசையப்பர் ஆலயம், புன்னைக்காயல் பங்குடன் இருந்த போது, 1923 ல் இப்பகுதியில் மூன்று கிறிஸ்தவ குடும்பங்கள் மட்டுமே இருந்தன. இவர்கள் பனை ஓலை குடிசையில் ஆலயம் அமைத்து, புனித அந்தோணியார் சுரூபம் வைத்து இறைவனை வழிபட்டு வந்தனர்.

🌷இந்த காலகட்டத்தில் இம்மூன்று கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்களுக்கும், பிற சபை கிறிஸ்தவ குடும்பங்களுக்குமிடையே ஏற்பட்ட மனக்கசப்பால் பனை ஓலை ஆலயம் தீக்கிரையாக்கப் பட்டது.

🌸ஆலயத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதுக்குவாய்த்தான் கிணற்றில் வீசப்பட்ட நிலையில், இங்கு ஆலயம் இருந்த அடையாளமே இல்லாமற் போனது.

💐இவ்வேளையில் இந்து சமய சகோதரர்களும், ஏரல், மாதா கோயில் உபதேசியார்களும் ஓடோடி வந்து உதவினார்கள்.

🍀பதனீர் காய்ச்சும் ஓலைக்குடிசை ஒன்று தூக்கி வரப்பட்டு, தற்காலிக ஆலயமானது.

👏இந்தத் தீயில் புனித அந்தோணியார் சுரூபத்தின் கரங்கள் கருகிப் போயின. கரங்கள் கரிந்து போனாலும், புனிதரின் கருணைக்கு குறைவு ஏற்படவில்லை. அன்பைப் பொழிந்தார், அதிசயங்களை நிகழ்த்தினார். இன்பமுற்ற இம்மக்கள் கரிந்தகை அந்தோணியார் என்று அன்போடு அழைக்க இப்பெயரே நிலைத்தது.

🌺1928 ல் ஆலயம் கட்டப்பட்டு மேதகு ரோச் ஆண்டகையால் அர்ச்சிக்கப் பட்டது.

🌸1977 ம் ஆண்டு ஏரல் புனித சூசையப்பர் ஆலயம் தனிப்பங்காக ஆனது முதல் அதன் கிளைப் பங்காக ஆனது.

🔥ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு நற்செய்தி கூட்டம், திருப்பலி நடைபெறும். தொடர்ந்து அசனவிருந்து வழங்கப்படும். இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புனிதரின் பரிந்துரையால் இறையருளை பெற்றுச் செல்கின்றனர்.

🌳ஏரல் புனித சூசையப்பர் பங்கின் கிளைப் பங்காக திருவழுதிநாடார்விளை ஆனது முதல் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :

💐1. Rev. Fr. ஆஸ்வால்ட் (1977-1982)
💐2. Rev. Fr. தேவசகாயம் (1982-1987)
💐3. Rev. Fr. அமலதாஸ் (1987-1993)
💐4. Rev. Fr. பீட்டர் ராஜா (1993-1997)
💐5. Rev. Fr. அந்தோணி பிச்சை (1997-2003)
💐6. Rev. Fr. ஜாண் பென்சன் (2003-2004)
💐7. Rev. Fr. சகாயம் (2004-2006)
💐8. Rev. Fr. அலாய்சியுஸ் (2006-2011)
💐9. Rev. Fr. கிருபாகரன் (2011-2012)
💐10. Rev. Fr. ரெனால்டு மிசியர் (2012-2017)
💐11. Rev. Fr. ஜான்சன் (2017 முதல் தற்போது வரை...)

👉தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி ஜான்சன் அவர்கள்.