41 ஜெபமாலை அன்னை ஆலயம், காஞ்சிரகோடு

   
தூய ஜெபமாலை அன்னை ஆலயம்.

இடம்: காஞ்சிரகோடு 

மாவட்டம்: கன்னியாகுமரி 

மறைமாவட்டம்: குழித்துறை

மறைவட்டம்: முளகுமூடு 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்கு : தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், சிராயன்குழி. 

பங்குத்தந்தை : அருட்பணி. அருள்

குடும்பங்கள்: 350

அன்பியங்கள்: 10

ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி

திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி -திருப்பலி காலை 06:30 மணி

புதன் மாலை 06:00 மணி நவநாள் திருப்பலி

சனி மாலை 06:00 மணி கெபியில் திருப்பலி

மாதத்தின் முதல் சனி மாலை 06:00 மணி கெபியில்; நற்கருணை ஆசீர், நற்செய்தி பெருவிழாவும் நடைபெறும்.

திருவிழா : அக்டோபர் 7 ஆம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருட்பணி. ஹென்றி ஏஞ்சல், SAC

2. அருட்பணி. வென்சுஸ் ஜார்ஜ், SAC

3. அருட்பணி. ஹென்றி பிரைட் 

1. அருட்சகோதரி பெல்லா மேரி, DM

2. அருட்சகோதரி மேரி செலின் 

3. அருட்சகோதரி பிளாசிட்டா 

4. அருட்சகோதரி பிலோ

5. அருட்சகோதரி பாத்திமா

6. அருட்சகோதரி குழந்தை தெரஸ் 

7. அருட்சகோதரி மேரி சுபா

8. அருட்சகோதரி மேரி ஜெயா.

வழித்தடம்:

நாகர்கோவில் -திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் காஞ்சிரகோடு அமைந்துள்ளது.

Location map: Our Lady of Rosary Church, Kanjiracode

https://g.co/kgs/9o81kyK

வரலாறு :

குமரி மாவட்டத்தில் திருவனந்தபுரம் -நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, பழைமையான காஞ்சிரகோடு தூய ஜெபமாலை அன்னை ஆலயமானது, சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளங்கினாவிளை பங்கின் ஒரு கிளைச் சபையாக உருவாகியது. 

1915 ஆம் ஆண்டு அருட்பணி. பீட்டர் தாமஸ், OCD அவர்களால், புனித ஜான் மரிய வியான்னியின் பெயரில் ஓலையால் ஆலயம் அமைக்கப்பட்டது.🌺1921 ஆம் ஆண்டு பள்ளியாடி பங்கின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.  

அருட்பணி. வின்சென்ட் பெரைரா பங்குத்தந்தையாக இருந்த போது, தூய ஜெபமாலை அன்னை பெயரால் ஒரு சிறு ஆலயம் எழுப்பப்பட்டு, 1956 ம் ஆண்டு மேதகு ஆயர் T. R. ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

1966 ஆம் ஆண்டு அருட்பணி. ஜார்ஜ் M. J அவர்கள் தூய ஜான் மரிய வியான்னி குருசடியை அமைத்தார். 🍉30.11.1974 அன்று மேதகு ஆயர் ஆரோக்கியசாமி அவர்களால் காஞ்சிரகோடு தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, இந்திய வேதபோதக சபை (IMS) குருக்களிடம் ஒப்படைக்கப் பட்டது. இச்சபையின் அருட்பணி. சீலாணாத் அடிகளார் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று பத்தாண்டுகள் சிறப்பாக பணியாற்றினார். தொடர்ந்து அருட்பணி. ரூபன் அடிகளார் பணிக்காலத்தில் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு, 21.02.1987 அன்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு ஆரோக்கியசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது . 

2002 ஆம் ஆண்டு முதல் கோட்டார் மறைமாவட்ட குருக்களிடம் காஞ்சிரகோடு திருச்சபை ஒப்படைக்கப்பட்டது. 

அருட்பணி. மரிய சூசை வின்சென்ட் பணிக்காலத்தில் ஆலயத்தின் மேற்குப் பக்கம் 60 சென்ட் நிலமும், வீடும் வாங்கி மாலை நேர இலவச பயிற்சி வகுப்புகள், சிறுசேமிப்பு ஆகியன நடைபெற வழிவகை செய்தார். 

2003 ல் பொறுப்பேற்ற அருட்பணி. மரியதாசன் பணிக்காலத்தில், அன்னை அரங்கம் கீழ்மாடி மற்றும் திருமண பயிற்சி மையம் ஆகியவற்றைக் கட்டினார். 

தொடர்ந்து அருட்பணி. ஜோக்கிம் அவர்கள் பொறுப்பேற்று, இணைப் பங்குத்தந்தையர்களாக அருட்பணி. ஆரோக்கிய ஷெல்லி றோஸ், அருட்பணி. ஜெயபாலன் ஆகியோர் பணிக்காலத்தில் அன்னை அரங்கம் மேல்மாடி துவக்கப்பட்டதுடன், ஆலய பீடம் புதுப்பிக்கப்பட்டது. 

2011 ல் பொறுப்பேற்ற அருட்பணி. வர்க்கீஸ் பணிக்காலத்தில் அன்னை அரங்கம் மேல்மாடிக் கட்டிடப் பணிகள் நிறைவு பெற்று திறக்கப்பட்டது. 

2015 ல் பொறுப்பேற்ற அருட்பணி. அருளப்பன் அவர்கள் பணிக்காலத்தில், காஞ்சிரகோடு ஆலய நூற்றாண்டு விழா 2015 ஆம் ஆண்டு, நான்கு மறைமாவட்ட ஆயர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. தூய லூர்து அன்னை கெபி கட்டப்பட்டு 2018 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டது. மேலும் தூய ஜான் மரிய வியான்னியின் பெயரில் ஐந்து அடுக்குகள் கொண்ட குருசடி புதிதாக கட்டப்பட்டு 2019 ல் அர்ச்சிக்கப் பட்டது. அருட்பணி. பிளாரன்ஸ், அருட்பணி. சுஜின் ஆகியோர் இணைப் பங்குத்தந்தையர்களாக பணியாற்றினார்கள். 

28.05.2019 முதல் அருட்பணி. அருள் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று சிறப்புற வழிநடத்தி வருகிறார்.

25-04-2018 Rosary கலை பயிற்சி மையம் என்ற பெயரில் கோடைகால கலை பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. 22-02-2020 அன்று Rosary Institute Of Fine Arts என்ற ஒரு நிறுவனமாக செயல்படுகிறது

 மஞ்சாடி, இரவிபுதூர்கடை, சிராயன்குழி ஆகியவை காஞ்சிரகோட்டின் கிளைப் பங்குகளாக இருந்தன. அவற்றில் சிராயன்குழி தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம் மட்டுமே தற்போது காஞ்சிரகோட்டின் கிளைப் பங்காக செயல்பட்டு வருகிறது. 

ஆலயத்தில் இடநெருக்கடி மற்றும் பழைமை காரணமாக புதிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, 10.12.2023 அன்று கோட்டார் மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் பழைய ஆலயமானது அகற்றப்பட்டு, தற்போது புதிய ஆலய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்

1. சிறார் இயக்கம்

2. இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம்

3. இளைஞர் இயக்கம்

4. நிதிக்குழு

5. தணிக்கைக்குழு

6. பங்கு அருட்பணிப் பேரவை

7. கத்தோலிக்க சங்கம்

8. மரியாயின் சேனை

9. கத்தோலிக்க சேவா சங்கம்

10. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்

11. புனித வின்சென்ட் தே பவுல் சபை

12. பெண்கள் பணிக்குழு

13. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்

14. புனித ஜான் மரிய வியான்னி மறைக்கல்வி மன்றம்

15. அன்பிய ஒருங்கிணையம்

16. பக்த சபைகள் ஒருங்கிணையம்

17. கிராம முன்னேற்ற சங்கம்

18. பீடச்சிறார்

19. பாடகற்குழு

தனிப் பங்காக உயர்த்தப்பட்ட பின்னர் பணிபுரிந்த  பங்குத்தந்தையர்கள் :

1. அருட்பணி. சீலாணாத், IMS

2. அருட்பணி. ரூபன், IMS

3. அருட்பணி. ரஞ்சன், IMS

4. அருட்பணி. அமர்தீப், IMS

5. அருட்பணி. சஜிவ், IMS

6. அருட்பணி. தேவதாஸ், IMS

7. அருட்பணி. விமல், IMS

8. அருட்பணி. அமர்நாத், IMS

9. அருட்பணி. மரிய சூசை வின்சென்ட் 

10. அருட்பணி. மரியதாசன் 

11. அருட்பணி. ஜான் அகஸ்டஸ் 

12. அருட்பணி. ஜோக்கிம் 

13. அருட்பணி. வர்க்கீஸ் 

14. அருட்பணி. அருளப்பன் 

15. அருட்பணி. அருள்

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. அருள் அவர்கள்.