885 புனித அருளானந்தர் ஆலயம், அருளானந்தபுரம் ஆண்டிமடம்

   

புனித அருளானந்தர் ஆலயம்

இடம்: அருளானந்தபுரம், ஆண்டிமடம் அஞ்சல்

மாவட்டம்: அரியலூர்

மறைமாவட்டம்: கும்பகோணம்

மறைவட்டம்: ஜெயங்கொண்டம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித மார்ட்டின் தே போரஸ் ஆலயம், ஆண்டிமடம்

பங்குத்தந்தை அருட்பணி. J. மரிய ஜோமிக்ஸ் சாவியோ

குடும்பங்கள்: 45

அன்பியங்கள்: 2

வெள்ளிக்கிழமை மாலை 07:00 மணி திருப்பலி

திருவிழா: பெப்ரவரி மாதம் 04ஆம் தேதி

வழித்தடம்: ஆண்டிமடம் -ஜெயங்கொண்டம் சாலையில், அருளானந்தபுரம் அமைந்துள்ளது.

Location map:

https://maps.app.goo.gl/DsL2TWJMZEVjYPNV8

வரலாறு:

அருளானந்தபுரத்தில் வசிக்கின்ற மக்கள் கூவத்தூர், வரதராஜன்பேட்டை, தென்னூர் முதலிட்ட ஊர்களிலிருந்து ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து குடியேறியுள்ளனர் என்று குறிப்பிடப்படுகிறது.

1956-ல் இங்கு வாழ்கின்ற மக்கள் அனைவரும் ஒன்று கூடி, மண் சுவரால் ஆன ஆலயத்தைக் கட்டினார்கள். அப்போது அருளானந்தபுரம் கூவத்தூருடன் இணைக்கப்பட்டு இருந்தது. பிற்காலத்தில் அந்த ஆலயம் இடிந்து விழுந்தது. ஆரம்பக் காலத்தில் அருட்தந்தையர்கள் தெருக்களில் திருப்பலி நிகழ்த்தினர். அருட்தந்தை சிரில் ராபர்ட் அவர்கள் ஆண்டிமடத்தின் பங்குத்தந்தையாக இருந்தபோது அருளானந்தபுரத்தில் புதிய ஆலயக் கட்டுமான முயற்சிகள் எடுத்தார். மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதி உதவியைச் செய்தனர். மீதமுள்ள தொகையை அருட்தந்தை சிரில் ராபர்ட் அவர்கள் திரட்டி ஆலயத்தைக் கட்டி, அந்த ஆலயத்தை புனித அருளானந்தருக்கு அர்ப்பணித்தார். அப்போது அருளானந்தபுரம் ஆண்டிமடபங்குடன் இணைக்கப்பட்டது. 

ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, குடந்தை மறை மாவட்ட மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் 03-03-2003 அன்று புனிதப்படுத்தப்பட்டது.

புனித அருளானந்தர் ஆலயத்தின் ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, 3ஆம் தேதி தேர்பவனி, 4ஆம் தேதி திருவிழா என சிறப்புற நடைபெறும். திருப்பலியில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்று புனித அருளானந்தரின் வழியாக, இறைமகன் இயேசுவின் ஆசீரைப் பெற்றுச் செல்கின்றனர்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பங்குத்தந்தை அருட்பணி. J. மரிய ஜோமிக்ஸ் சாவியோ அவர்கள்.