733 புனித செபஸ்தியார் ஆலயம், இராயன்பட்டி

  

புனித செபஸ்தியார் ஆலயம்

இடம்: இராயன்பட்டி

மாவட்டம்: திருச்சி

மறைமாவட்டம்: திருச்சி

மறைவட்டம்: மணப்பாறை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித சவேரியார் ஆலயம், மலையடிப்பட்டி

பங்குத்தந்தை: அருட்பணி. ஜேம்ஸ்

குடும்பங்கள்: 300

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செப வழிபாடுகளும், மாதந்தோறும் திருப்பலியும் நடைபெறுகின்றன.

திருவிழா : பிப்ரவரி மாதம் 2-வது சனிக்கிழமை திருவிழா நடைபெறும். மே மாதம் கடைசி சனிக்கிழமை புனித செபஸ்தியார் நாடகமும், ஞாயிற்றுக்கிழமை அன்னதானமும் இனிதே நடைபெறுகிறது.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. Sr. வசந்தா அமலோற்பவம், CSA (Hydrabad)

 2. Sr. சுசீலா ராணி, CFMSS

வழித்தடம்: மணப்பாறை -மலையடிப்பட்டி -இராயன்பட்டி

Location map: https://maps.app.goo.gl/2bdKAG6qgwY1n4ZJ8

வரலாறு:

விண்ணும் மண்ணும் வியந்து போற்றும் வீரசெபஸ்தியாரை பாதுகாவலராகக் கொண்டு, இறைமகன் இயேசுவின் வழியில் இணைந்து நடக்கும் ஊர் இராயன்பட்டி ஆகும். இவ்வூரை நல்லியம்பட்டி என்றும் கூறுவர்.

ஆலய வரலாறும், வளர்ச்சியும்:

சுமார் கி.பி.1800 ஆம் ஆண்டு புனித செபஸ்தியார் சிலுவை திண்ணை உருவானது. அக்காலத்தில் வெளியூர் திருவிழாவிற்கு சென்று இவ்வழியாக வந்த கழனிவாசல்பட்டியைச் சேர்ந்த ஆசாரி இந்த சிலுவை திண்ணையில் நோயினால் வயிற்று வலி ஏற்பட அவதிப்பட்டு இந்த சிலுவை திண்ணையில் வேண்டி குணமடைந்தார். இப்போது இருக்கும் சுரூபம் ஆசாரி அவர்கள் செய்து கொடுத்து வழிபாட்டிற்கு வைக்கப்பட்டது.

சுமார் கி.பி.1868-ல் தற்போதுள்ள சப்பரக்கொட்டகையில் கூரைக்கோயில் உருவானது. கி.பி. 1923 ஆம் ஆண்டு சுண்ணாம்பு காரையால் ஆன புதிய ஆலயம் கட்டப்பட்டு, திருவிழாவிற்கு பெரிய தேர் உருவானது. கி.பி.1996-ல் ஆலய முன்பகுதி மேடை கட்டப்பட்டது. கி.பி. 2000 -ஆம் ஆண்டு ஆலயத்தின் சுண்ணாம்பு காரை நீக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. கி.பி 2002-ஆம் ஆண்டு மணிக்கூண்டு கட்டப்பட்டது.

புதுமைகள் :

புனித செபஸ்தியார் பரிந்துரையால் குழந்தை வரம் பெற்றோர், தீராத நோயில் இருந்து குணம் பெற்றோர், கடன் தொல்லையில் இருந்தும் விடுபட்டவர்கள் என இதுபோல் எண்ணிலடங்கா புதுமைகளும், நன்மைகளும் புனிதர் வழியாக இறைமக்களுக்கு கிடைக்கின்றன.

தகவல்கள்: மலையடிப்பட்டி மண்ணின் மைந்தர் அருட்பணி. ஜோசப் அற்புதராஜ், OFM Cap