498 புனித வனத்து சின்னப்பர் ஆலயம், கடம்பூர்


புனித வனத்து சின்னப்பர் ஆலயம்

இடம் : கடம்பூர், கடம்பூர் அஞ்சல், கெங்கவல்லி வட்டம், 636105

மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : ஆத்தூர்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், புங்கவாடி

பங்குத்தந்தை : அருட்பணி. சேவியர் கலைவாணன் VC

குடும்பங்கள் : 12
அன்பியம் : 1

ஞாயிறு : காலை 09.30 மணிக்கு திருப்பலி.

திருவிழா : ஜனவரி மாதம் 19ம் தேதி.

வழித்தடம் : புங்கவாடியிலிருந்து கெங்கவல்லி செல்லும் சாலையில் 4கி.மீ தொலைவில் கடம்பூர் உள்ளது.

வரலாறு

கடம்பூர் புனித வனத்து சின்னப்பர் ஆலயமானது, கெங்கவல்லி பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது.

அப்போது கெங்கவல்லி பங்கின் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. D. A. பிரான்சிஸ் அவர்களின் முயற்சியால் கடம்பூர் ஆலயம் 2003 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, புனித வனத்து சின்னப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்டு, கெங்கவல்லின் பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது.

பிறகு, கெங்கவல்லியிலிருந்து புங்கவாடி தனிப்பங்காக உயர்த்தப்படவே, கடம்பூர், புங்கவாடி பங்கின் கிளைப்பங்காக தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

புங்கவாடியின் தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி.சேவியர் கலைவாணன், VC அவர்களின் முயற்சியால் கடம்பூர் புனித வனத்து சின்னப்பர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு 08.12.2018 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. சேவியர் கலைவாணன் VC அவர்கள்.