தூத்துக்குடி மறைமாவட்டம்

தூத்துக்குடி மறைமாவட்டம் (இலத்தீன்: Tuticoren(sis)) என்பது தூத்துக்குடி திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

மக்கள் தொகை கத்தோலிக்கர் 348,000 (2004)

கதீட்ரல் திரு இதய கதீட்ரல், தூத்துக்குடி

வரலாறு

ஜூன் 12, 1923: திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிய மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் இலத்தீன் ரீதி கத்தோலிக்க ஆயர் மேதகு. திர்பூசியஸ் ரோச் அவர்கள் இந்த மறைமாவட்டத்தைச் சார்ந்தவர்.

சிறப்பு ஆலயங்கள்

சிறு பேராலயம்:

பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி, தூத்துக்குடி.

திருத்தலம் புனித அந்தோனியார் திருத்தலம் உவரி

தலைமை ஆயர்கள்

தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)

ஆயர் யுவான் அம்புரோஸ் (ஏப்ரல் 1, 2005 – ஜனவரி 17,2019)

ஆயர் பீட்டர் பெர்னான்டோ (டிசம்பர் 8, 1999 – மார்ச் 22, 2003)

ஆயர் சிலுவைமது தெரேசநாதன் அமலநாதர் (நவம்பர் 29, 1980 – டிசம்பர் 8, 1999)

ஆயர் அம்புரோஸ் மதலைமுத்து (ஆகஸ்ட் 30, 1971 – டிசம்பர் 6, 1979)

ஆயர் தாமஸ் பெர்னான்டோ (ஜூன் 26, 1953 – நவம்பர் 23, 1970)

ஆயர் பிரான்செஸ்கோ திர்பூசியஸ் ரோச், S.J. (ஜூன் 12, 1923 – ஜூன் 26, 1953)

நன்றி: விக்கிபீடியா