113 புனித அந்தோணியார் ஆலயம், மஞ்சாலுமூடு


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : மஞ்சாலுமூடு.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி. சுஜின்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய லூர்து அன்னை ஆலயம், லூர்துகிரி.

குடும்பங்கள் : 60
அன்பியங்கள் : 3

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு

திருவிழா : ஜனவரி மாதத்தில்.

மஞ்சாலுமூடு வரலாறு :

மஞ்சாலுமூடு தலத்திருச்சபையானது 1938 ஆம் ஆண்டு அந்திக்கடை (மாலைநேர கடை) கூடும் இடத்தில் 13 நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக அடையாள சிலுவையுடன் உருவானது. தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் பின்னர் நிலம் வாங்கப்பட்டு ஓலைக்குடில் ஆலயம் கட்டப்பட்டு செபங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

அருட்பணி. வென்சிலாஸ் மற்றும் அருட்பணி. அருளப்பன் ஆகியோரின் முயற்சியால் ஆலயம் ஓரளவு கட்டிவிடப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் அருட்பணி. பால்மார்க் உதவியுடன் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நவநாள், திருப்பலி நடைபெற்று வந்தன.

05.02.2006 முதல் ஞாயிறு திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

27.05.2005 அன்று பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் ஆலய பீடம் கட்டப்பட்டது.