87 புனித அந்தோணியார் ஆலயம், புல்லாணி


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : புல்லாணி.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

பங்குத்தந்தை : அருட்பணி ஷாஜி
இணை பங்குத்தந்தை : அருட்பணி லிதின்.

நிலை : பங்குதளம்

கிளைகள் :
1. புனித சவேரியார் ஆலயம், புல்லங்குழி.
2. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், திட்டவிளை.

குடும்பங்கள் : 200
அன்பியங்கள்: 8

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு.

திருவிழா : மே மாதத்தில் பத்து நாட்கள்.

வரலாறு :

இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த புல்லாணி பங்கானது புனித அந்தோணியாரை பாதுகாவலராகக் கொண்டு, பள்ளியாடி, முள்ளங்கனாவிளை, கள்ளித்தட்டு (காப்புகாடு) ஆகிய பங்குகளின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது.

புதிய ஆலயத்திற்கு அருட்பணி. டைனிசியஸ் காலத்தில் அடிக்கல் போடப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று அருட்பணி. S. M. மரியதாசன் பணிக்காலத்தில் 1972 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப் பட்டு, கள்ளித்தட்டு பங்கிலிருந்து பிரிந்து இலவுவிளை பங்கின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

தற்போதைய புதிய ஆலயம் கட்டப்பட்டு 23.05.2003 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

மார்த்தாண்டம் - விரிகோடு- கொல்லஞ்சி-தொலையாவட்டம் வழித்தடத்தில் புல்லாணி பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இவ் ஆலயம் உள்ளது.