கிறிஸ்து அரசர் ஆலயம்.
மாவட்டம் : காஞ்சிபுரம்
மறை மாவட்டம் : செங்கல்பட்டு.
நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை.
குடும்பங்கள் : சுமார் 450
அன்பியங்கள் : 22
ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணி, காலை 08.15 மணி மற்றும் மாலை 05.00 மணி.
பங்குத்தந்தை : அருட்பணி ஜான் பிரான்சிஸ்.
திருவிழா : நவம்பர் மாதம் 24 ம் தேதியை உள்ளடக்கிய ஐந்து நாட்கள்.
சிறு குறிப்பு :
2000 மாவது ஆண்டில் உருவான இப் பங்கானது 30-06- 2013 ல் தனிப் பங்காக உயர்ந்தது.
ஒவ்வொரு மாதமும் 24 ம் தேதியில் கிறிஸ்து அரசர் நாளாக சிறப்பாக கொண்டாடப் படுகின்றது. இந் நாளில் சிறப்புத் திருப்பலி, நற்கருணை ஆசீர், மற்றும் தேர் பவனியும் நடைபெறுகின்றது.
பம்மல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் உள்ள கிறிஸ்து அரசர் திருவுருவச்சிலை ஆனது மிகவும் பிரத்யேகமாக வடிவமைக்கபட்டுள்ளது. இது மிக அழகாகவும் கிறிஸ்துவை ஒரு அரசராகவும் வடிவமைத்துள்ளனர். இறுதித் தீர்ப்பு நாளில் கிறிஸ்து அரசராக வந்து நீதி வழங்குவார் என்ற நம்பிக்கையின் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி கிறிஸ்து அரசர் திருவுருவச்சிலை உலகத்தில் வேறு எங்கும் இல்லை என்பது சிறப்பம்சம்.