சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் (இலத்தீன்: Madraspolitan(us) et Meliaporen(sis)) என்பது சென்னை சாந்தோம் புனித தோமையார் பீடப் பேராலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.
மக்கள் தொகை கத்தோலிக்கர் - 343,103 (2004)
கதீட்ரல் - புனித தோமையார் கதீட்ரல் பசிலிக்கா, சாந்தோம்
இணை-கதீட்ரல் - வானதூதர்களின் புனித மரியன்னை இணை-கதீட்ரல், ஜார்ஜ் டவுன்
வரலாறு
ஜனவரி 9, 1606: திருத்தந்தை ஐந்தாம் பால், பதுரவாதோ மறைபரப்பு பணியின் பொறுப்பாளரான போர்ச்சுக்கல் அரசருடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் விளைவாக மயிலாப்பூர் மறைமாவட்டம் உருவானது.
1642: மயிலாப்பூரின் சாந்தோம் மறைமாவட்டத்தில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையின் அப்போஸ்தலிக்க மறைவட்டமாக உருவாக்கப்பட்டது.
1832: மெட்ராஸ் அப்போஸ்தலிக்க மறைவட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.
செப்டம்பர் 1, 1886: மாநகர மெட்ராஸ் உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.
அக்டோபர் 10, 1950: பதுரவாதோ முறை ரத்து செய்யப்பட்டது. மயிலாப்பூர் மறைமாவட்டம் வேறு (Propaganda Fide) ஆளுகையின்கீழ் சென்றது.
நவம்பர் 13, 1952: திருத்தந்தை 12ம் பயஸ் திருச்சபையின் முதல் நூற்றாண்டுகளில் இருந்து (Ex primaevae ecclesiae) என்ற ஆணையின்படி, சென்னை மற்றும் மயிலாப்பூர் மறைமாவட்டங்கள் இணைக்கப்பட்டு, சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் என்று பெயர் பெற்றது.
தலைமை ஆயர்கள்
சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் பேராயர்கள் (லத்தீன் ரீதி)
பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி, (நவம்பர் 21, 2012 - இன்றுவரை)
பேராயர் மலையப்பன் சின்னப்பா, ச.ச. (ஏப்ரல் 1, 2005 – நவம்பர் 21, 2012)
பேராயர் ஜேம்ஸ் மாசில்லாமணி அருள் தாஸ் (மே 11, 1994 – ஆகஸ்ட் 30, 2004)
பேராயர் கசிமீர் ஞானாதிக்கம், சே.ச. (ஜனவரி 26, 1987 – நவம்பர் 10, 1993)
பேராயர் அந்தோனி ராயப்பா அருளப்பா (பிப்ரவரி 1, 1966 – ஜனவரி 26, 1987)
பேராயர் லூயிஸ் மத்தியாஸ், ச.ச (நவம்பர் 13, 1952 – ஆகஸ்ட் 2, 1965)
மாநகர மெட்ராசின் பேராயர்கள் (லத்தீன் வழிபாட்டு முறை)
பேராயர் லூயிஸ் மத்தியாஸ், ச.ச. (மார்ச் 25, 1935 – நவம்பர் 13, 1952)
பேராயர் யுஜீன் மெடெர்லெட், ச.ச. (ஜூலை 3, 1928 – டிசம்பர் 12, 1934)
பேராயர் ஜியோவன்னி ஏலன், M.H.M. (பிப்ரவரி 13, 1911–1928)
பேராயர் ஜோசப் கோல்கன் (மே 19, 1882 – பிப்ரவரி 13, 1911)
மெட்ராசின் அப்போஸ்தலிக்க பிரதிநிதி (லத்தீன் ரீதி)
ஆயர் பேட்ரிக் ஜோசப் கார்யூ (1840–1842)
கீழுள்ள மறைமாவட்டங்கள்
செங்கல்பட்டு மறைமாவட்டம்
கோவை மறைமாவட்டம்
உதகை மறைமாவட்டம்
வேலூர் மறைமாவட்டம்
சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் இணையதளம்:
http://www.archdioceseofmadrasmylapore.in/
நன்றி: விக்கிபீடியா