புனித அடைக்கல அன்னை ஆலயம்
இடம்: ஆத்துக்குடி, ஆத்துக்குடி அஞ்சல், 609117
மாவட்டம்: மயிலாடுதுறை
மறைமாவட்டம்: தஞ்சாவூர்
மறைவட்டம்: மயிலாடுதுறை
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. மாதாகோயில், நத்தம்
2. புனித அந்தோனியார், அண்ணாநகர் -நத்தம்
3. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், பொன்னுக்குடி
4. புனித அந்தோனியார் ஆலயம், கஞ்சாநகரம்
5. புனித பெரியநாயகி மாதா ஆலயம், மேலையூர்
6. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், மேலையூர் கிழக்கு
7. புனித அந்தோனியார் ஆலயம், இராதாநல்லூர் பிரகாசம் தெரு
8. புனித லூர்து மாதா ஆலயம், பெருந்தோட்டம்
9. பூம்புகார்
10. வைத்தீஸ்வரன் கோவில்
11. கன்னியாகுடி
12. சேமங்கலம்
பங்குத்தந்தை: அருட்பணி. A. ஆரோக்கியசாமி
தொடர்புக்கு: 9159785208, 6374160575
குடும்பங்கள்: 97
அன்பியங்கள்: 4
ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணிக்கு
நாள்தோறும் திருப்பலி காலை 06:15 மணிக்கு
முதல் சனிக்கிழமை மாலை 06:00 மணிக்கு ஜெபமாலை தொடர்ந்து தேர்பவனி, திருப்பலி
திருவிழா: மே மாதம் முதல் வாரத்தில் பத்து நாட்கள்
ஜூன் மாதம் இறுதியில் நற்கருணை திருவிழா
வழித்தடம்: தஞ்சாவூர் -கும்பகோணம் -மயிலாடுதுறை -சீர்காழி வழித்தடத்தில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு முன்னர் ஆத்திக்குடி அமைந்துள்ளது.
Location map: https://g.co/kgs/VouP4v
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. S. பீட்டர், புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம் (late)
2. அருட்பணி. அந்துவான், தஞ்சாவூர் மறைமாவட்டம் (late)
3. அருட்பணி. ஜோசப் பால், புதுவை கடலூர் உயர் மறைமாவட்டம்
4. அருட்பணி. ஜான்பிரிட்டோ, தஞ்சாவூர் மறைமாவட்டம்
மண்ணின் அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி. ரோஸ்மேரி
2. அருட்சகோதரி. ராணி
3. அருட்சகோதரி. மெட்டில்டா
4. அருட்சகோதரி. ஜெரால்டு சாந்தி
வரலாறு:
புனித அடைக்கல அன்னையை பாதுகாவலியாகக் கொண்டுள்ள ஆத்துக்குடி பங்கானது மயிலாடுதுறை -சிதம்பரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டத்துடன் இருந்த இந்த ஆலயம், 1899 ஆம் ஆண்டு முதல் கும்பகோணம் மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. பின்னர் 1929 ஆம் ஆண்டு முதல் சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்துடன் இணைக்கப் பட்டது.
1931 ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை பங்குடன் ஆத்துக்குடி ஆலயம் இணைக்கப்பட்டது. 1944 ஆம் ஆண்டு ஆத்துக்குடி தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. 1952 ஆம் ஆண்டு முதல் புதிதாக உதயமான தஞ்சாவூர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
ஆத்துக்குடி ஆலயம் கட்டப்பட்ட ஆண்டு விபரம் தெளிவாக கிடைக்கவில்லை. ஆனாலும் சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு ஆலயம் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கியசாமி அவர்களின் பணிக்காலத்தில், பழைய சுண்ணாம்பு காரை ஆலயமானது அகற்றப்பட்டு, 10.03.2019 அன்று மேதகு ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அனைவரின் ஒத்துழைப்புடன் அழகுற புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, 13.01.2022 அன்று மேதகு ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
அற்புதங்கள்:
பெருந்தோட்டம் ஊரைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு, திருமணமாகி 12 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாதிருந்தனர். இவ்வாலயம் வந்து அடைக்கலம் மாதாவின் பாதம் அடைக்கலம் தேடி ஜெபிக்க குழந்தை பாக்கியம் பெற்று அகமகிழ்ந்தனர்.
வைத்தீஸ்வரன் கோவில் ஊரைச் சேர்ந்த தம்பதியருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாதிருந்தனர். இவ்வாலயம் வந்து மனமுருகி ஜெபிக்க குழந்தை வரம் பெற்றனர்.
மூன்று வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாதிருந்த தம்பதியர், மாதாவிடம் வேண்டி ஜெபிக்க குழந்தைச் செல்வம் பெற்றனர்.
இதுபோல ஏராளமான தம்பதியர் குழந்தைச் செல்வம் பெற்று மாதாவிடம் நன்றி செலுத்தி செல்கின்றனர்.
பல்வேறு வேண்டுதல்கள் விண்ணப்பங்கள் இவற்றிற்காக மாதத்தின் முதல் சனிக்கிழமை திருப்பலியில் சிறப்பு ஜெபம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்று ஆசீர் பெற்றுச் செல்கின்றனர்.
கண்ணீர் கவலை வேதனைகள் என துன்பப்படும் மக்களின் அடைக்கலமாக விளங்கும் ஆத்துக்குடி புனித அடைக்கல மாதாவிடம் வாருங்கள்... ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்லுங்கள்...
பங்கில் உள்ள சபைகள் இயக்கங்கள்:
1. புனித ஜான் டி பிரிட்டோ இளையோர் இயக்கம்
2. புனித அடைக்கல அன்னை இளம் பெண்கள் இயக்கம்
3. மரியாயின் சேனை
4. மறைக்கல்வி
5. பாடகற்குழு
6. பங்கு மன்றம்
பங்கில் உள்ள கெபிகள்:
1. குழந்தை இயேசு கெபி
2. புனித ஆரோக்கிய மாதா கெபி
பங்கின் பள்ளிக்கூடம்:
புனித அந்தோனியார் நடுநிலைப் பள்ளி, நத்தம்
பங்கில் உள்ள அருட்சகோதரிகள் இல்லம்:
புனித அடைக்கல அன்னை அருட்சகோதரிகள் இல்லம் (தஞ்சாவூர் மறைமாநிலம்.) இந்த சபையின் நான்கு அருட்சகோதரிகள் கல்விப்பணி, சமூகப்பணி மற்றும் ஆலயப் பணிகளில் பங்குத்தந்தைக்கு உதவியாக சிறப்புற செயல்பட்டு வருகின்றனர்.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
(அருட்பணியாளர்கள் பெடல் அடிகளார், சார்மார்ட்டின், அருள், J. H. டிசூசா, B. I. நோரோனா, S. B. கூட்டோ, A. S. இராயன் ஆகியோர் 1953 ஆம் ஆண்டு வரை ஆத்துக்குடியில் பணிபுரிந்தனர்.)
1. அருட்பணி. மெனெசஸ் (1954-1962)
2. அருட்பணி. ஜான் எவாஞ்சலிஸ்ட் (1962-1963)
3. அருட்பணி. பால் பிலவேந்திரம் (1963-1968)
4. அருட்பணி. B. S. ரோட்ரிக்ஸ் (1968-1971)
5. அருட்பணி. A. இருதயசாமி (1971-1974)
6. அருட்பணி. விக்டர் மரியசூசை (1974-1979)
7. அருட்பணி. P. A. இருதயசாமி (1979-1983)
8. அருட்பணி. அகஸ்டின் அம்புரோஸ் (1983-1984)
9. அருட்பணி. U. சவரிமுத்து (1984-1985)
10. அருட்பணி. Y. லியோ மைக்கில் (1985-1987)
11. அருட்பணி. K கித்தேரிமுத்து (1987-1988)
12. அருட்பணி. F. ஆரோக்கியசாமி (1988-1992)
13. அருட்பணி. D. ஆரோக்கியதாஸ் (1992-1999)
14. அருட்பணி. A. M. A. பிரபாகர் (1999-2003)
15. அருட்பணி. டேவிட் செல்வகுமார் (2003-2006)
16. அருட்பணி. M. I. ஜான் பீட்டர் (2006-2010)
17. அருட்பணி. K. M. ஆரோக்கியசாமி (2010-2016)
18. அருட்பணி. V. S. செபஸ்தியான் (2016-2017)
19. அருட்பணி. S. கபிரியேல் ஸ்டீபன் (2017 ஆறு மாதங்கள்)
20. அருட்பணி. P. ஜார்ஜ் பெர்னாண்டஸ் (2018 ஆறு மாதங்கள்)
21. அருட்பணி. A. ஆரோக்கியசாமி (2018....)
தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. A. ஆரோக்கியசாமி