906 அற்புத குழந்தை இயேசு ஆலயம், செல்லியம்பட்டி

    

அற்புத குழந்தை இயேசு ஆலயம்

இடம் : செல்லியம்பட்டி, 636 809

மாவட்டம் : தருமபுரி

மறைமாவட்டம் : தருமபுரி

மறைவட்டம் : தருமபுரி

நிலை : பங்குதளம் 

பங்குதந்தை: அருள்பணி. A. மதலைமுத்து

குடும்பங்கள் : 400 கிளைப்பங்குகள் சேர்த்து

அன்பியங்கள்: 20 கிளைப்பங்குகள் சேர்த்து

திருப்பலி நேரங்கள் : 

ஞாயிறு காலை 09:00 மணி

திங்கள், புதன், வெள்ளி காலை 06:30 மணி

செவ்வாய், சனி மாலை 06:30 மணி

வியாழன் மாலை 05:30 மணி

கிளைப் பங்குகள் :

1. புனித சவேரியார் ஆலயம், செல்லியம்பட்டி (வெள்ளி மாலை 06:30 மணி)

2. புனித மரிய மதலேனாள் ஆலயம், கொல்லப்பட்டி (புதன் மாலை 06:30 மணி) 

3. புனித வளனார் ஆலயம், வளன்நகர் (ஞாயிறு காலை 07:30 மற்றும் வியாழன் மாலை 06:30 மணி)

4. புனித அந்தோனியார் ஆலயம், அந்தோனியார் நகர் (திங்கள் மாலை 06:30 மணி)

பங்குத் திருவிழா : ஜனவரி 14

மண்ணின் இறையழைத்தல்கள்:

Rev.Fathers:

1. Fr. புஷ்பநாதன்

2. Fr. ஹென்றி ஜார்ஜ் 

3. Fr. சவரியப்பன்

4. Fr. மரிய பிரான்சிஸ் 

5. Fr. கிறிஸ்துராஜ் 

6. Fr. ஆண்டனி மரிய ஜோசப் 

7. Fr. K. மரிய ஜோசப் 

8. Fr. ரொசாரியோ 

9. Fr. லாரன்ஸ் 

10. Fr. குழந்தைசாமி 

11. Fr. பாப்புராஜ் 

12. Fr. சூசைராஜ் 

13. Fr. A. இருதயராஜ் 

14. Fr. அருள்ராஜ் 

15. Fr. M. இருதயராஜ் 

16. Fr. ஜோசப் சகாயநாதன்

17. Fr. லூர்துசாமி 

18. Fr. அந்தோணி விமலன் 

19. Fr. கபிரியேல்

20. Fr. மரிய அந்தோணி 

21. Fr. லாசர் 

22. Fr. வினோத் லூயிஸ் 

23. Fr. அருள் வளன் 

24. Fr. புஷ்பராஜ் 

25. Fr. பவுல் மாட்டின்

Brothers:

1. Bro. பிலிப்ராஜ் 

2. Bro. I. மதலைமுத்து 

3. Bro. விக்டர் தாஸ் 

4. Bro. மதலைமுத்து

5. Bro. அருள்சாமி 

6. Bro. D. இருதயராஜ் 

7. Bro. பால் ஆன்ட்ரூஸ்

8. Bro. ஆரோக்கியதாஸ்

9. Bro. சைமன்

Rev.Sisters:

1. Sr. மரிய அமலி

2. Sr. பபியோலா

3. Sr. ஜெயராக்கினி

4. Sr. அந்தோணியம்மாள் 

5. Sr. ஜீவா 

6. Sr. தோமை மேரி

7. Sr. மரியரோஸ் 

8. Sr. ஹெலன்

9. Sr. மேரிநிர்மலா 

10. Sr. பவுலின்மேரி 

11. Sr. லிட்வின் 

12. Sr. லில்லி 

13. Sr. ரீத்தா 

14. Sr. மோக்ஷா

15. Sr. எடல்குயில்ராணி 

16. Sr. பாஸ்கா 

17. Sr. எஸ்தர் பிரேமா 

18. Sr. கேத்தரின் 

19. Sr. எஸ்தர் 

20. Sr. அருள்ஷீபாராணி 

21. Sr. விண்மலர் 

22. Sr. அனிதா 

23. Sr. குழந்தை தெரசா 

24. Sr. P. அனிதா 

25. Sr. லில்லி 

26. Sr. பாஸ்கா 

27. Sr. சகாயம் 

28. Sr. ஆனி பிரேமா ராணி

360°= Street View:

https://maps.app.goo.gl/Nit73Ka16JnGRKWQ8

Map location:

https://maps.app.goo.gl/dWBngqadQzGE5Y2Y6

வழித்தடம்: தருமபுரியில் இருந்து 10கி.மீ தொலைவில் பாலக்கோடு செல்லும் சாலையில் செல்லியம்பட்டி அமைந்துள்ளது.

வரலாறு :

செல்லியம்பட்டி பங்கு என்பது செல்லியம்பட்டி மற்றும் கொல்லப்பட்டி என்ற இரண்டு பெரிய கத்தோலிக்க கிராமங்களை உள்ளடக்கியதாகும். 1840 ஆம் ஆண்டு கடகத்தூர் ஆலயம் அமைக்கும் போது; செல்லியம்பட்டி, கொல்லப்பட்டி போன்ற கிராமங்களில் பாரிஸ் மறைப்பரப்பு பணியாளர்கள் (MEP Frs) பணியாற்றியது பற்றி குறிப்பிட்டுள்ளனர். 

பெண்ணாகரத்தில் கத்தோலிக்கர்கள் வெளியேற்றப்பட்ட போது, பெரும்பாலானோர் கொல்லப்பட்டியிலும், செல்லியம்பட்டியிலும் தங்கியதாக குறிப்பு உள்ளது. அக்காலத்தில் இப்பகுதி மக்கள் கடகத்தூரில் அமைந்திருந்த புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு சென்று திருப்பலியில் பங்கேற்று வந்தனர். 

1930 ஆம் ஆண்டு மேதகு ஆயர் ஹென்றி புரூனியர் தலைமையில் சேலம் மறைமாவட்டம் உதயமானது. ஆகவே 1930 முதல் கடகத்தூர் பங்காக உயர்த்தப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருள்தந்தை லூயிஸ் அகஸ்து செவாலியர், MEP அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார். 1932 ஆம் ஆண்டு கடகத்தூர் ஆலயம் கட்டப்பட்டு, சம்மனசுகளின் ராக்கினி அன்னை ஆலயம் என பெயர் மாற்றம் பெற்றது. 

கடகத்தூர் பங்காக உருவானபின் கல்வி, மருத்துவம், ஆன்மீகம், சமூகப்பணி என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இப்பகுதியில் உள்ள மக்கள் விசுவாசத்தில் வேரூன்றி, இறை ஆசீரால் நிறைந்த ஆலயங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டியெழுப்ப தங்கள் நிலகங்ளைத் தந்து; அதிலும் சிறப்பாக திருச்சபைக்காக தம் பிள்ளைகளை குருவாக, துறவிகளாக அனுப்பி வைத்து கிறித்துவம் இம்மண்ணில் வளர பெரிதும் உதவினர். 

இந்நிலையில் 1932 ஆம் ஆண்டு செல்லியம்பட்டியில் ஒரு துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1938 ஆம் ஆண்டு துவக்கப்பள்ளி கட்டிடமும் அமைக்கப்பட்டது. இது தற்போது ஆர்.சி துவக்கப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இதே (1938) ஆண்டு  செல்லியம்பட்டியில் புனித சவேரியார் திருவிழாவை மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர். சில வருடங்களுக்குப் பின்பு செல்லியம்பட்டியில் புனித சவேரியார் சிற்றாலயம் கட்டப்பட்டு, திங்கட்கிழமைகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு வந்தன.

பின்னர் 1985 ஆம் ஆண்டு தூய இருதய மேல்நிலைப்பள்ளி செல்லியம்பட்டியில் துவங்கப்பட்டது. அப்போதைய சேலம் ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்கள் செல்லியம்பட்டி பங்கை பார்வையிட்ட போது, சேலம் குழந்தை இயேசு பேராலயம் துவங்கி, பெங்களூர் குழந்தை இயேசு திருத்தலம் வரை உள்ள இடைப்பட்ட தூரத்தில் வேறெங்கிலும் அற்புதக் குழந்தையை ஆலயம் எதுவும் இல்லை. ஆகவே செல்லியம்பட்டியில் உள்ள இந்த இடம் அதற்கு ஏற்ற அமைப்பாக உள்ளது என்று அறிவுறுத்தி, இங்கே ஆலயம் கட்டினால் நலமாய் இருக்கும் என்று விருப்பம் தெரிவித்தார். 

1997 ஆம் ஆண்டு தருமபுரி மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது. மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்கள் முதல் ஆயராக பொறுப்பேற்றார். அப்பொழுது கடகத்தூர் பங்கானது, தருமபுரி மறைமாவட்டத்தின் கீழ் வந்தது. பழம்பெரும் சிறப்புகள் வாழ்ந்த கடகத்தூர் பங்கு செல்லியம்பட்டி, கொல்லப்பட்டி, வளன்நகர், அந்தோனியார் நகர், சவுளூர், கொளகத்தூர் ஊர்களையும், மக்களையும் உள்ளடக்கி இருந்தது.

1998 இல் செல்லியம்பட்டி தூய இருதய உயர்நிலைப்பள்ளி, மதுரை புனித அமலோற்ப மாதா கன்னியர்கள் கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்டது. 

1999 ஆம் ஆண்டு 4 ஏக்கர் நிலம் கொல்லப்பட்டி பேருந்து நிலையத்திற்கு அருகே தருமபுரி மறைமாவட்டத்தின் உதவியோடு வாங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அப்போதைய கடகத்தூர் பங்குத்தந்தை அருள்பணி. சேவியர் அடிகளார் தலைமையில் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அதே காலகட்டத்தில் ஆலயத்தின் முன்புறம் சாலையோரத்தில், திரு. கிறிஸ்துராஜ் ஆசிரியர் குடும்பத்தினர் வழங்கிய நிதியியல் அற்புத குழந்தை இயேசு கெபி அமைக்கப்பட்டது. 

2004 மே மாதத்தில், தருமபுரி மறைமாவட்ட ஆயர் அழைப்பின் பேரில் புனித அன்னை தெரசா கன்னியர்கள் இல்லம் செல்லியம்பட்டியில் துவங்கப்பட்டது. ஆகஸ்ட் 2004 குளூனி கன்னியர்கள் தங்களது சூசையப்பர் இல்லத்தை செல்லியம்பட்டியில் துவங்கி, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டு சேவையை ஆரம்பித்தனர். 

அருள்பனி. சேவியர் அடிகளார் பணிமாற்றம் பெற்றுச் சென்றபின், 2006ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்தந்தை சூசைராஜ் அடிகளார், ஏற்கனவே கட்டப்பட்டு வந்த ஆலயத்தை, சிலுவை கோயிலாக கட்டலாம் எனத் தீர்மானித்து, ஆலயப் பணிகளை தொடர்ந்து நடத்தி வந்தார். ஆனால் சில எதிர்பாராத காரணங்களால் கட்டுமானப் பணிகளைத் தொடர இயலாமற்போனது. 

மக்கள் இறைவழிபாடுகளில் பங்கேற்கவும், மேலும் அருள்பாணியாளர்கள் கிளைப்பங்கில் மறை நிகழ்வுகள் மேற்கொள்ளவும் தொலைதூரம் செல்ல வேண்டியதாக இருந்தது. எனவே அருள்பணி. M. ஜார்ஜ் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற பின் இந்த சூழநிலைகளை கருத்தில் கொண்டு, செல்லியம்பட்டியை மையமாகக் கொண்டு புதிய பங்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் நேரம், காலம், பயணச்செலவு விரயமாவது குறையும். மட்டுமல்லாது பங்கு வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்பதை மக்களுக்கும் புரிய வைத்தார்.

2012 ஆம் ஆண்டு தருமபுரி மறைமாவட்டதின் இரண்டாவது ஆயராக மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்கள் பொறுப்பேற்றார். அவர்களின் ஆசீருடன்  2016 மே மாதத்தில் அருட்பணி. M. ஜார்ஜ் அவர்களை பொறுப்பு பணியாளராய் நியமித்து; செல்லியம்பட்டி, கொல்லப்பட்டி, வளன்நகர், அந்தோணியார் நகர் ஆகியவற்றை கிளை பங்குகளாகக் கொண்ட செல்லியம்பட்டி பங்கு உதயமானது. அதே ஆண்டு பங்குத்தந்தை இல்லமும் கட்டி முடிக்கப்பட்டு, ஆர்.சி துவக்கப்பள்ளி மேல் தளத்தில் நற்கருணை ஸ்தாபகம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பங்குப் பேரவை அமைக்கப்பட்டது. ஆலய பணிகள் முழுவதும் பங்குத்தந்தையை சாராமல், பங்குத்தந்தையின் தலைமையில் கட்டிடக் குழு, நிதிக் குழு ஆகியவற்றை அமைத்து, மக்களோடு இணைந்து பணிகளை மேற்கொள்ளலாம் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. 

2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் அமல அன்னையின் சலேசியன் மறைபரப்பு சபை கன்னியர்கள் (SMMI), உடல் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு சேவை செய்யும் நோக்கில், தங்களது இல்லத்தை செல்லியம்பட்டியில் ஆரம்பித்தனர்கள்.

பழைய ஆலயம் கட்டப்பட்ட இடத்தில் மண் உறுதித்தன்மை இல்லாததால், பழைய ஆலயம் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இடிக்கப்பட்டது. பின்னர் மேதகு ஆயர் டாக்டர் லாரன்ஸ் பயஸ் அவர்களால்  2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மீண்டும் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் ஐந்து கட்டமாக ஆலய கட்டிடப் பணிகள் பிரிக்கப்பட்டு மக்களின் 5வருட உழைப்பு, ஜெபங்கள், நன்கொடைகள் மூலமாக அற்புத குழந்தை இயேசு ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 14.01.2022 அன்று, மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. தற்போது ஆலய கோபுரப் பணிகள் நடைபெற்று வருகிறது.

கன்னியர்கள் சபை :

1. புனித அவலோற்பவ மாதா சபை, மதுரை

2. புனித அன்னை தெரசா கன்னியர்கள் சபை

3. குளூனி கன்னியர்கள் சபை

4. அமல அன்னை சலேசிய மறைபரப்பு சபை (SMMI)

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. பங்குப் பேரவை

2. வின்சென்ட் தே பவுல் சபை

3. பாடகர் குழு

4. பீடச்சிறுவர்கள் குழு

5. திருவழிபாட்டு குழு

6. அமலோற்பவ மாதா பிரசீடியம்

7. மறைக்கல்வி 

8. ஆசிரியர்கள் குழு

9. அன்பிய ஒருங்கிணைப்பு குழு

10. நற்செய்தி பணிக்குழு

அன்பியங்கள் பெயர்கள்: 

புனித வேளாங்கண்ணி மாதா, செல்லி..

புனித அடைக்கல மாதா, செல்லி..

புனித சூசையப்பர், செல்லி..

புனித பாத்திமா பாதா, செல்லி..

புனித சவேரியார், செல்லி..

புனித குழந்தை தெரசா, செல்லி..

புனித ஆரோக்கிய மாதா, செல்லி..

புனித அருளானந்தர், செல்லி..

புனித தோமையார், செல்லி..

தூய இருதய ஆண்டவர், இருதயபுரம்

தூய ஆவியானவர், கொல்ல..

புனித அன்னை தெரசா, கொல்ல..

புனித அந்தோனியார், கொல்ல..

புனித சூசையப்பர், கொல்ல..

இறை இரக்க ஆண்டவர், கொல்ல..

புனித தோம்னிக் சாவியோ, கொல்ல..

புனித ஜெபமாலை மாதா, கொல்ல..

அற்புத குழந்தையை இயேசு, வளன்நகர்

புனித தோமையார், வளன்நகர்

புனித அந்தோனியார், அந்தோனியார் நகர்

பங்கின் பள்ளிக்கூடங்கள்:

1. ஆர். சி. துவக்கப்பள்ளி

2. தூய இருதய மேல்நிலைப்பள்ளி

3. ஆரோக்கிய அன்னை CBSE பள்ளி 

பங்கின் கெபிகள் :

1. வேளாங்கண்ணி மாதா கெபி, செல்லி..

2. புனித அடைக்கல மாதா கெபி, செல்லி..

3. புனித ஆரோக்கிய மாதா கெபி, செல்லி..

4. புனித அந்தோனியார் கெபி, செல்லி..

5. புனித லூர்து மாதா கெபி, செல்லி..

6. புனித அந்தோனியார் கெபி, கொல்லப்பட்டி

7. புனித அந்தோனியார் கெபி, வளன்நகர்

பங்கில் பணியாற்றிய பங்கு தந்தையர்கள்:

1. Fr. M. ஜார்ஜ் (2016-2021)

2. Fr. A. மதலைமுத்து (2021 முதல்..)

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. A. மதலைமுத்து அவர்கள்.

தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: Mr. Yesudass Joseph Krishnagiri