939 தூய கார்மேல் அன்னை ஆலயம், தென்கரைக்கோட்டை

       

தூய கார்மேல் அன்னை ஆலயம்

இடம் : பாத்திமா நகர், தென்கரைக்கோட்டை, 636904

மாவட்டம் : தர்மபுரி

மறைமாவட்டம் : தர்மபுரி   

மறைவட்டம் : அரூர் 

நிலை : பங்குத்தளம்

கிளை பங்குகள்:

1. தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், கொக்கராப்பட்டி 

2. மெனசி

பங்குத்தந்தை : அருள்பணி. A. வினோத் லூயிஸ்

குடும்பங்கள் : 150+ (25 கொக்கராப்பட்டி) + (8 மெனசி)

அன்பியங்கள் : 5+ 1 ( கிளை பங்கு)

(மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், பவுல்) (ஆரோக்கிய அன்னை -கிளை பங்கு)

திருப்பலி நேரங்கள் : 

ஞாயிறு காலை 07:30 மணி

திங்கள், புதன், வியாழன், வெள்ளி - காலை 06:30 மணி

செவ்வாய், சனி - மாலை 06:30 மணி

கிளைபங்கில், திங்கள் மாலை 06:30 மணி 

பங்குத் திருவிழா: ஜூலை 16-ஆம் தேதி 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருட்பணி. U. புஷ்பராஜ்

2. அருட்பணி. லூயிஸ் பிரகாஷ், SJ

3. அருட்சகோதரி. S. நோயல் ராணி, FSAG

4. அருட்சகோதரி. ஜோஸ்பின் ஞானமணி கனகா, FSAG

5. அருட்சகோதரி. புனிதா, OCD

6. அருட்சகோதரி. ரோஸி, FSAG

7. அருட்சகோதரி. M. ஸ்டெல்லா, FSAG

8. அருட்சகோதரி. ஜெயராணி, NJVSI

9. அருட்சகோதரி. ஜூலியட் மேரி அகஸ்டின், FHIM

10. அருட்சகோதரி. ரோஸி, SRA

11. Decan. சூசைராஜ்

12. Bro. டோமினிக் சாவியோ (seminarian)

13. Bro. அந்தோணி (seminarian) OFM

14. Bro. பாஸ்கல் ஜெய பிரகாஷ் (seminarian) MONFORT

வழித்தடம் : தென்கரைகோட்டை -பொம்மிடி சாலையில் அமைந்திருக்கும் பாத்திமா நகரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Map : https://maps.app.goo.gl/4jJ3qb7RvMZ6pBJWA

வரலாறு :

ஜலகண்டேஸ்வர நதிக்கு வடகரையில் உள்ள ஊர் வடகரை என்றும், தெற்கில் இருக்கும் ஊர் தென்கரை என்றும் அழைக்கப்பட்டது. தென்கரையில் ஓமலூரை ஆண்ட கெட்டி முதலியார்கள் என்ற சிற்றரசர்களின் வழிமரபினர்களில் ஒருவரான, சென்னப்ப நாயக்கர் என்பவர் கோட்டை ஒன்றை எழுப்பினார். இதுவே தென்கரைக்கோட்டை என்ற பெயருக்கு காரணமானது. தென்கரைக்கோட்டையை ஒட்டியுள்ள பாத்திமா நகர் கிறிஸ்தவர்களின் குடியிருப்பாகும்.

தென்கரைக்கோட்டையில் கிறிஸ்தவம் உருவான காலம் எது என்று முடிவாகக் கூற சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால், அருள்தந்தை M.S. ஜோசப் அவர்கள் தனது நூலில் ஊர்களின் பட்டியலையும், அவ்வூர்களில் கிறிஸ்தவம் தோன்றிய ஆண்டினையும் குறிப்பிடும்போது, தென்கரைக்கோட்டை 1840 என்று வினாக்குறியுடன் குறிப்பிட்டுள்ளார். கோவிலூரில் உதவி குருவாக பணியாற்றிய அருள்தந்தை மரியான் பிரசியாக், MEP 1843இல் தாம் பயணம் செய்த ஊர்களில் தென்கரைக்கோட்டையும் ஒன்று எனக் குறிப்பிடுகிறார். கோவிலூரில் பணியாற்றிய அருள்திரு. ஸீவென்க், MEP (1921-1930) தென்கரைக்கோட்டையில் குருக்கள் தங்குவதற்கு இல்லம் ஒன்றை கட்டினார். 

1930இல் B.பள்ளிப்பட்டி பங்காக உருவானபோது, தென்கரைக் கோட்டை அதன் கிளைப்பங்கானது. B-பள்ளிப்பட்டியில் பணியாற்றிய அருள்தந்தை சார்லஸ் டெவின், MEP தென்கரைக்கோட்டையில் ஆலயம் ஒன்றை எழுப்பினார்.

1949ஆம் ஆண்டு தூய ஆவியார் திருநாள் அன்று தென்கரைக்கோட்டை புதிய பங்காக பிறந்தது. முதல் பங்கு குருவாக அருள்தந்தை ரெவெல், MEP பொறுப்பேற்றார். 1952ஆம் ஆண்டு தென்கரைக்கோட்டையில் புனித சூசையப்பர் துவக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. 1972-1974 ஆண்டுகளில் பங்குத்தந்தையாக இருந்த அருள்தந்தை ஜெகராஜ் தற்போதைய பங்குத்தந்தை இல்லத்தை கட்டியெழுப்பினார்.

அருட்பணி. M. அருள்சாமி (1990-1995) அவர்களின் சீரிய முயற்சியால் இன்றைய பங்கு ஆலயம் கட்டி எழுப்பப்பட்டு, 21-1-1992 அன்று அன்றைய சேலம் ஆயரால் புனிதப்படுத்தப்பட்டது. அருள்தந்தை M. ஜார்ஜ் அடிகளாரின் (2006-2011) முயற்சியால் மணி கோபுரம் கட்டப்பட்டு, 14-5-2010 அன்று திறந்து வைக்கப்பட்டது.

புனித அந்தோனியார் கெபி பங்குத்தந்தை அருட்பணி. எ. மதலை முத்து அவர்களின் வழிகாட்டலில் கட்டப்பட்டு, மேதகு ஆயர் ஜோசப் அந்தோணி, SDB

அவர்களால் 18-07-2003 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. மேலும் இவரது பணிக்காலகட்டத்தில் புனித லூர்து அன்னை கெபி மற்றும் சிலுவை பாதை தலங்கள் கட்டி எழுப்பப்பட்டது.

பங்குத்தந்தை அருட்பணி. C. மரியப்பன் மற்றும் யோவான் அன்பியம் இணைந்து புனித பாத்திமா அன்னை கெபியை கட்டி முடித்து, மேதகு ஆயர். லாரன்ஸ் பயஸ் DD அவர்களால் 8-12-2013 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

உயிர்த்த ஆண்டவர் கெபி பங்குத்தந்தை அருட்பணி. M. ஜார்ஜ் அவர்களின் வழிகாட்டலில் கட்டப்பட்டு மேதகு ஆயர் ஜோசப் அந்தோணி, SDB அவர்களால் 14-05-2010 அன்று மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.

2004ஆம் ஆண்டு புனித சூசையப்பர் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 

1965ஆம் ஆண்டு முதல் கொன்சாகா கன்னியர்கள் தென்கரைக்கோட்டையில் பணியாற்றி வருகின்றனர்.

தர்மபுரி மறை மாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களின் 40 ஆண்டு குருத்துவ பணி நினைவாக, 11.3.2023 அன்று லாரன்ஸ் பயஸ் கலையரங்கம் பங்குதந்தை அருள்பணி. வினோத் லூயிஸ் அவர்களால் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் புதிய கார்மேல் அன்னை குருகள் இல்லமானது 19.9.2023 அன்று கட்டி முடிக்கப்பட்டு தர்மபுரி மறைமாவட்ட ஆயர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

1949 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தென்கரைக்கோட்டை பங்கானது, வருகிற 2024 ஆம் ஆண்டு, 75 ஆண்டு பவளவிழாவை கொண்டாட பங்குத்தந்தை அருட்பணி. வினோத் லூயிஸ் அவர்களின் வழிநடத்துதல்ளோடு ஆயத்தமாகி வருகிறது.

பங்கில் உள்ள கன்னியர்கள் சபை : பாண்டிச்சேரி கொன்சாகா கன்னியர்கள் சபை

பங்கில் உள்ள சபைகள் / இயக்கங்கள் :

புனித வின்சென்ட் தே பால் சபை

மரியாயின் சேனை (பெரியவர்கள்)

மரியாயின் சேனை (சிறுமியர்)

கார்மேல் அன்னை இளையோர் குழு

இயேசுவின் கண்மணிகள் பீட சிறுவர்கள்

கோல்பின் சங்கம்

IVDP

பங்கில் உள்ள பள்ளிக்கூடங்கள்: 

St. Joseph High School

St. Joseph Primary School 

கெபிகள் : 

தூய லூர்து மாதா கெபி

புனித அந்தோனியார் கெபி

தூய பாத்திமா அன்னை கெபி

தூய உயிர்த்த ஆண்டவர் கெபி.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1949-1952 - அருட்பணி. ரெவேல், MEP

1952-1955 - அருட்பணி. T.C. ஜோசப் (பள்ளிப்பட்டி பங்குத்தந்தை பொறுப்பு)

1955-1960 - அருட்பணி. ரெவேல், MEP

1960-1968 - அருட்பணி. P.A. சக்கரையாஸ்

1968-1970 - அருட்பணி. C.S. அந்தோணிசாமி

1970-1972 - அருட்பணி. R. சேவியர்

1972-1974 - அருட்பணி. M. ஜெகராஜ்

1974-1979 - அருட்பணி. P.T. ஜோசப்

1977 (ஜூன் - நவம்பர்) - அருட்பணி. C. மைக்கேல் (பொறுப்பு)

1979-1983 - அருட்பணி. M. ஆரோக்கியம்

1983-1984 - அருட்பணி. K.S. பயஸ்

1984-1987 - அருட்பணி. குருவில்லா தாமஸ்

1987-1990 - அருட்பணி. A. மத்தியாஸ்

1990-1995 - அருட்பணி. M. அருள்சாமி

1995-1999 - அருட்பணி. S. சவரியப்பன்

1999-2001 - அருட்பணி. A. ரொசாரியோ

2001-2006 - அருட்பணி. A. மதலைமுத்து

2006-2011 - அருட்பணி. M. ஜார்ஜ்

2011-2012 - அருட்பணி. S. ஆபிரகாம்

2012-2015 - அருட்பணி. C. மரியப்பன்

2015 - 2016 - அருட்பணி. D. தேவசகாய சுந்தரம்

2016- 2021 - அருட்பணி. S. கிறிஸ்டோபர்

2021-முதல் - அருட்பணி. A. வினோத் லூயிஸ் 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. A. வினோத் லூயிஸ், MA, MSW.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பில் உதவி: திரு. ஏசுதாஸ் கிருஷ்ணகிரி