265 புனித காணிக்கை அன்னை ஆலயம், மானாம்பதி கண்டிகை


தூய காணிக்கை மாதா ஆலயம்

இடம் : மானாம்பதி கண்டிகை

மாவட்டம் : காஞ்சிபுரம்
தாலுகா : உத்திரமேரூர்
மறை மாவட்டம் : செங்கல்பட்டு

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை

பங்குத்தந்தை : அருட்தந்தை P. L ஜான்சன் விஜய்

குடும்பங்கள் : 490
அன்பியங்கள் : 10

ஞாயிறு திருப்பலி : (காலை 05.00 மணிக்கு செபமாலை) காலை 05.30 மணிக்கு மற்றும் காலை 07.00 மணிக்கு.

தினமும் : காலை 05.00 மணிக்கு செபமாலை, காலை 05.30 மணிக்கு திருப்பலி, மாலை 06.00 மணிக்கு செபமாலை.

திருவிழா : ஜனவரி 24 -ஆம் தேதி ஆரம்பித்து பெப்ரவரி 02 -ஆம் தேதி நிறைவடைகின்ற வகையில் பத்து நாட்கள்.

மானாம்பதி கண்டிகை ஆலய வரலாறு :

இவ்வையகம் இறைவன் உண்டாக்கிய மாபெரும் கொடை. இதில் உள்ள ஒவ்வொரு இடமும் ஒரு பெயரைத் தாங்கி, வளமான வரலாற்றுடன் வளர்கின்றது. இந்த வகையில் தன்னகத்தே சிறந்த வரலாற்றை கொண்டு விளங்குகின்றது மானாம்பதி கண்டிகை தலத்திருச்சபை.

மானாம்பதி என்ற பெயருடன் இன்னுமொரு ஊர் அருகே இருப்பதால், அதிலிருந்து வேறுபடுத்த கண்டிகை என்ற பெயர் சேர்க்கப்பட்டு (கண்டிகை என்பதற்கு அருகில் என்பது பொருள்) மானாம்பதி கண்டிகை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

18 -ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சில சேசுசபை மிஷனரிகள் ஆந்திராவில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிறங்கிபுறம் மற்றும் முட்ளூரிலிருந்து தொழில் காரணமாக மெட்ராஸ் பிரசிடென்சிக்கு சிறு சிறு குழுக்களாக குடிபெயர்ந்து வந்து தங்கினர். இவ்வாறு உருவாக்கப்பட்ட ஊர்கள் தான் தச்சூர், கே.கே புதூர், கருவேப்பம் பூண்டி, இராவத்தநல்லூர் கண்டிகை, மானாம்பதி கண்டிகை, எறையூர், மொளச்சூர், சோகண்டி, பன்னூர், கீழச்சேரி, சேந்தமங்கலம், பால்நல்லூர், பிஞ்சிவாக்கம், ஓட்டந்தாங்கல், வளர்புரம் போன்ற ஊர்கள். இதில் மானாம்பதி கண்டிகை உத்திரமேரூர் - வந்தவாசி சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

18 -ஆம் நூற்றாண்டில் கருவேப்பம்பூண்டி யை மையமாகக் கொண்டு சேசு சபை குருக்கள் தங்களது மறைபரப்புப் பணியை செய்து வந்தனர். இந்த வேளையில் சேசுசபையை தடைசெய்த பின்பு, பிரெஞ்சு குருக்கள் (MEP) இந்த மறைப்பணியை தொடர்ந்தனர். இவர்கள் பாண்டிச்சேரி யை மையமாகக் கொண்டு தென்மண்டலத்தில் தங்கள் பணியை சிறப்பாக தொடர்ந்தனர். இவர்கள் இராவத்தநல்லூரை பங்குதலமாகக் கொண்டு மானாம்பதி கண்டிகையிலும் சேவைகள் செய்து வந்தனர்.

அருட்பணி கபியே (Grabiellet) அவர்கள் தான் முதல் பங்குத்தந்தை. அக்காலத்தில் மாட்டு வண்டியில் தான் பயணம் செய்து பணிசெய்து வந்தார்.

இராவத்தநல்லூர் மற்றும் மானாம்பதி கண்டிகையிலும் ஒரே விதமாக ஆலயங்கள் 1892 ல் கட்டப்பட்டன.

அருட்பணி மரியநாதலு அவர்கள் பணிக்காலத்தில் இருளில் மூழ்கி இருந்த இவ்வூருக்கு மின்சாரத்தை கொண்டு வந்தார். ஆலயத்திற்கும் மின்விளக்குகள் அமைத்து அலங்கரித்தார். மேலும் அஞ்சல் வதசி இல்லாத குறையையும் தீர்த்து வைத்தார். இவ்வாறு தமது எட்டு ஆண்டுகள் பணிக்காலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். தொடர்ந்து வந்த அருட்தந்தை சவரிநாதர் அவர்கள் மிதிவண்டி யில் சென்று மக்களிடம் நற்செய்தி பணிசெய்தார்.

இம்மண்ணின் முதல் இறை அழைத்தலாக 18-12-1969 அன்று அருட்பணி அந்தையா அவர்களுக்கு, பல்லாரி மறை மாவட்ட ஆண்டகை மேதகு அம்புறோஸ் பாபைய்யா எதனபள்ளி அவர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது இம்மண்ணின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பொன்னாள். காரணம் இது முதற்கொண்டு 50 அருட்பணியாளர்களை மண்ணின் மைந்தர்கள் களாக இறைபணிக்கு தந்துள்ளது மானாம்பதி கண்டிகை இறை சமூகம்.

இறையழைத்தல்கள் இம் மண்ணில் அதிகமாக உருவாகக் காரணமாக இருந்தவர் அருட்பணி ஆரோக்கியநாதர் அவர்கள் தான் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த வேளையில் இவருக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டவர் பள்ளியகரம் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை ராஜா அவர்கள். இவர் அருட்தந்தை ஆரோக்கியநாதருக்கு வலக்கரமாக இருந்து பல்வேறு உதவிகள் செய்து இறையழைத்தல்கள் அதிகமாக உருவாக துணை புரிந்தார்.

ஆரம்பத்தில் புதுவை -கடலூர் உயர் மறை மாவட்டத்தில் இருந்த இப்பங்கு 1968 ல் சென்னை மயிலை உயர் மறை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது.

இங்குள்ள கத்தோலிக்க பள்ளிக்கூட ஆசிரியர்களின் பணி மிகவும் சிறப்பாக இருந்த காரணத்தால், இவ்வாசிரியர்கள் பங்குத்தந்தையுடன் இணைந்து அவருக்கு பக்கத்துணையாக இருந்ததால் தான் இறையழைத்தல்கள் அதிகமாக உருவாகக் காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

அருட்பணி P. சபாஸ்டின் அவர்கள் பணிக்காலத்தில் FSJ (Franciscan Sisters of St. Joseph) அருட்சகோதரிகளை ஆலயப்பணி, மருத்துவப்பணிகளுக்காக அழைத்து வந்தார். மேலும் பால்பண்ணை, Kolping வீட்டு வசதியையும் செய்து கொடுத்தார்.

இவரைத் தொடர்ந்து ஏழாண்டுகள் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி ஸ்டான்லி சபாஸ்டின் பணிக்காலத்தில் அனேகரை குருத்துவ அழைத்தலுக்காக அனுப்பினார்.

அருட்பணி சார்லஸ்குமார் காலத்தில் அன்பியங்கள் அமைத்து மக்களின் விசுவாசத்தை பல வகைகளில் கட்டியெழுப்பினார். பழுதடைந்த பழைய ஆலயத்தை இடித்து தற்போதுள்ள புதிய ஆலயத்தை மக்களின் ஒத்துழைப்புடன் கட்டினார்.

2001 -ஆம் ஆண்டில் செங்கை மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டு அருட்பணி R. A மரியநாயகம் அவர்கள் பங்குத்தந்தையாக பணிபுரிந்தார். வரவேற்பு வளையத்தையும், சகாய மாதா கெபியையும் கட்டினார்.

அருட்பணி லாரன்ஸ் ராஜேஷ் பணிக்காலத்தில் சிலுவைப் பாதையின் 14 நிலைகளையும், அன்னை தெரசா பூங்கா மற்றும் வனத்து சின்னப்பர் நகரில் குழந்தை இயேசுவுக்கு ஒரு சிற்றாலயமும் கட்டினார்.

அருட்பணி காணிக்கை ராஜ் அவர்கள் பணிக்காலத்தில் பல்வேறு சிறப்பான பணிகளை மேற்கொண்டார்.

ஆலய ஒலி அமைப்புகள் சரி செய்யப்பட்டது. சிலுவைப்பாதை நிலைகளுக்கு சுற்றிலும் கண்ணாடி கொண்டு பாதுகாப்பு செய்து அழகு படுத்தினார். பங்கிலுள்ள பள்ளியை சீர்செய்து பள்ளிக்கூடத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் அக்கறை காட்டினார்.

தண்டரை கூட்ரோடு, பகுதியில் ஆரோக்கிய அன்னைக்கு அழகான சிற்றாலயம் கட்டி விரிவுபடுத்தினார். குருக்கள் இல்லத்தின் அருகில் திருமண மண்டபம் கட்டினார். தமிழக ஆயர்களின் கூற்றுப்படி " *வீட்டுக்கொரு விவிலியம் நாளுக்கொரு அதிகாரம்* " என்பதனை மிகவும் தீவிரமாக்கி மக்களின் ஆன்மீக வாழ்வை பலப்படுத்தினார்.

இவரது பணிக்காலத்தில் தான் ஒவ்வொரு மாதமும் 08- ஆம் தேதி ஆரோக்கிய அன்னை கெபியிலும், 11- ஆம் தேதி லூர்து அன்னை கெபியிலும், 13 -ஆம் தேதி தூய அந்தோணியார் கெபியிலும் சிறப்பு திருப்பலிகள் நடத்தும் வழக்கத்தை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி ஜான்சன் விஜய் அவர்களின் பணிக்காலத்தில் 2017 -ஆம் ஆண்டு நூறடுத்த வெள்ளிவிழாவை (125 வது ஆண்டு) சிறப்பாக மக்களுடன் இணைந்து திட்டமிட்டு கொண்டாடினார். தற்போது இப்பங்கை மென்மேலும் வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிறார்.

மானாம்பதி கண்டிகையின் மண்ணின் மைந்தர்கள் :

1. Fr லூயிஸ்
2. Fr இராயப்பா
3. Fr மைக்கேல்
4. Fr அந்தைய்யா
5. Fr பெஞ்சமின் ஜோசப்
6. Fr தேவதாஸ்
7. Fr காணிக்கைராஜ்
8. Fr அருள்ராஜ்
9. Fr நோயல்
10. Fr ஆன்டனி
11. Fr விக்டர் இம்மானுவேல்
12. Fr அல்போன்ஸ்
13. Fr லூர்துராஜ்
14. Fr பிரான்சிஸ் சேவியர்
15. Fr அருள்ராஜ்
16. Fr அந்தோணிசாமி
17. Fr ஆரோக்கியராஜ்
18. Fr பவுலின்ராஜ்
19. Fr ஞானப்பிரகாசம்
20. Fr ஆரோக்கியசாமி
21. Fr ஜான்
22. Fr ஜான் பீட்டர்
23. Frஞானப்பிரகாசம்
24. Fr ஜான்போஸ்கோ
25. Fr அந்தோணிசாமி
26. Fr பீட்டர் ஜெரால்டு
27. Fr அந்தோணி ராஜ்
28. Fr அருள்ராஜ்
29. Fr லாரன்ஸ்
30. Fr ஆரோக்கியசாமி
31. Fr சகாயராஜ்
32. Fr அம்புறோஸ்
33. Fr லூர்துசாமி
34. Fr டேரி ஸ்டீபன்
35. Fr அமலோற்பவராஜ்
36. Fr ஆரோக்கியராஜ்
37. Fr இம்மானுவேல்
38. Fr சேவியர்
39. Fr பேட்ரிக்
40. Fr நிர்மல்ராஜ்
41. Fr இருதயராஜ்
42. Fr கிறிஸ்துராஜ் டோனி
43. Fr ஆரோக்கியராஜ்
44. Fr பவுல்ராஜ்
45. Fr பிரகாஷ் பிலமன்ராஜ்
46. Fr பாலாசுரேஷ்
47. Fr வினோத்குமார்
48. Fr ஜான்போஸ்கோ

மண்ணின் அருட்சகோதரிகள்:

1. Sis ரபேக்கா
2. Sis ரெக்ஸிலின்
3. Sis தெரேசா
4. Sis நட்சத்திரம்
5. Sis சுஜானா
6. Sis லூசியா
7. Sis அமலாமேரி
8. Sis ரோஸ் புஷ்பா
9. Sis எவாஞ்சலின்
10. Sis ஸ்டெல்லா மேரி
11. Sis அமலசெல்வி
12. Sis ஜெயசீலி
13. Sis அனஸ்தாசியா
14. Sis லூர்துமேரி
15. Sis விண்ணரசி மரிய ரெக்ஸிலின்
16. Sis மரியமதலேன்
17. Sis லில்லி மேரி
18. Sis அமலோற்பவமேரி

இவ்வாறாக பல அருட்பணியாளர்களையும், அருட்சகோதரிகளையும் இறைபணிக்காக தந்த மானாம்பதி கண்டிகை தலத்திருச்சபையை விசுவாசத்தின் விளைநிலம் என்று கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. 💐🍇💐

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. Fr I. L சோபிலட்
2. Fr M. சைரஸ்
3. Fr A. மிரண்டா
4. Fr E. மரியசாமி
5. Fr L. M அருள்
6. Fr G. G மாற்கு
7. Fr T. மரிய சவ்ரி
8. Fr T. மரியநாதலு
9. Fr R. சவுரிநாதன்
10. Fr D. ஆரோக்கியசாமி
11. Fr வல்லபநாதர்
12. Fr P. செபாஸ்டின்
13. Fr G. M ஜோசப்
14. Fr ஸ்டான்லி செபாஸ்டின்
15. Fr A. அமல்ராஜ்
16. Fr N. A சார்லஸ் குமார்
17. Fr C. V பால்ராஜ்
18. Fr R. A மரியநாயகம்
19. Fr M. லாரன்ஸ் ராஜேஷ்
20. Fr G. காணிக்கை ராஜ்
21. Fr P. L ஜான்சன் விஜய் (தற்போது...)

வழித்தடம் :

உத்திரமேரூர் - வந்தவாசி சாலையில் 10 கி.மீ தூரத்தில் மானாம்பதி கண்டிகை அமைந்துள்ளது. மேலும் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மானாம்பதி கூட்ரோட்டில் இருந்து 2 கி.மீ தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.