436 புனித சவேரியார் ஆலயம், புதுகுடியிருப்பு


புனித சவேரியார் ஆலயம்

இடம் : புதுகுடியிருப்பு, அச்சம்பாடு (PO), வள்ளியூர் Via, 627117.

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : வடக்கன்குளம்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அன்னம்மாள் ஆலயம், கிழவனேரி.

பங்குத்தந்தை : அருட்பணி. பிரான்சிஸ் வசந்தன்.

குடும்பங்கள் : 120
அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு.

வியாழன் திருப்பலி : மாலை 06.30 மணிக்கு.

மாதத்தின் முதல் வியாழன் மாலை 06.30 மணிக்கு ஜெபமாலை சப்பரபவனி, நவநாள், திருப்பலி.

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 09 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள்.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. கிறிஸ்டியான்
2. அருட்பணி. ஆன்றோ ஜஸ்டின்.

வழித்தடம் : வள்ளியூர் -

திருச்செந்தூர் சாலையில், வள்ளியூரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அற்புதர்நகர் உள்ளது. இங்கிருந்து இடது பக்கமாகத் திரும்பி 2 கி.மீ தூரத்தில் புதுகுடியிருப்பு அமைந்துள்ளது.

Location map : https://goo.gl/maps/afGmY34q1CaYLZrA8

வரலாறு :

பனை மரங்களும், புளிய மரங்களும் நிறைந்த அழகிய கிராமமான புதுகுடியிருப்பு ஊரில் வசிக்கும் மக்கள், பனை மரத்தொழில் மற்றும் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். கிழவனேரிக்கு மக்கள் திருப்பலிக்கு சென்று வந்தனர்.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் ஓடு வேயப்பட்ட சிறு ஆலயம் கட்டப்பட்டு, தினமும் மாலை வேளையில் மக்கள் ஜெபித்து வந்தார்கள்.

அருட்பணி. எட்வர்ட் கிறிஸ்டியன் (1950-1962) கிழவனேரி பங்குத்தந்தையாக இருந்த போது, புதுகுடியிருப்பு மக்கள் காளை மாடுகளை கிழவனேரிக்கு கொண்டு சென்று, வில்வண்டியில் பூட்டி, அருட்பணியாளரை திருப்பலிக்கு அழைத்து வருவார்கள். வருடத்திற்கு சில நாட்களுக்கு மட்டுமே இவ்வாறு திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. பிரான்சிஸ் தேவசகாயம் (1962-1967) அவர்கள், மிதிவண்டியில் வந்து அவ்வப்போது திருப்பலி நிறைவேற்றினார்கள்.

அருட்பணி. செங்கோல்மணி (1977-1982) அவர்களின் பணிக்காலத்தில், பழைய ஆலயத்தை இடித்து புதிய ஆலயத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டது. தொடர்ந்து பல்வேறு காரணங்களால் கட்டுமானப் பணிகளைத் தொடர இயலவில்லை.

அருட்பணி. சத்தியநேசன் (1982-1988) பணிக்காலத்தில், மக்களின் நன்கொடைகள் மற்றும் ஒத்துழைப்பு இவற்றுடன் மறை மாவட்ட உதவியையும் கொண்டு, பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் புதிய ஆலயம் கட்டப்பட்டு 04.10 1986 அன்று மேதகு ஆயர். அமலநாதர் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

1987 ஆம் ஆண்டு முதல், ஆகஸ்ட் மாதம் 09 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வழக்கம் இன்று வரை தொடர்கின்றது.

அருட்பணி. நெல்சன் பால்ராஜ் (1998-2003) அவர்களின் பணிக்காலத்தில் மக்களின் ஆன்மீக பயணத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட்டு மாதத்திற்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை இடைவெளி விட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

அருட்பணி. அமல் கோன்சால்வஸ் (2010-2015) பணிக்காலத்தில் புனித மிக்கேல் அதிதூதர் கெபி கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது. மேலும் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் வசந்தன் மற்றும் பங்குத்தந்தையின் வழி காட்டுதலுடன் ஆலய பொறுப்பாளர்.