213 திருக்குடும்ப ஆலயம், இலந்தவிளை


திருக்குடும்ப ஆலயம்

இடம் : இலந்தவிளை

மாவட்டம் : கன்னியாகுமரி

மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை

பங்குத்தந்தை : அருட்பணி K. ஜார்ஜ்

குடும்பங்கள் : 200
அன்பியங்கள் : 12

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு

செவ்வாய்க்கிழமை திருப்பலி : மாலை 05.30 மணிக்கு

வெள்ளி, சனிக்கிழமைகளில் திருப்பலி : காலை 06.30 மணிக்கு

திருவிழா : டிசம்பர் 28- ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

இலந்தவிளை ஆலயமானது தொடக்கத்தில் மாங்குழி பங்கின் கிளைப் பங்காக இருந்தது.

பின்னர் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக முரசங்கோடு பங்கின் கிளையாக இருந்தது.

தற்போதைய புதிய ஆலயமானது அருட்தந்தை ஸ்டாலின் அவர்களது பணிக்காலத்தில் பங்கு மக்களின் அயராத உழைப்பு மற்றும் நன்கொடைகளால் கட்டப்பட்டு, 2009 டிசம்பர் மாதத்தில் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

22-09-2017 ல் முரசங்கோடு பங்கிலிருந்து பிரிந்து தனிப் பங்காக உயர்ந்தது.

மண்ணின் இறை அழைத்தல்கள் :

அருட்தந்தை. ஜார்ஜ் யூஜின் ராஜ்

வேதியர். தாமஸ் அருளப்பன்

அருட்சகோதரி. டெல்பின்
அருட்சகோதரி. மங்களசாந்தி

ஆகியோரை இறைப்பணிக்காக தந்துள்ளது இலந்தவிளை திருக்குடும்ப ஆலய இறை சமூகம்.